search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெயில்வே வருமானம்"

    • மதுரை கோட்ட ரெயில்வே வருமானம் 80 சதவீதம் அதிகரித்துள்ளது.
    • மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் தெரிவித்துள்ளது.

    மதுரை

    மதுரை ரெயில்வே கோட்டத்தின் மொத்த வருமானம் கடந்த ஏப்ரல் முதல் டிசம்பர் மாதம் வரை 80.67 சதவீதம் அதிகரித்துள்ளது.

    கடந்த ஆண்டு இதே காலத்தில் பயணிகள் வருமானம் ரூ.280.80 கோடியாக இருந்தது. இந்த ஆண்டு 78 சதவீதம் அதிகரித்து ரூ.502.05 கோடி வருமானம் ஈட்டப் பட்டுள்ளது. அதேபோல கடந்த ஆண்டு ரூ.191.44 கோடியாக இருந்த சரக்கு போக்குவரத்து வருமானம் 27 சதவீதம் அதிகரித்து, நடப்பாண்டில் ரூ.242.60 கோடியாக உயர்ந்துள்ளது.

    மதுரை கோட்ட ரெயில்களில் கடந்த ஆண்டு 9.2 மில்லியன் பேர் பயணம் செய்தனர். இந்த ஆண்டு அதன் எண்ணிக்கை 24.1 மில்லியனாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு பயணச்சீட்டு இன்றி பயணம் செய்தவர்களிடம் ரூ.654.41 லட்சம் வசூலிக்கப்பட்டது. நடப்பாண்டில் பயணச்சீட்டு இல்லாத, டிக்கெட் இன்றி வர்த்தக சரக்குகள் கொண்டு சென்ற, ரெயிலில் புகை பிடித்த, ரெயில் நிலையத்தை அசுத்தப்படுத்தி யவர்களிடம் இருந்து ரூ.834.12 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது. பயணிகள் ரெயில்களில் 21 ஆயிரத்து 358 டன் சரக்குகளும், சரக்கு ரெயில்களில் 2.20 மில்லியன் டன் சரக்குகளும் கையாளப்பட்டு உள்ளன.

    மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் தெரிவித்துள்ளது.

    ×