search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேலப்பாளையம் சந்தை"

    • ஆடி மாதம் என்பதால் ஏராளமான கிராமங்களில் கோவில் கொடைகள் நடைபெற்று வருகிறது.
    • ஆடுகளின் விலை ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மேலப்பாளையத்தில் டக்கரம்மாள்புரம் சாலையில் மாநகராட்சி கால்நடை சந்தை அமைந்துள்ளது. இந்த சந்தையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை வியாபாரிகள், பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    நெல்லை மட்டுமல்லாது அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் ஆடு, கோழி, கருவாடு உள்ளிட்டவற்றை விற்பனைக்காக கொண்டு வருவது வழக்கம். முக்கிய விழா காலங்களில் ஆடுகள் விலை எதிர்பாராததை விட அதிகமாக இருக்கும்.

    தற்போது ஆடி மாதம் என்பதால் ஏராளமான கிராமங்களில் கோவில் கொடைகள் நடைபெற்று வருகிறது. இதில் பக்தர்கள் தங்களது நேர்த்தி கடன்களை நிறைவேற்றுவதற்காக ஆடுகளை அதிக அளவில் வாங்கி செல்கின்றனர்.

    இதையொட்டி இன்று மேலப்பாளையம் சந்தைக்கு நெல்லை மாவட்டம் மற்றும் தென்காசி, தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும் ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது.

    ஆடுகளின் விலை ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. இந்த வாரம் புதுவரவாக கராச்சி ஆடுகள் விற்பனைக்கு வந்தன. 30 கிலோ எடை கொண்ட அந்த வகை ஆடுகள் ரூ.19 ஆயிரம் வரையிலும் விற்பனையானது.

    செங்கிடா, கருங்கிடா உள்ளிட்டவைகளும் சந்தைக்கு வந்திருந்தன. கொம்பு அதிக நீளம் கொண்ட செங்கிடாக்கள் ரூ.23 ஆயிரம் முதல் ரூ.26 ஆயிரம் வரையிலும் விற்பனை செய்யப்பட்டது.

    • வருகிற 10-ந்தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதால் இன்று மேலப்பாளையம் கால்நடை சந்தையில் வியாபாரிகள் லாரி உள்ளிட்ட வாகனங்களில் கால்நடைகளை கொண்டு வந்து இறக்கினர்.
    • அதனை வாங்குவதற்கு வியாபாரிகளும், பொதுமக்களும் அதிகமாக வந்திருந்தனர். இன்று நாட்டுகிடா, பொட்டுகிடா என பல்வேறு இன கிடாக்களை பொதுமக்கள் போட்டி போட்டு வாங்கி சென்றனர்.

    நெல்லை:

    தென்மாவட்டங்களில் உள்ள கால்நடை சந்தைகளில் எட்டயபுரத்துக்கு அடுத்த படியாக மேலப்பாளையம் ஆட்டுச்சந்தை மிகவும் புகழ் பெற்றது.

    இந்த சந்தைக்கு பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் அதிக அளவில் வந்து ஆடுகளை வாங்கி செல்வார்கள்.

    வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் இந்த சந்தையில் ஆடு, மாடுகள் மட்டுமின்றி கோழி, மீன், கருவாடு உள்ளிட்டவற்றின் விற்பனையும் தனித்தனியே நடைபெறும். பண்டிகை காலங்களில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதும்.

    இந்நிலையில் வருகிற 10-ந்தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதால் இன்று மேலப்பாளையம் கால்நடை சந்தையில் வியாபாரிகள் லாரி உள்ளிட்ட வாகனங்களில் கால்நடைகளை கொண்டு வந்து இறக்கினர்.

    அதனை வாங்குவதற்கு வியாபாரிகளும், பொதுமக்களும் அதிகமாக வந்திருந்தனர். இன்று நாட்டுகிடா, பொட்டுகிடா என பல்வேறு இன கிடாக்களை பொதுமக்கள் போட்டி போட்டு வாங்கி சென்றனர்.

    பண்டிகை நெருங்குவதால் விலையை பற்றி யோசிக்காமல் அதிக விலை கொடுத்து ஆடுகளை வாங்கி சென்றனர். நாட்டு கிடாக்கள் ஒன்று ரூ.45 ஆயிரம் வரை விற்பனையானது.

    மயிலம்பாடி ஆடுகள் ரூ.25 ஆயிரம் வரையிலும், பொட்டுகிடா ரூ.40 முதல் ரூ.45 ஆயிரம் வரையிலும் விற்கப்பட்டது. இன்று ஒரே நாளில் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்தன. அவை அனைத்தும் மதியத்திற்குள் விற்று தீர்ந்தது.

    • பக்ரீத் பண்டிகை வருகிற 10-ந்தேதி கொண்டாடப்படுகிறது. மேலும் தற்போது ஏராளமான கோவில் கொடை விழாக்களும் நடைபெற்று வருகிறது.
    • இதனை முன்னிட்டு மேலப்பாளையம் சந்தையில் இன்று ஏராளமான வியாபாரிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    நெல்லை:

    தென்மாவட்டங்களில் உள்ள பிரசித்தி பெற்ற கால்நடை சந்தைகளில் ஒன்று மேலப்பாளையம் கால்நடைசந்தை ஆகும்.

    இங்கு ஆடுகளுடன், மாடு, கோழி, கருவாடும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்காக ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமைகளில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 100-க்கணக்கான வியாபாரிகளும், ஆயிரக்கணக்கான பொதுமக்களும் சந்தையில் கூடுவார்கள்.

    மேலப்பாளையம் கால்நடை சந்தையில் வாரந்தோறும் கோடிக்கணக்கான ரூபாய் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

    அதேபோல் ரம்ஜான், பக்ரீத், தீபாவளி, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் கூடுதலாக விற்பனை நடைபெறும்.

    இந்நிலையில் பக்ரீத் பண்டிகை வருகிற 10-ந்தேதி கொண்டாடப்படுகிறது. மேலும் தற்போது ஏராளமான கோவில் கொடை விழாக்களும் நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு மேலப்பாளையம் சந்தையில் இன்று ஏராளமான வியாபாரிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    அவற்றை வாங்க பொதுமக்கள் கூட்டமும் அலைமோதியது. இதனால் சந்தை களைகட்டி காணப்பட்டது. இன்று சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது.

    ஆடுகள் தரத்திற்கேற்ப அவை விற்பனை செய்யப்பட்டது. குறைந்தபட்சம் ரூ. 7 ஆயிரத்திற்கு விற்பனையானது.

    எட்டயபுரத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட வெள்ளாடு ஒன்று அதிகபட்சமாக ரூ. 35 ஆயிரத்திற்கு விற்பனையானது.

    இதேபோல் வியாபாரிகள் பலரும் மொத்தமாக ஆடுகளை வாங்கி சென்றனர். பொதுமக்களும் தங்களுக்கு ஏற்ற ஆடுகளை வாங்கினர். இதனால் விற்பனைக்கு வந்த அனைத்து ஆடுகளும் விற்று தீர்த்தன.

    கால்நடை சந்தையில் இன்று ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டதால் அனைவரும் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றுமாறு மாநகராட்சி அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தினர்.

    அதன்பேரில் பொதுமக்களும், வியாபாரிகளும் முககவசம் அணிந்து சென்றனர்.

    ×