search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபர்கள் மீது வழக்கு"

    • குளத்தில் குளிக்கச் சென்ற பட்டியல் இனத்தை சேர்ந்த பெண்களை இழிவாக பேசி தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    • புகாரின் அடிப்படையில் சம்மந்தப்பட்ட இருவர் மீதும் காவல்துறையினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள கூத்தங்குடி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதேவி (வயது 44). பட்டியல் இனத்தைச் சேர்ந்த இவர் அருகே உள்ள வைராண்டி கண்மாயில் வெளியூரில் இருந்து வந்திருந்த தனது உறவினர்கள் 3 பேருடன் குளிக்கச் சென்றுள்ளார்.

    அப்போது அங்கே வந்த மற்றொரு சமூகத்தை சேர்ந்த அய்யப்பன், முத்துராமன் ஆகியோர் இந்த குளத்தில் நீங்களெல்லாம் குளிக்கக் கூடாது என கூறியுள்ளனர். அதற்கு ஸ்ரீதேவி உள்ளிட்ட பெண்கள் ஏன் என்று கேட்டுள்ளனர். அதற்கு அய்யப்பன், முத்துராமன் இருவரும் சேர்ந்து அவர்களின் சாதிப் பெயரை சொல்லி இழிவாக பேசியதுடன் கட்டையால் தாக்கியுள்ளனர்.

    இதனால் கடுமையான அவமானம் அடைந்த அவர்கள் காயங்களுடன் அங்கிருந்து அழுதுகொண்டே புறப்பட்டு சென்றனர். பின்னர் ஸ்ரீதேவி உள்ளிட்டோர் நாகுடி போலீஸ் நிலையத்தில் தங்களுக்கு நேர்ந்த கொடுமை குறித்து புகார் தெரிவித்துள்ளனர்.

    புகாரின் அடிப்படையில் சம்மந்தப்பட்ட இருவர் மீதும் காவல்துறையினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதே புதுக்கோட்டை மாவட்டத்தில் அன்னவாசல் அருகே இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பட்டியல் இனத்தை சேர்ந்தவர்களுக்கு இரட்டை குவளை முறை, கோவிலுக்குள் அனுமதிக்காதது மற்றும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் மலம் கலந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    அந்த பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது குளத்தில் குளிக்கச் சென்ற பட்டியல் இனத்தை சேர்ந்த பெண்களை இழிவாக பேசி தாக்கிய சம்பவம் மீண்டும் பேசும் பொருளாக மாறியுள்ளது.

    • வடமதுரை அருகே மைனர் பெண்களை திருமணம் செய்த வாலிபர்கள் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
    • சமூகநலத்துறை அதிகாரிகளை நேரடியாக ஆய்வுக்கு அனுப்பி குழந்தை திருமணங்களை கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகில் உள்ள பி.கொசவபட்டியை சேர்ந்த காளியப்பன் மகன் சிவக்குமார்(22). கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். சுந்தராபுரியை சேர்ந்த கோபால் மகள் வெண்ணிலா(17). 10-ம் வகுப்பு படித்துவிட்டு வீட்டில் இருந்தார். உறவினர் என்பதால் அவருடன் நெருக்கமாக பழகிய நிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த சமூகநலத்துறை அதிகாரிகள் மைனர் பெண்ணை திருமணம் செய்த சிவக்குமார் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் அய்யலூர் அருகில் உள்ள பாலார்தோட்டம் பகுதியை சேர்ந்த தீபா(16) என்பவர் பிளஸ்-1 படித்து வந்தார். இவரை அதே ஊரை சேர்ந்த கோட்டைராஜா(25) என்பவர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அய்யலூர், குப்பம்பட்டி, பாலார்தோட்டம், கோம்பை மற்றும் வடமதுரை யூனியனுக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் அதிகளவு குழந்தை திருமணங்கள் நடந்து வருகின்றன.

    பெரும்பாலான திருமணத்தை கட்டப்பஞ்சாயத்து பேசி முடித்து விடுகின்றனர். எனவே மாவட்ட கலெக்டர், எஸ்.பி, இதுபோன்ற பிரச்சினையில் நேரடியாக தலையிட்டு சமூகநலத்துறை அதிகாரிகளை நேரடியாக ஆய்வுக்கு அனுப்பி குழந்தை திருமணங்களை கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 2 பேரும் மதுபாட்டிலால் மஞ்சுநாதனை தாக்கியுள்ளனர்.
    • காயமடைந்த மஞ்சுநாதன் பர்கூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகேயுள்ள காசிநாயனபள்ளி பகுதியை சேர்ந்தவர் மஞ்சுநாதன்(23). இவர் தனது நண்பர்களான ஓசூரை சேர்ந்த விஜய் (வயது22), சந்தோஷ் (24) ஆகியோருடன் மது அருந்த சென்றுள்ளார்.

    இந்த நிலையில் போதை தலைக்கேறிய நிலையில் மேலும் மது வாங்கி தரும்படி மஞ்சுநாதனிடம், விஜயும், சந்தோசும் தகராறு செய்துள்ளனர். ஆனால் மஞ்சுநாதன் மது வாங்கி தர மறுத்துள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த 2 பேரும் மதுபாட்டிலால் மஞ்சுநாதனை தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த மஞ்சுநாதன் பர்கூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளனர்.

    இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் கந்திகுப்பம் போலீசார் விஜய் மற்றும் சந்தோஷ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    ×