என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
வடமதுரை அருகே மைனர் பெண்களை திருமணம் செய்த வாலிபர்கள் மீது வழக்கு
- வடமதுரை அருகே மைனர் பெண்களை திருமணம் செய்த வாலிபர்கள் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
- சமூகநலத்துறை அதிகாரிகளை நேரடியாக ஆய்வுக்கு அனுப்பி குழந்தை திருமணங்களை கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகில் உள்ள பி.கொசவபட்டியை சேர்ந்த காளியப்பன் மகன் சிவக்குமார்(22). கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். சுந்தராபுரியை சேர்ந்த கோபால் மகள் வெண்ணிலா(17). 10-ம் வகுப்பு படித்துவிட்டு வீட்டில் இருந்தார். உறவினர் என்பதால் அவருடன் நெருக்கமாக பழகிய நிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சமூகநலத்துறை அதிகாரிகள் மைனர் பெண்ணை திருமணம் செய்த சிவக்குமார் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் அய்யலூர் அருகில் உள்ள பாலார்தோட்டம் பகுதியை சேர்ந்த தீபா(16) என்பவர் பிளஸ்-1 படித்து வந்தார். இவரை அதே ஊரை சேர்ந்த கோட்டைராஜா(25) என்பவர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அய்யலூர், குப்பம்பட்டி, பாலார்தோட்டம், கோம்பை மற்றும் வடமதுரை யூனியனுக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் அதிகளவு குழந்தை திருமணங்கள் நடந்து வருகின்றன.
பெரும்பாலான திருமணத்தை கட்டப்பஞ்சாயத்து பேசி முடித்து விடுகின்றனர். எனவே மாவட்ட கலெக்டர், எஸ்.பி, இதுபோன்ற பிரச்சினையில் நேரடியாக தலையிட்டு சமூகநலத்துறை அதிகாரிகளை நேரடியாக ஆய்வுக்கு அனுப்பி குழந்தை திருமணங்களை கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.






