search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வடமாநில தொழிலாளர்கள் தாக்குதல்"

    • கோவை, திருப்பூர் மாநிலங்களில் வட மாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக வதந்தி.
    • பீகார், ஜார்க்கண்ட் மாநில சட்டசபையில் பிரச்சினை எதிரொலிக்க, குழு அமைத்து விசாரணை

    கோவை, திருப்பூர் உள்ளிட்ட தமிழகம் முழுவரும் லட்சக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.

    பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் வேலைப் பார்த்து வருகிறார்கள். கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் இருமாநில தொழிலாளர்கள் மீது கடுமையாக தாக்கப்பட்டதாக வீடியோக்கள் மற்றும் செய்திகள் சமூக வலைதளங்களில் பரவின.

    இதனால் பாதுகாப்பு அச்சம் காரணமாக ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக சொந்த மாநிலம் திரும்பினர். இது பாதுகாப்பு தொடர்பான பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டசபையில் எதிரொலித்தது.

    இதனால் காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் பாதுகாப்பு குறித்து உறுதியளித்தார்.

    என்றபோதிலும் பீகார் அரசு இதுகுறித்து விசாரணை நடத்த ஒரு குழுவை அமைத்தது. இந்த குழு தமிழகம் வந்து பீகார் மாநில தொழிலாளர்களிடம் விசாரணை நடத்தியது. அப்போது அவர்கள் சந்தோசமாக இருக்கிறோம். எந்த அச்சுறுத்தலும் இல்லை எனத் தெரிவித்தனர். அதன்பின் இந்த விவாகரம் முடிவடைந்தது.

    கடந்த 2012-ம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் வடகிழக்கு மாநிலத்தினர் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக வதந்தி கிளம்பியது. அப்போது ஆயிரக்கணக்கான மக்கள் மைசூரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து கூட்டம் கூட்டமாக வெளியேறினர். அதன்பின் தென்மாநிலங்களில் இருந்து கூட்டம் கூட்டமாக பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தினர் சென்றனர்.

    • மணிஷ் காஷ்யப்பை கைது செய்து பீகார் சிறையில் அடைத்தனர்.
    • மணிஷ் காஷ்யப் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மதுரை:

    தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகவும், அவர்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை என்பது போலவும் சித்தரிக்கப்பட்ட வீடியோ சில மாதங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் பரவியது.

    இந்த வீடியோ தமிழகத்தில் வாழ்ந்து வரும் வட மாநிலத்தினர் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த தகவல் உண்மை இல்லை என்றும், தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்களுக்கு போதிய பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது எனவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

    மேலும் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்று போலி வீடியோ வெளியானது தொடர்பாக விசாரணை நடத்தவும் அவர் உத்தரவிட்டார். அதன்படி போலீசார் விசாரணை நடத்தினர்.

    அதில் பீகார் மாநிலத்தை சேர்ந்த 'யூ-டியூபர்' மணிஷ் காஷ்யப் (வயது35) என்பவர் தான் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற போலி வீடியோவை வெளியிட்டது தெரிய வந்தது. போலி வீடியோ வெளியிட்டது தொடர்பாக மணிஷ் காஷ்யப் உள்பட 4 பேர் மீது பீகார் போலீசார் வழக்கு பதிந்தனர்.

    மணிஷ் காஷ்யப்பை கைது செய்து பீகார் சிறையில் அடைத்தனர். போலி வீடியோ பரப்பியது தொடர்பாக 'யூ-டியூபர்' மணிஷ் காஷ்யப் மீது மதுரை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் பெருங்குடியை சேர்ந்த ஜெகதீசன் என்பவர் புகார் கொடுத்தார். அதன்பேரில் மணிஷ் காஷ்யப் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்தனர்.

    இதனை தொடர்ந்து பீகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மணிஷ் காஷ்யப் தமிழகத்திற்கு அழைத்து வரப்பட்டார். மதுரை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் பதிந்த வழக்கு தொடர்பாக கடந்த 30-ந் தேதி மதுரை மாவட்ட முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நீதிபதி டீலாபானு முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

    அவரிடம் 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க போலீசார் அனுமதி கேட்டனர். அதன்பேரில் 3 நாள் போலீஸ் காவலுக்கு நீதிபதி அனுமதி கொடுத்தார். இதையடுத்து மணிஷ் காஷ்யப்பை போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    போலீஸ் காவல் முடிந்த நிலையில் மதுரை கோர்ட்டில் நேற்று மீண்டும் ஆஜர்ப்படுத்தப்பட்டார். அப்போது விசாரணையில் மணிஷ் காஷ்யப் தகவல் எதுவும் சரியாக தெரிவிக்கவில்லை என்பதால், மேலும் 7 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என போலீஸ் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

    மணிஷ் காஷ்யப் தரப்பில் போலீஸ் விசாரணையில் மனித உரிமை மீறப்படுவதால், மீண்டும் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கக்கூடாது என்று கேட்டுக்கொண்டனர். இதனை தொடர்ந்து மணிஷ் காஷ்யப்பை வருகிற 19-ந் தேதி வரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி டீலாபானு உத்தரவிட்டார். இதையடுத்து அவர் மதுரை மத்திய ஜெயிலில் மீண்டும் அடைக்கப்பட்டார்.

    இந்த நிலையில் மணிஷ் காஷ்யப் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவ பிரசாத் இன்று பிறப்பித்தார்.

    தேசிய பாதுகாப்பு சட்டத்தில் மணிஷ் காஷ்யப் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதற்கான உத்தரவு மதுரை மத்திய ஜெயிலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    ×