உலகின் மிக அழகான பெண்.. உற்சாகத்தில் ஆம்பர் ஹியர்ட்..

ஆம்பர் ஹியர்ட் அவரது முன்னாள் கணவர் ஜானி டெப்பிற்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கு காரணமாக தலைப்புச் செய்திகளில் தொடர்ந்து இடம்பிடித்தவர்.டாக்டர் ஜூலியன் டி சில்வா உலகின் மிக அழகான முகத்தை கண்டறிய பிஹச்ஐ பயன்படுத்தினார்.
ஆம்பர் ஹியர்ட்
ஆம்பர் ஹியர்ட்
Published on

லண்டனில் உள்ள மேம்பட்ட முக அழகுசாதன மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மையத்தைச் சேர்ந்த டாக்டர் ஜூலியன் டி சில்வா 2016 - ஆம் ஆண்டில் உலகின் மிக அழகான முகம் யாருடையது என்பதைக் கண்டறிய பண்டைய முக மேப்பிங் நுட்பமான பிஹச்ஐ பயன்படுத்தினார்.

இந்த பிஹச்ஐ- யானது அழகுக்கான கிரேக்க கோல்டன் ரேஷியோவிற்கு முகம் எவ்வளவு நெருக்கமாக இருக்கிறது என்பதைக் கணக்கிடப் பயன்படுகிறது. இதைத் தொடர்ந்து டாக்டர் ஜூலியன் டி சில்வா ஆராய்சிக்கு பிறகு நடிகை ஆம்பர் ஹியர்ட் முக அமைப்பானது கிரேக்க கோல்டன் ரேஷியோவிற்கு 91.85 சதவீதம் துல்லியமாக இருப்பதைக் கண்டறிந்தார்.

ராபர்ட் பாட்டின்சன் - ஆம்பர் ஹியர்ட் 

 அதைத் தொடர்ந்து, இதே நுட்பத்தை பயன்படுத்தி ராபர்ட் பாட்டின்சன் முக அமைப்பானது கோல்டன் ரேஷியோவிற்கு 92.15 சதவீதம் துல்லியத்துடன் இருப்பதை கண்டறிந்துள்ளார். இதன் மூலம் நடிகை ஆம்பர் ஹியர்ட் உலகின் மிக அழகான பெண் என்றும் நடிகர் ராபர்ட் பாட்டின்சன் உலகின் மிக அழகான ஆண் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியானது சமூக ஊடகங்களில் வைரலாகி ரசிகர்கள் பலரும் ஆம்பர் மற்றும் ராபர்டுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com