search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேலாண்மை குழு கூட்டம்"

    • சிறப்பு பயிற்சி வகுப்பு நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்.
    • கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில் கற்றல் கற்பித்தல் பணிகளை தொடர வேண்டும்

    சென்னை:

    அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண் மைக்குழு கூட்டத்தை வருகிற 9-ந் தேதி (வெள்ளிக் கிழமை) மதியம் 3 மணிக்கு நடத்திட வேண்டும் என்று பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்குனர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    இந்த கல்வி ஆண்டில் பள்ளி இடைநிற்றல் இல்லாமல் மாணவர்கள் தமது படிப்பை தொடர்வதையும், அனைத்து வகை அரசு பள்ளிகளிலும் குழந்தைகள் தடையின்றி சேர்க்கப்படுவதையும், பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் கலந்தாலோசித்து மாணவர் சேர்க்கையை உறுதிப்படுத்த வேண்டும்.

    பள்ளியின் அருகில் உள்ள வீடுகளில் யாரேனும் மாற்றுத் திறன் குழந்தைகள் பள்ளியில் சேராமல் இருப்பது தெரிந்தால் அக்குழந்தையின் பெற்றோரை மேலாண்மை குழுவினர் சந்தித்து பள்ளியில் சேர்க்க ஊக்குவிக்க வேண்டும். சிறப்பு பயிற்சி வகுப்பு நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். துணைத் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்குதல் 'இல்லம் தேடி கல்வி' திட்டத்தை தொடருதல் உள்ளிட்டவை குறித்து இதில் விவாதிக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

    கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில் கற்றல் கற்பித்தல் பணிகளை தொடர வேண்டும் என்று அதில் கூறப்பட்டு உள்ளது.

    • புயல் தாக்கம் குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க ஆலோசனை
    • அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்

    ஜோலார்பேட்டை:

    சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு இன்று (வெள்ளிக்கிழமை) மற் றும் நாளை (சனிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் கனமழை பெய்வதற்கான வாய்ப்புள் ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதனையடுத்து திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா உத்தரவின் பேரில் நாட்டறம்பள்ளி ஒன் றிய அளவில் நாட்டறம்பள்ளி தாலுகா அலுவலகத்தில் மாண்டஸ் புயல் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரிடர் மேலாண்மை குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட பிற்ப டுத்தப்பட்ட நல அலுவலர் சரஸ்வதி தலைமை தாங்கினார்.

    அப்போது அவர், மின்சா ரத்துறை, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம், மருத் துவதுறை, தீயணைப்புதுறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்களிடம், வரும் 2 நாட்களில் மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும் என கூறினார்.

    கூட்டத்தில் தாசில்தார் க.குமார், மண்டல துணை தாசில்தார் ராஜேஷ், வரு வாய் அலுவலர் அன்னலட் சுமி மற்றும் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் முனிரத்தினம், ஊராட்சி மன்ற தலை வர்கள், ஊராட்சி செயலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், மற்றும் பிற துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • கறம்பக்குடி அரசு பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம் நடை பெற்றது.
    • கூட்டத்தில் இல்லம் தேடி கல்வி பள்ளி உள்கட்டமைப்பு மாணவர்கள் நலன் பள்ளி செல்லா குழந்தைகள் ஆகிய தலைப்புகளில் ஆலோசனை நடத்தப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    புதுக்கோட்டை :

    கறம்பக்குடி அனுமார் கோவில் அரசு தொடக்கப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் ராஜா தலைமையில் நடைபெற்றது.

    மேலாண்மை குழு தலைவர் சித்ரா முன்னிலை வகித்தார். பள்ளி தலைமையாசிரியர் வரவேற்று பேசினார். இதில் பார்வையாளராக ஆசிரியர் பயிற்சி கல்லூரி விரிவுரையாளர் தனசேகர் கலந்து கொண்டார். கூட்டத்தில் பள்ளி சுற்றுப்புற சுவர் கழிவறை ஆகியவற்றை பார்வையிட்டனர்.

    மேலும் இல்லம் தேடி கல்வி பள்ளி உள்கட்டமைப்பு மாணவர்கள் நலன் பள்ளி செல்லா குழந்தைகள் ஆகிய தலைப்புகளில் ஆலோசனை நடத்தப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் இருபால் ஆசிரியர் பெருமக்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் கமலக்கண்ணன் நன்றி கூறினார்.

    • புதிய உறுப்பினர்கள் பதவியேற்கும் நிகழ்ச்சியும்,உறுதிமொழியும் ஏற்கப்பட்டது.
    • தலைமை ஆசிரியர் காஞ்சனமாலை பள்ளிமேலாண்மைக்குழு பணிகளைப் பற்றி விளக்கிப்பேசினார்.

    மங்கலம் :

    திருப்பூர் மாவட்டம்,சாமளாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட கருகம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் பள்ளி மேலாண்மைகுழுவிற்கு புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.பின்னர் புதிய உறுப்பினர்கள் பதவியேற்கும் நிகழ்ச்சியும்,உறுதிமொழியும் ஏற்கப்பட்டது.இந்த பள்ளி மேலாண்மை குழு கூட்டத்திற்கு சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகா பழனிச்சாமி தலைமை தாங்கினார். கருகம்பாளையம் அரசுஉயர்நிலைப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர்கழக தலைவர் குப்புசாமி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் கருகம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர் காஞ்சனமாலை பள்ளிமேலாண்மைக்குழு பணிகளைப் பற்றி விளக்கிப்பேசினார்.பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் துரைசாமி வரவேற்புரையாற்றினார்.ஆசிரியர் கோகிலாமணி நன்றி கூறினார்.

    நிகழ்ச்சியில் சாமளாபுரம் பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள் பெரியசாமி,துளசிமணி,மற்றும் பள்ளி மேலாண்மை குழு புதிய உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது
    • பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.


    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அரசு மகளிர் மேல் நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம் பள்ளி தலைமை ஆசிரியர் மேரிஷேரின் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக நகராட்சி தலைவர் தமிழ்செல்வி கலந்துகொண்டு.

    அடிப்படை கட்டமைப்பு வச திகள் குறித்தும், மாணவர்களின் ஒழுக்கம், சுற்றுப்புற சூழல் குறித்து விவாதித்தார். அதனைத்தொடர்ந்து பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் துணைத் தலைவர், உறுப்பினர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பேசினார்.

    அப்போது ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இருவருமே மாணவர்களை கண்காணிக்க வேண்டும் என கூறினார். நக ராட்சி உறுப்பினர்கள் சுசீலா, அன்பரசு, அசோகன் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    ×