search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லோடு ஆட்டோ திருட்டு"

    • மது போதையில் இருந்ததால் அவர் முத்தையாபுரத்தில் இறங்காமல் இருந்து விட்டாராம். பின்னர் அவரை பஸ்சின் நடத்துனர் ஆறுமுகநேரியில் இறக்கி விட்டுள்ளார்.
    • முத்தையாபுரத்திற்கு சென்று விட நினைத்த அவர் ஒவ்வொரு லோடு ஆட்டோவில் ஏறி அதனை எடுத்துச் செல்ல முயன்றுள்ளார்.

    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பாரதிநகரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 38). இவருக்கு சொந்தமாக லோடு ஆட்டோ உள்ளது.

    சம்பவத்தன்று அதிகாலையில் இவர் தனது லோடு ஆட்டோவை மெயின் பஜார் ஆட்டோ நிறுத்தம் அருகே நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் திரும்பி வந்து பார்க்கும்போது அங்கு அவரது லோடு ஆட்டோ காணாமல் போயிருந்தது.

    உடனடியாக அவர் இதுபற்றி ஆறுமுகநேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளையும் ஆய்வு செய்தனர்.

    இதன் மூலம் லோடு ஆட்டோவை திருடி ஓட்டிச் சென்ற நபர் முத்தையாபுரம் தோப்புதெருவை சேர்ந்த சூரியபிரகாஷ் (23) என்பது தெரியவந்தது. அவரை பிடித்து போலீசார் விசாரித்த போது திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.

    சூரியபிரகாஷின் சொந்த ஊர் அருப்புக்கோட்டை ஆகும். இவர் முத்தையாபுரத்தில் தங்கி இருந்து கூலி தொழில் செய்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு தனது சொந்த ஊருக்கு சென்ற இவர் சம்பவத்தன்று இரவு முத்தையாபுரத்திற்கு பஸ்சில் திரும்பி வந்து கொண்டிருந்தார்.

    அப்போது மது போதையில் இருந்ததால் அவர் முத்தையாபுரத்தில் இறங்காமல் இருந்து விட்டாராம். பின்னர் அவரை பஸ்சின் நடத்துனர் ஆறுமுகநேரியில் இறக்கி விட்டுள்ளார். அங்கிருந்து மீண்டும் முத்தையாபுரத்திற்கு செல்ல சூரியபிரகாஷிடம் பணம் இல்லாத நிலையில் அவர் திணறியுள்ளார். அப்போது அருகில் சில லோடு ஆட்டோக்கள் நின்று உள்ளன. இதில் ஒன்றை திருடி முத்தையாபுரத்திற்கு சென்று விட நினைத்த அவர் ஒவ்வொரு லோடு ஆட்டோவில் ஏறி அதனை எடுத்துச் செல்ல முயன்றுள்ளார். ஆனால் சாவி இல்லாததால் அவரது முயற்சி பலிக்கவில்லை.

    இதனால் லோடு ஆட்டோவின் வயர்களை வெட்டி இணைத்து முயன்றதால் மற்றொரு லோடு ஆட்டோ ஸ்டார்ட் ஆகி உள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்த சூரியபிரகாஷ் உற்சாகமாக அந்த ஆட்டோவை முத்தையாபுரத்திற்கு ஓட்டிச் சென்றுள்ளார். அவரை கைது செய்த போலீசார் திருச்செந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து லோடு ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.

    ×