ரெயில் மோதி முதியவர் பலி

தண்டவாளத்தை கடக்க முயன்ற போது பரிதாபம் போலீசார் விசாரணை
ரெயில் மோதி முதியவர் பலி
Published on

ஜோலார்பேட்டை:

ஆம்பூர் அடுத்த வடபுதுபட்டு பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 73) இவர் நேற்று ஆம்பூர் அருகே கீழ்ப்பட்டில் உள்ள வங்கிக்கு பணம் எடுத்து சென்று வருவதாக வீட்டில் கூறி வெளியே சென்றார்.

அப்போது ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது காட்பாடியில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி சென்ற ஏதோ ஒரு ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com