search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வசிஷ்ட"

    • கோட்டை தரைபாலம் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.
    • செல்பி எடுக்க கோட்டாட்சியர் தடை.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கருமந்துறை, பெத்தநாயக்கன்பாளையம் தும்பல், இடையப்பட்டி, கல்லாறு, ராம நாயக்கன்பாளையம், ஏத்தாப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு கன மழை கொட்டி தீர்த்தது. இந்த மழையின் காரணமாக வசிஷ்ட நதியில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இதனால் ஆத்தூர் நகர பகுதியில் இருந்து முல்லைவாடி, கோட்டை, துலுக்கனூர், கல்லாநத்தம், வடக்கு காடு, தென்னங்குடி பாளையம் உள்ளிட்ட 20 கிராமங்களுக்கு செல்லும் பிரதான கோட்டை தரைபாலம் காட்டாற்று வெள்ளத்தில் நேற்று இரவு அடித்துச் செல்லப்பட்டது.இதனால் இந்த பகுதிகளுக்கு செல்லும் மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர்.

    மேலும் விநாயபுரத்தில் உள்ள தடுப்பணையில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் அருகில் உள்ள வீடுகளுக்கு தண்ணீர் செல்லாமல் இருக்க நரசிங்கபுரம் நகர மன்ற தலைவர் அலெக்ஸ் மற்றும் நகர மன்ற உறுப்பினர் அங்கு வந்து தண்ணீரை ஊருக்குள் செல்ல விடாமல் தடுப்பதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். பொதுமக்கள் குளிக்கவோ, செல்பி எடுக்கவோ கூடாது என விநாயகபுரம் தடுப்பணையின் அருகே காவல்துறையினர் சார்பில் பாதுகாப்பு வைக்கப்பட்டுள்ளது.

    ஆத்தூர் கோட்டாட்சியர் சரண்யா கூறியதாவது:- கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் செல்பி எடுப்பது, போட்டோ எடுப்பது, நீர்நிலை அருகே நின்று வேடிக்கை பார்ப்பது போன்றவை தடை செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் உயிரை பாதுகாக்க அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்

    ×