search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராம்கோ குரூப்"

    • விடுப்பு எடுக்காமல் பணியாற்றிய 976 தொழிலாளர்களுக்கு பரிசு-சான்றிதழ் வழங்கப்பட்டது.
    • முடிவில் மனித வள மேம்பாட்டு துறை துணை பொது மேலாளர் ரங்கராஜ் நன்றி கூறினார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையத்தில் ராம்கோ குரூப் டெக்ஸ்டைல்ஸ் டிவிசன் தி ராமராஜூ சர்ஜிகல் காட்டன் மில்ஸ், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ், சுதர்சனம் பேப்ரிக்ஸ், மற்றும் தரம் டெக்ஸ்டைல்ஸ் ஆகிய தொழிற்சாலைகளில் பணி புரியும் தொழிலா ளர்களுக்கான 42-வது ஆண்டு விஜயதசமி விளையாட்டு விழா நிகழ்ச்சிகள் ஆலையின் வளாகத்தில் நடைபெற்றது.

    விழாவிற்கு ராம்கோ குரூப் சேர்மன் பி.ஆர்.வெங்கட்ராமராஜா தலைமை தாங்கினார்.

    மில்களின் மேனேஜிங் டைரக்டர்கள் என்.ஆர்.கே.ராம்குமார் ராஜா, நளினா ராமலட்சுமி, ஸ்ரீகண்டன் ராஜா, பி.ஜே. ராம்குமார் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முதன்மை நிதிநிலை அதிகாரி விஜய்கோபால் வரவேற்றார். விழாவில் ஏ.ஐ.டி.யு.சி, எச்.எம்.எஸ், ஐ.என்.டி.யு.சி தொழிற்சங்கங்களின் தலைவர்கள் தொழிலாளர்களுக்கு கிடைத்து வரும் பல்வேறு நீண்ட கால சலுகைகள் பற்றி பேசினர்.

    விழாவில் ராம்கோ குரூப் சேர்மன் பி.ஆர்.வெங்கட்ராம ராஜா பேசுகையில், தொழி லாளர்கள் அர்ப்பணிப்பு கலந்த உணர்வோடு பணிபுரிந்து வருவதால் இந்த நிறுவனம் 83 வருடம் இளமையா னதாகவும் மற்றும். உத்வேகம் கலந்த நிறுவனமாகவும் திகழ்கிறது என கூறினார்.

    பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

    கடந்த ஆண்டில் ஆலையில் சிறந்த முறையில் பணியாற்றி 15 முதல் 35 வருடம் சர்வீஸ் பூர்த்தி செய்த தொழிலாளர்கள், சென்ற ஆண்டில் சிறப்பாக பணியாற்றிய தொழிலாளர்கள், தொடர்ந்து விடுப்பு எடுக்காமல் பணியாற்றிய தொழிலாளர்கள், சென்ற ஆண்டில் 295 நாட்களுக்கு மேல் பணியாற்றிய தொழிலாளர்கள் என சுமார் 976 தொழி லாளர்களுக்கு ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    விழாவில் ராம்கோ குரூப் டெக்ஸ்டைல் டிவிசன் பிரசிடெண்ட் மோகன் ரங்கன், மூத்த பொது மேலாளர் சந்தோஷ், பொது மேலாளர் சுந்தர்ராஜ், நிர்வாகஅதிகாரிகள், அலுவலர்கள் ஊழியர்கள் தொழிற்சங்க பிரதிநிதிகள் தொழிலாளர்கள் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

    முடிவில் மனித வள மேம்பாட்டு துறை துணை பொது மேலாளர் ரங்கராஜ் நன்றி கூறினார்.

    ×