search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வர்ணம் பூசும் பணி"

    • நவீன எந்திரம் மூலம் வர்ணம் பூசும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
    • 60-க்கும் மேற்பட்ட ஊழியர் கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    ராமேசுவரம்

    ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்-ராமேசுவரம் தீவுப்பகுதியை இணைக்கும் வகையில் பாம்பன் கடலில் 2,345 மீட்டர் நீளத்திற்கு தேசிய நெடுஞ்சாலை பேருந்து பாலம் அமைக்கப் பட்டுள்ளது.

    கடலின் அழகை ரசித்த வாறு தின மும் ஆயிரக்க ணக்கான சுற்றுலா பயணி கள் கார், வேன், பேருந்து உள்ளிட்ட வாகனங்களில் பயணித்து அனுபவித்து வருகிறார்கள்.

    5 ஆண்டுகளுக்கு ஒரு முறை பாம்பன் பேருந்து பாலம் பரமரிப்பு பணி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் ரூ.11 கோடி மதிப்பீட்டில் பாம்பன் பேருந்து பாலத்திற்கு ரசா யன வர்ணம் பூசுவது, இரு புறம் உள்ள நடைமேடை இணைப்புகள் சீரமைப்பு, சேதமடைந்த தடுப்பு சுவர் கள் சீரமைப்பு உள்ளிட்ட பணிகள் கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கியது.

    இதில் புயல், மழை மற்றும் இயற்கை இடர்பாடு கள் தவிர்த்து மற்ற நாட்க ளில் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றது. தற்போது செப்டம்பர் மாத இறுதிக்குள் பணிகளை முடிக்க வேண் டும் என்பதால் நவீன எந்தி ரம் மூலம் ரசாயன வர்ணம் பூசும் பணி தீவிரமாக நடை பெற்று வருகிறது. இதில், 60-க்கும் மேற்பட்ட ஊழியர் கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    • விழா கமிட்டி மற்றும் இந்து எழுச்சி முன்னணி, இந்து சமுதாய பொறுப்பாளர்கள் சார்பில் விநாயகர் சிலைக்கு பூஜை செய்து வர்ணம் பூசும் பணி நடைபெற்று வருகிறது.
    • சுமார் 3 அடி முதல் 13 அடி வரை 410 சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    சின்னமனூர்:

    செப்டம்பர் மாதத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. 39 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா கமிட்டி மற்றும் இந்து எழுச்சி முன்னணி, இந்து சமுதாய பொறுப்பாளர்கள் சார்பில் விநாயகர் சிலைக்கு பூஜை செய்து வர்ணம் பூசும் பணி நடைபெற்று வருகிறது.

    சுமார் 3 அடி முதல் 13 அடி வரை 410 சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனை சின்னமனூர் நகர் ஒன்றிய கமிட்டி பொறுப்பாளர்கள் பார்வையிட்டனர்.

    ×