search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வலுவடைந்தது"

    தற்போது உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்தம் காரணமாக 12-ந்தேதி முதல் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளதால் முன் எச்சரிக்கை ஏற்பாடுகள் எடுக்கப்பட்டுள்ளன. #Rain #Coastalarea
    சென்னை:

    தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை நேற்று உருவானது.

    அந்த காற்றழுத்த தாழ்வு நிலை வங்கக்கடலின் தென்கிழக்கு பகுதியில் நேற்று மாலை நிலைகொண்டு இருந்தது.

    இந்த காற்றழுத்த தாழ்வு நிலை குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தினர் தொடர்ந்து கண்காணித்து தகவலை வெளியிட்டு வருகிறார்கள். இன்று காலை வெளியிட்ட தகவல்படி குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது.

    சற்று வலு அதிகரித்து இருப்பதால் அந்த தாழ்வு மண்டலம் தற்போது வடக்கு மற்றும் வடமேற்கு திசை நோக்கி நகர தொடங்கி இருக்கிறது. இன்னும் 48 மணி நேரத்தில் அது அந்தமானை கடந்து வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மேலும் வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை மறுநாள் அது புயல் சின்னமாக மாறும் என்று கணித்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக புயல் சின்னம் தமிழக கடலோரத்தை நெருங்கி வர வாய்ப்பு உள்ளது.

    12-ந்தேதிதான் புயல் சின்னத்தின் நகர்வை பொறுத்து அது கடலோரத்தில் எங்கு கரையை கடக்கும் என்பது தெரியவரும். தற்போதைய கணிப்பின்படி வட தமிழ்நாட்டில் அந்த புயல் கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையத்தினர் கருதுகிறார்கள்.

    இந்திய பெருங்கடலில் உருவாகும் புயலுக்கு ஆசிய நாடுகள் பெயர் சூட்டி வருகின்றன. அதன்படி இந்த புயலுக்கு “பெய்ட்டி” என்று பெயர் சூட்டப்படும். இந்த பெயரை தாய்லாந்து நாடு வழங்கி உள்ளது.



    சமீபத்தில்தான் கஜா புயல் டெல்டா மாவட்டங்களை உருக்குலைத்து விட்டு சென்றுள்ளது. இந்த நிலையில் பெய்ட்டியும் வந்து வட தமிழ்நாட்டில் பெயர்த்து எடுத்து விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

    தற்போதைய சூழ்நிலையில் இன்னும் 2 நாட்களுக்கு தமிழ்நாடு முழுவதும் வறண்ட வானிலையே நிலவும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. என்றாலும் 2 நாட்களுக்கு பிறகு அதாவது 12-ந்தேதி முதல் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய தொடங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    12-ந்தேதி முதல் 5 நாட்களுக்கு தமிழ்நாடு முழுவதும் கணிசமான அளவுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையத்தினர் தெரிவித்துள்ளனர். எனவே மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

    தற்போது உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்தம் காரணமாக 12-ந்தேதி முதல் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்து இருப்பதால் முன் எச்சரிக்கை ஏற்பாடுகள் எடுக்கப்பட்டுள்ளன. சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், சிவகங்கை, ராமநாதபுரம், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

    பெய்ட்டி புயல் சென்னை அருகே கரையை கடக்கக்கூடும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால் 12-ந்தேதி புயல் சின்னம் உருவான பிறகே அதன் நகர்வு திசையை துல்லியமாக கணிக்க முடியும். எனவே தமிழக கடலோரத்தில் புதிய புயல் எந்த பக்கம் தாவும் என்பது 12-ந்தேதி தெரிய வரும். #Rain #Coastalarea

    ×