search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்"

    • கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியதாக கணவர் தெரிவித்துள்ளார்.
    • வேறொரு நபருடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

    கணவன் மனைவி இடையில் சண்டை ஏற்படுவது வழக்கமான ஒன்று தான். இதற்காக கணவன், மனைவி கோபம் கொண்டு செய்யும் சம்பவங்கள் பல முறை செய்திகளாகி இருக்கின்றன. அந்த வகையில், ஆக்ராவில் வசித்த பெண் ஒருவர் கணவருடன் ஏற்பட்ட சண்டை காரணமாக வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

    சண்டயை தொடர்ந்து பெண் வைத்த வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் காவல் நிலையத்தில் புகாராக எழுந்து, வழக்கு பதியும் வரைசென்றுள்ளது. கணவருடன் சண்டையிட்ட மனைவி, அதன்பிறகு தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்-இல் "கணவரை கொலை செய்பவருக்கு ரூ. 50 ஆயிரம் வழங்கப்படும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    இந்த ஸ்டேட்டஸ் தொடர்பாக கணவன் ஆக்ராவின் பா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை ஏற்றுக் கொண்ட காவல் அதிகாரி ஷியாம் சிங் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கியுள்ளார். புகாரில் கடந்த 2023 டிசம்பரில் தனது மாமியார் தன்னை தொடர்பு கொண்டு கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியதாகவும் கணவர் தெரிவித்துள்ளார்.

    இந்த தம்பதிக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாத வாக்கில் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் முடிந்ததில் இருந்தே, கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக 2022 டிசம்பர் மாதம் மனைவி தனது கணவனை பிறந்து சென்று தாய் வீட்டிலேயே வசித்து வந்துள்ளார்.

    கணவன், மனைவி இடையே இந்தளவுக்கு சண்டை ஏற்பட காரணம் மனைவி தனது வீட்டின் அருகே வசிக்கும் வேறொரு நபருடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்தது என்றும் கூறப்படுகிறது. மேலும், மனைவியின் காதலன் தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக கணவன் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

    ×