search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வழிப்பறி வழக்குகள்"

    • 3 மர்ம நபர்கள், வீட்டு அலமாரியை திறந்து, பொருட்களை திருடிகொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்
    • 2 பேர் மீதும் பல்வேறு திருட்டு, வழிப்பறி வழக்குகள் உள்ளது தெரிவந்தது.

    புதுச்சேரி:

    காரைக்கால் சிங்காரவேலர் சாலை ஏ.எச்.எம் காம்ப்ளக்கில் வசிப்பவர் ஆரிபு மரைக்காயர். இவர், தனது வீட்டு அருகில் உள்ள பசும்பொன் நகரில் வசிக்கும் தங்கை சித்திபர்வீன் வீட்டுக்கு நேற்று முன்தினம் இரவு சென்று, மாடியில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, வீட்டின் கீழ் பகுதியில், ஏதோ சப்தம் கேட்டு, வீட்டின் கீழ் பகுதிக்கு சென்று பார்த்தபோது, அடையாளம் தெரியாத 3 மர்ம நபர்கள், வீட்டு அலமாரியை திறந்து, பொருட்களை திருடிகொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். ஆள் வருவதை பார்த்த 3 பேரும் வீட்டிலிருந்து தப்பியோடினர். அதில், உறவினர்கள் உதவியுடன் ஒரு நபர் மட்டும் கையும் களவுமாக பிடிபட்டான். பின்னர், அவரை, காரைக்கால் நகர காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்.இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் பிடிப்பட்ட நபரை பிடித்து விசாரித்தபோது, கேரளா மாநிலம் எர்ணாகுளம் மல்லுடுத்தி பகுதியை ச்சேர்ந்த சவுகத்(வயது23) என்றும், இவர் மீது பல்வேறு திருட்டு, வழிப்பறி வழக்குகள் உள்ளதென்று தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய நபர்கள் குறித்து விசாரித்தபோது, காரைக்கால் நகர் பகுதியை ச்சேர்ந்த நவாஸ்கான்(39), காரை க்கால் நிரவியை ச்சேர்ந்த அப்துல் அலீம்(40) என்றும், 2 பேர் மீதும் பல்வேறு திருட்டு, வழிப்பறி வழக்குகள் உள்ளது தெரிவந்தது. பின்னர், காரைக்கால் கலங்கரை விளக்கம் அருகே பதுங்கி இருந்த 2 பேரையும் நேற்று அதிகாலை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரிடம் இருந்து, திபர்வீன் வீட்டில் திருடிய 2 செல்போன் ரூ.2 ஆயிரம் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ×