search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராஜ்ய சபா தேர்தல்"

    • பீகாரில் பா.ஜ.க. மற்றும் ஜனதா தளம் இடையே கூட்டணி.
    • வாக்கு எண்ணிக்கையும் அதே நாளில் நடைபெற இருக்கிறது.

    மாநிலங்களவை தேர்தலுக்கான பா.ஜ.க. வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி அறிவித்துள்ளது. வருகிற 27-ந் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், வாக்கு எண்ணிக்கையும் அதே நாளில் நடைபெற இருக்கிறது.

    கடந்த 2022-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து பா.ஜ.க. கட்சியில் இணைந்த ஆர்.பி.என். சிங் உத்திர பிரதேசத்தில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். உத்திர பிரதேசத்தில் சுதன்ஷூ திரிவேதி, சௌத்ரி தேஜ்வீர் சிங், சாத்னா சிங், அமர்பால் மயூரா, சங்கீதா பால்வன்ட் மற்றும் நவீன் ஜெயின் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    பீகாரில் ஆறு தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறும் நிலையில், நிதிஷ் குமாரின் ஜனதா தளம் கட்சியுடன் இணைந்து பா.ஜ.க. தேர்தலை சந்திக்கிறது. அந்த வகையில், பீகாரில் தர்மஷீலா குப்தா மற்றும் பீம் சிங் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். சத்தீஸ்கரில் பா.ஜ.க. சார்பில் ராஜ தேவேந்திர பிரதாப் சிங் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    அரியாணாவில் சுபாஷ் பராலாவும், கர்நாடகா மாநிலத்தில் நாராயண கிரிஷ்னாசா பாண்டகேவும், உத்தரகாண்ட் மாநிலத்தில் மகேந்திர பட், மேற்கு வங்காளத்தில் சமிக் பட்டாச்சாரியாவும் பா.ஜ.க. வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    ×