search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வள்ளலார்"

    • திருப்பத்தூர் தர்மசாலாவில் வள்ளலார் பிறந்த தினவிழா நடந்தது.
    • வள்ளலார் ஜோதியை ஏற்றி வைத்ததுடன் அன்னதானத்தையும் தொடங்கி வைத்தார்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருட்பெருஞ்ஜோதி தர்மசாலாவில் வள்ளலாரின் 200-வது பிறந்த தினத்தை முன்னிட்டு கொடியேற்றப்பட்டு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. அதனையடுத்து திருப்பத்தூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டு மும்தாஜ் வள்ளலார் ஜோதியை ஏற்றி வைத்ததுடன் அன்னதானத்தையும் தொடங்கி வைத்தார். 1500 பேருக்கு மேல் உணவு வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ‌தர்மசாலா நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • வள்ளலார் 200-வது அவதார தின நாள் அன்னதானம் 8-ந் தேதி நடக்கிறது.
    • 9.30 மணிக்கு அகவல் பாராயணம் கூட்டு வழிபாடு நடக்கிறது.

    மதுரை

    மதுரை மதிச்சியம் சமரச சன்மார்க சத்திய பிரார்த்தனை மன்றம் சார்பில் 59-வது ஆண்டு விழா வடலூர் வள்ளலார் 200-வது அவதார தின விழா, அன்னதான விழா ஆகியவை நடைபெறுகிறது.

    நாளை (7-ந் தேதி)காலை 8 மணிக்கு திருவாசகம் முற்றோதல் நடக்கிறது. 8-ந் தேதி காலை 8 மணிக்கு அருட்ஜோதி விளக்கேற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது. கார்த்திகாயினி ஜோதியை ஏற்றி வைக்கிறார்.

    இதைத்தொடர்ந்து 9.30 மணிக்கு அகவல் பாராயணம் கூட்டு வழிபாடு நடக்கிறது.

    முன்னாள் சன்மார்க்க சங்க தலைவர் ஜவஹர்லால் மதுரை மாவட்ட சன்மார்க்க சங்க முன்னாள் தலைவர் ஹரிகோவிந்தன், மதுரை சன்மார்க்க சங்கம் சந்திரமோகன், மதுரை சூர்யா நகர் சன்மார்க்க சங்க ஜெகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றனர்.

    பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை 6 மணிக்கு திருப்புகழ், திருவருட்பா, இன்னிசை கச்சேரி நடக்கிறது.

    • நாகர்கோவில் வடசேரியில் உள்ள வள்ளலார் பேரவையில் நடைபெறுகிறது.
    • அருள் அன்னம் நடைபெறுகிறது.

    அருட்பிரகாச வள்ளலாரின் 200-வது அவதார தினவிழா வருகிற 2-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) நாகர்கோவில் வடசேரியில் உள்ள வள்ளலார் பேரவையில் காலை 7 மணிக்கு நடைபெறுகிறது. விழாவுக்கு மாநில வள்ளலார் பேரவை தலைவர் சுவாமி பத்மேந்திரா தலைமை தாங்குகிறார். பத்மநாபபுரம் ஆதிதிராவிட நலத்துறை தனி தாசில்தார் கோலப்பன் அருட்பெருஞ்ஜோதி மகா மந்திரம் உணர்ந்தோதல் நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார்.

    வள்ளலார் பேரவை பொதுச்செயலாளர் மகேஷ் வரவேற்புரையாற்றுகிறார். நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சிலதா, மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் வளர்மதி கேசவன், சுகாதார ஆய்வாளர் ஜாண், வள்ளலார் பேரவை துணை தலைவர் ரெகுராம் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். காலை 8 மணிக்கு வள்ளலார் உருவப்படத்தை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்து விழாவை தொடங்கி வைக்கிறார்.

    அருட்ஜோதியை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் ஏற்றுகிறார். திருவடி புகழ்ச்சி வேள்வியை வள்ளலார் முப்பெரும் விழா அரசு உயர்மட்ட குழு உறுப்பினர் உமாபதி தொடங்கி வைக்கிறார். காலை 8.30 மணிக்கு அருள் அன்னம் ஆகியவை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட வள்ளலார் பேரவையினர் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள்.

    • நான் கண் திறந்து விழித்துப் பார்த்தேன். என் வலது பக்கத்தில் 2அடி தொலைவில் அருட்ஜோதி இராமலிங்க வள்ளலார் சுத்த வெள்ளை ஆடையோடு தலையை அதே வெள்ளைத் துணியால் மூடிய நிலையில் அமர்திருந்தார்.
    • எனக்கு ஒரு படபடப்பு ஏற்பட்டது. அவருக்கு வணக்கம் செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் எழுந்து அவர் அடியை நாடினேன்.

    எனக்கு சுமார் 42 வயது இருக்கலாம். நான் தெருத் திண்ணையில் அடிக்கடி பல நாட்கள் படுத்துறங்குவது உண்டு.

    ஒரு நாள் பௌர்ணமி தினம் இரவு சுமார் மணி 12.30 இருக்கும். நல்ல நிலவு ஒளி. திண்ணையில் கால் பாகம் இருக்கிறது.

    நான் கண் திறந்து விழித்துப் பார்த்தேன். என் வலது பக்கத்தில் 2அடி தொலைவில் அருட்ஜோதி இராமலிங்க வள்ளலார் சுத்த வெள்ளை ஆடையோடு தலையை அதே வெள்ளைத் துணியால் மூடிய நிலையில் அமர்திருந்தார்.

    எனக்கு ஒரு படபடப்பு ஏற்பட்டது. அவருக்கு வணக்கம் செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் எழுந்து அவர் அடியை நாடினேன்.

    'நான் உன்னோடு பத்தாண்டு காலம் இருக்கப் போகிறேனப்பா. இதை இப்போதே யாரிடமும் சொல்லாதே' என்று கூறிய வார்த்தைகளைத் தெளிவாகக் கேட்டேன். உருவமும் பார்த்தேன். அருள்பாலித்த உரையும் கேட்டேன். உடனே காட்சி மறைந்துவிட்டது. உடம்பெல்லாம் புல்லரித்தது. மகிழ்ச்சி தாங்கமுடியவில்லை.

    என் மனைவியை எழுப்பிக் கூறி மகிழலாம் என்றால் பிறரிடம் அப்போதே கூறவும் கூடாது என்ற அருள் ஆணை.

    என்ன செய்வேன். இருதய பூரிப்போடு தவத்தில் உட்கார்ந்தேன். ஆனால் வள்ளலாரின் காட்சி நினைவு தவிர தவமும் வேறு செய்ய முடியவில்லை.

    அன்று முதல் பத்தாண்டு காலத்துக்குள் நான் எழுதிய கட்டுரைகள், கவிகள் அனைத்தும் தத்துவ மயம்.

    இராமலிங்க வள்ளலார் அவர் சொந்த உடல் மூலம் முடிக்காமல் விட்டு வைத்த செயல்களையெல்லாம் என் எளிய உடலை ஆட்கொண்டு முடித்தார் என்றே எண்ணுகிறேன்.

    (அருள்தந்தை வாழ்க்கை குறிப்பிலிருந்து..ஆர்.எஸ். மனோகரன்)

    ×