search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராபர்ட் பாட்டின்சன்"

    • 2023-ல் ஹாலிவுட்டில் நடந்த வேலை நிறுத்தத்தால் படத்தயாரிப்பு பணிகள் பாதிக்கப்பட்டன
    • மேலும், 2026 அக்டோபர் 2-ந் தேதி பேட்மேன் -2 படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது

    'தி பேட்மேன்' ஆங்கில படம் 2022-ல் வெளியானது. இந்த படத்தில் கதாநாயகனாக ராபர்ட் பாட்டின்சன், நடிகை

    ஜோ க்ராவிட்ஸ் சிறப்பாக நடித்ததன் மூலம் உலக அளவில் பெரும் வெற்றி பெற்றது. மேலும், கோடிக்கணக்கான ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார். இந்த படத்தை பிரபல இயக்குனர் மேட் ரீவ்ஸ் இயக்கியிருந்தார். பேட்மேன் உலகளவில் 772 மில்லியன் டாலர் வசூலித்தது. 

    'பேட்மேன்' படம் உயர் வர்க்கத்தினரை குறி வைத்து கொலை செய்யும் ஒரு கொலை கும்பலை கண்டுபிடித்து அழிக்கும் கதை. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து பேட்மேன் -2 படத்தில் ராபர்ட் பாட்டின்சன் மீண்டும் நடிப்பதற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

    அதைத்தொடர்ந்து படம் தயாரிப்பு பணிகள் தொடங்கின. பேட்மேன்- 2 படத்தில் கதாநாயகனாக மீண்டும் ராபர்ட் பாட்டின்சன் நடிக்க தொடங்கினார். மேலும், பேட்மேன் -2 வருகிற 2025 அக்டோபர் 3-ல் வெளியிடவும் திட்டமிடப்பட்டது.

    2023-ல் ஹாலிவுட்டில் நடந்த வேலை நிறுத்தத்தால் படத்தயாரிப்பு பணிகள் பாதிக்கப்பட்டன. இதன் காரணமாக தற்போது 'தி பேட்மேன் - 2' வெளியீட்டு தேதி ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. மேலும், 2026 அக்டோபர் 2-ந் தேதி பேட்மேன் -2 படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

    • ஆம்பர் ஹியர்ட் அவரது முன்னாள் கணவர் ஜானி டெப்பிற்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கு காரணமாக தலைப்புச் செய்திகளில் தொடர்ந்து இடம்பிடித்தவர்.
    • டாக்டர் ஜூலியன் டி சில்வா உலகின் மிக அழகான முகத்தை கண்டறிய பிஹச்ஐ பயன்படுத்தினார்.

    லண்டனில் உள்ள மேம்பட்ட முக அழகுசாதன மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மையத்தைச் சேர்ந்த டாக்டர் ஜூலியன் டி சில்வா 2016 - ஆம் ஆண்டில் உலகின் மிக அழகான முகம் யாருடையது என்பதைக் கண்டறிய பண்டைய முக மேப்பிங் நுட்பமான பிஹச்ஐ பயன்படுத்தினார்.

    இந்த பிஹச்ஐ- யானது அழகுக்கான கிரேக்க கோல்டன் ரேஷியோவிற்கு முகம் எவ்வளவு நெருக்கமாக இருக்கிறது என்பதைக் கணக்கிடப் பயன்படுகிறது. இதைத் தொடர்ந்து டாக்டர் ஜூலியன் டி சில்வா ஆராய்சிக்கு பிறகு நடிகை ஆம்பர் ஹியர்ட் முக அமைப்பானது கிரேக்க கோல்டன் ரேஷியோவிற்கு 91.85 சதவீதம் துல்லியமாக இருப்பதைக் கண்டறிந்தார்.


    ராபர்ட் பாட்டின்சன் - ஆம்பர் ஹியர்ட் 

     அதைத் தொடர்ந்து, இதே நுட்பத்தை பயன்படுத்தி ராபர்ட் பாட்டின்சன் முக அமைப்பானது கோல்டன் ரேஷியோவிற்கு 92.15 சதவீதம் துல்லியத்துடன் இருப்பதை கண்டறிந்துள்ளார். இதன் மூலம் நடிகை ஆம்பர் ஹியர்ட் உலகின் மிக அழகான பெண் என்றும் நடிகர் ராபர்ட் பாட்டின்சன் உலகின் மிக அழகான ஆண் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த செய்தியானது சமூக ஊடகங்களில் வைரலாகி ரசிகர்கள் பலரும் ஆம்பர் மற்றும் ராபர்டுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    ×