search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வளங்களை"

    • சப்-கலெக்டர் அதிரடி நடவடிக்கை
    • 100-க்கும் மேற்பட்ட லாரிகள், கனிம வளங்களை வாகனங்களில் கேரளாவிற்கு கடத்தி செல்வது தொடர் கதையாக நடந்து வருகிறது.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் இருந்தும் வெளிமாவட்டங்களில் இருந்தும் 100-க்கும் மேற்பட்ட லாரிகள், கனிம வளங்களை வாகனங்களில் கேரளாவிற்கு கடத்தி செல்வது தொடர் கதையாக நடந்து வருகிறது. இரவு பகலாக சாலையில் லாரிகள் செல்வதால் கடும் போக்கு வரத்து நெருக்கடி ஏற்படுவ தோடு தொடர் விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது.

    இதனை தடுக்க மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதிக பாரம் ஏற்றி செல்லும் வாக னங்களை பறிமுதல் செய்து வாகனத்தின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யவும் உத்தரவு பிறப்பித்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை சப்-கலெக்டர் கவுசிக் மற்றும் வட்ட வழங்கல் அதிகாரி ராஜசேகர் கொண்ட குழு, படந்தாலுமூடு சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டது. அப்போது அந்த வழியாக வந்த 5 வாகனங்களை நிறுத்தினர்.

    அதிகாரிகளை கண்டதும் வாகனங்களை நிறுத்திவிட்டு, டிரைவர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதனை தொடர்ந்து அதிகாரிகள் குழு வாகனங்களை சோ தனை செய்தது. அப்போது அந்த வாகனங்களில் அனுமதி இல்லாமல் கனிம வளங்களை கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு களியக்காவிளை போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

    இந்த கனிமவளங்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது? அதன் உரிமையாளர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×