search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வள்ளம்"

    • வள்ளம் வந்து கொண்டிருக்கும்போது கடலில் திடீரென ராட்சத அலை எழும்பியது
    • வள்ளம் தூக்கி வீசப்பட்டு அருகில் உள்ள புல்லரி பாறையில் மோதி கவிழ்ந்தது

    கன்னியாகுமரி :

    குளச்சல் துறைமுகத்தெருவை சேர்ந்தவர் ஜோசப் (வயது 52). இவர் சொந்தமாக பைபர் வள்ளம் வைத்து மீன் பிடித்தொழில் செய்து வருகிறார்.

    இவரது வள்ளத்தில் அழிக்கால் மேற்கு தெருவை சேர்ந்த ஆன்சல் (63) மற்றும் குளச்சலை சேர்ந்த ஜோசப் பாத் (65), ஏரோணிமூஸ் (65), கோடிமுனையை சேர்ந்த சிலுவை பிச்சை (53), சைமன்காலனியை சேர்ந்த ஆண்ட்ரோஸ் (72) ஆகியோர் வழக்கம்போல் நேற்றிரவு மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.

    மீன் பிடித்துவிட்டு இன்று காலை இவர்களது வள்ளம் கரை திரும்பியது. குளச்சல் மீன் பிடித்துறைமுகத்திலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் வள்ளம் வந்து கொண்டிருக்கும்போது கடலில் திடீரென ராட்சத அலை எழும்பியது.

    இதில் வள்ளம் தூக்கி வீசப்பட்டு அருகில் உள்ள புல்லரி பாறையில் மோதி கவிழ்ந்தது. இந்த சம்பவத்தில் மீனவர்கள் உயிரை காப் பாற்றிக் கொள்ள கடலில் தத்தளித்தனர். அப்போது அங்கு மீன் பிடிக்க சென்ற மற்றொரு வள்ளம் மீனவர்கள் அவர்களை மீட்டு கரை சேர்த்தனர்.

    பின்னர் மீனவர்கள் மற்றொரு வள்ளத்தில் சென்று கவிந்த வள்ளத்தை மீட்டனர். இதில் வள்ளம் சேதமடைந்தது. வள்ளத்திலி ருந்த மீன்கள் கடலில் விழுந் தது. ஆனால் அழிக்கால் மீனவர் ஆன்சல் கரை சேரவில்லை. அவர் கடலில் மாயமாகி உள்ளதாக உடன் சென்ற மீனவர்கள் தெரிவித்தனர். தகவலறிந்த குளச்சல் மரைன் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ததேயூஸ் குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி னர். தொடர்ந்து முத்துக்கு ளிக்கும் மீனவர்கள் மாய மான மீனவர் ஆன்சலை தேடி வந்தனர். இந்த நிலையில் கொட்டில்பாடு கடல் பகுதியில் பெரிய விளையைச் சேர்ந்த மீனவர் வீசிய வலையில் ஆன்சல் உடல் சிக்கியது. மரைன் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பலியான ஆன்சலுக்கு பெல்லாம்மா (55) என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

    • கடலில் விழுந்து தத்தளித்தவர்களை சக மீனவர்கள் மீட்டனர்.
    • கவிழ்ந்த வள்ளத்தின் என்ஜின் மற்றும் மீன்கள் கடலில் மூழ்கியதாக மீனவர்கள் வேதனை

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கோவளத்தில் இருந்து இன்று அதிகாலை ஒரு வள்ளத்தில் 4 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.

    அவர்கள் மீன் பிடித்து விட்டு கரைக்கு திரும்பிய போது, எதிர்பாராதவிதமாக ராட்சத அலையில் சிக்கி வள்ளம் கவிழ்ந்தது. அதில் இருந்த 4 மீனவர்களும் கடலில் விழுந்து தத்தளித்தனர். அவர்களை சக மீனவர்கள் மீட்டனர்.

    இருப்பினும் கவிழ்ந்த வள்ளத்தின் என்ஜின் மற்றும் மீன்கள் கடலில் மூழ்கியதாக மீனவர்கள் வேதனை தெரிவித்தனர்.

    • 4 மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
    • கோவளம் தூண்டில் வளைவு பாலத்தை உடனடியாக சீரமைத்து அதற்கு பதிலாக புதிய தூண்டில் வளைவு பாலம் அமைக்கும் பணியை தொடங்க வேண்டும்

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி அருகே உள்ள கோவளத்தை சேர்ந்த 4 மீனவர்கள் ஒரு வள்ளத்தில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.

    அப்போது கடலில் பயங்கர சூறாவளி காற்றுடன் கடல் கொந்தளிப்பாக காணப்பட்டது.ஆக்ரோஷமாக எழும்பி வந்த ராட்சத அலை ஒன்று இவர்களது வள்ளத்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில் அந்த வள்ளம் கவழ்ந்தது.

    அதில் இருந்த 4 மீனவர்களும் கடலில் விழுந்து தத்தளித்துக் கொண்டிருந்ததனர். அவர்கள் "காப்பாற்றுங்கள்" "காப்பாற்றுங்கள்" என்று அலறினார்கள். அவர்களது அலறல் சத்தம் கேட்டு கரையில் நின்ற மற்ற மீனவர்கள் கடலில் நீந்தி சென்று 4 மீனவர்களையும் அவர்கள் சென்ற வள்ளத்தையும் பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

    கரைக்கு மீட்டு கொண்டு வந்த 4 மீனவர்கள் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். கோவளம் கடற்கரையில் அமைந்துள்ள தூண்டில் வளைவுபாலம் உடைந்து கிடப்பதால் தான் கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் வள்ளங்கள் அடிக்கடி ராட்சத அலையில் சிக்கி கவிழ்வதாக மீனவர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.

    எனவே உடைந்து சேதம் அடைந்த கோவளம் தூண்டில் வளைவு பாலத்தை உடனடியாக சீரமைத்து அதற்கு பதிலாக புதிய தூண்டில் வளைவு பாலம் அமைக்கும் பணியை தொடங்க வேண்டும் என்று கோவளம் கடற்கரை கிராம மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

    ×