search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெயில் மோதி பலி"

    • சென்னையில் இருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த விரைவு ரெயில் அவர் மீது மோதியது.
    • இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள நரசிங்கபுரம் தமிழரசன் நகரை சேர்ந்தவர் மணி மகன் சதீஷ்(வயது 26). இவர் அதிகாலையில் இயற்கை உபாதையை கழிக்க அப்பகுதியில் உள்ள தண்டவாளத்தை கடந்து சென்றார். அப்போது அந்த வழியாக சென்னையில் இருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த விரைவு ரெயில் அவர் மீது மோதியது.

    இதில் 500 மீட்டர் தூரத்தில் தூக்கி வீசப்பட்ட சதீஷ் உடல் சிதறிய நிலையில் சம்பவ இடத்தில் உயிரிழந்தார், தகவல் அறிந்த ஆத்தூர் ரெயில்வே மற்றும் நகர போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பின்னர். இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர், அதிகாலையில் ரெயில் மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • தண்டவாளத்தை கடக்க முயன்ற போது பரிதாபம்
    • முகம் சிதைந்ததால் அடையாளம் காண்பதில் சிக்கல்

    ஜோலார்பேட்டை:

    குடியாத்தம் அடுத்த வளத்தூர் ரெயில் நிலையத்தில் சுமார் 35 வயது மதிக்கதக்க பெண் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை நோக்கி செல்லும் மார்க்கத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்றார்.

    அப்போது அவ்வழியாக சென்ற ஒரு ரெயிலில் அடிபட்டு உடல் சிதறி அடையாளம் தெரியாத வகையில் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    தண்டவாளம் முழுவதும் உடல் சிதறி கிடந்ததால் இறந்தவர் யார் என அடையாளம் காண முடியவில்லை. உருக்குலைந்த நிலையில் இருந்த உடலை சேகரித்து பிரத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    முகம் முழுவதும் சிதைந்த உள்ளதால் இறந்தவர் யார்? என கண்டுபிடிக்க சவாலாக உள்ளது.

    மேலும் இறந்தவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தண்டவாளத்தை கடக்க முயன்ற போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஆம்பூர் அடுத்த வடபுதுபட்டு பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 73) இவர் நேற்று ஆம்பூர் அருகே கீழ்ப்பட்டில் உள்ள வங்கிக்கு பணம் எடுத்து சென்று வருவதாக வீட்டில் கூறி வெளியே சென்றார்.

    அப்போது ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது காட்பாடியில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி சென்ற ஏதோ ஒரு ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×