கன்னியாகுமரி கோவளத்தில் வள்ளம் கவிழ்ந்ததால் மீனவர்கள் கடலில் தத்தளிப்பு

கடலில் விழுந்து தத்தளித்தவர்களை சக மீனவர்கள் மீட்டனர்.கவிழ்ந்த வள்ளத்தின் என்ஜின் மற்றும் மீன்கள் கடலில் மூழ்கியதாக மீனவர்கள் வேதனை
கன்னியாகுமரி கோவளத்தில் வள்ளம் கவிழ்ந்ததால் மீனவர்கள் கடலில் தத்தளிப்பு
Published on

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி கோவளத்தில் இருந்து இன்று அதிகாலை ஒரு வள்ளத்தில் 4 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.

அவர்கள் மீன் பிடித்து விட்டு கரைக்கு திரும்பிய போது, எதிர்பாராதவிதமாக ராட்சத அலையில் சிக்கி வள்ளம் கவிழ்ந்தது. அதில் இருந்த 4 மீனவர்களும் கடலில் விழுந்து தத்தளித்தனர். அவர்களை சக மீனவர்கள் மீட்டனர்.

இருப்பினும் கவிழ்ந்த வள்ளத்தின் என்ஜின் மற்றும் மீன்கள் கடலில் மூழ்கியதாக மீனவர்கள் வேதனை தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com