search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வளர்பிறை பிரதோஷம்"

    • அனைத்து சுவாமிகளுக்கும் 21 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • வழிபாட்டு குழுவினர் கோவில்களில் தேவாரம் பக்தி பஜனை பாடல்கள் பாடினர்.

    சிவகிரி:

    தென்காசி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சிவகிரி பழைய போலீஸ் நிலையம் எதிர்புறம் அமைந்துள்ள திருநீலகண்ட சுவாமி சமேத மீனாட்சி அம்மன் கோவிலில் நேற்று மாலை வளர்பிறை பிரதோஷம் நடைபெற்றது.

    அபிஷேகம்

    முன்னதாக கோவிலில் உள்ள அனைத்து சுவாமிகளுக்கும் பால், தயிர், நெய், சந்தனம், இளநீர் போன்ற 21 வகையான நறுமணப் பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.தொடர்ந்து வழிபாட்டு குழுவினர் சரஸ்வதி, தேவி, மீனா, குழந்தை நாச்சியார் ஆகியோர் தேவாரம் பக்தி பஜனை பாடல்கள் பாடினர்.

    கோவிலில் பிரதோஷ நாயகர், சுவாமி-அம்மன் ஆகியோர் அலங்க ரிக்கப்பட்டு சப்பரத்தில் எழுந்தருளி கோவில் உள்புற பிரகாரத்தில் பெண்கள் தேவாரப் பாடல்கள் பாடிக் கொண்டே முன்னே செல்ல சப்பரம் பின்னாலேயே வலம் வந்தது. நந்தீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பக்தர்களுக்கு பஞ்சாமிர்தம், பயறு, பால் போன்றவை பிரசாதங்களாக வழங்கப்பட்டன.

    சிவகிரி

    இதனைப் போன்று சிவகிரி கூடாரப்பாறை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், கருணையானந்தா சித்தர் சுவாமிகள் கோவில், அழுக்கு சித்தர் சுவாமிகள் கோவில், விஸ்வநாதபேரி அங்காள ஈஸ்வரி கோவில், தென்மலையில் அமைந்துள்ள திரிபுர நாதேஸ்வரர் - சிவபரிபூரணி அம்மன் கோவில்,

    சொக்க நாதன்புத்தூர் தவநந்தி கண்டேஸ்வரர் கோவில், வாசுதேவநல்லூர் அருகே தாருகாபுரம் மத்தியஸ்தநாதர் கோவில், வாசுதேவநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோவில், ராமநாதபுரத்தில் சுயம்பு லிங்க சுவாமி கோவில், ராமநாத சுவாமிகள் சித்தர் கோவில் போன்ற கோவில்களில் வழிபாட்டு குழுவினர் தேவாரம் பக்தி பஜனை பாடல்கள் பாடினர்.

    தொடர்ந்து வளர்பிறை பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு புளியோதரை, எலுமிச்சை சாதம், பஞ்சாமிர்தம் போன்றவை பிரசாதமாக வழங்கப்பட்டன.

    ×