search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Melapalayam Weekly Market"

    • வருகிற 10-ந்தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதால் இன்று மேலப்பாளையம் கால்நடை சந்தையில் வியாபாரிகள் லாரி உள்ளிட்ட வாகனங்களில் கால்நடைகளை கொண்டு வந்து இறக்கினர்.
    • அதனை வாங்குவதற்கு வியாபாரிகளும், பொதுமக்களும் அதிகமாக வந்திருந்தனர். இன்று நாட்டுகிடா, பொட்டுகிடா என பல்வேறு இன கிடாக்களை பொதுமக்கள் போட்டி போட்டு வாங்கி சென்றனர்.

    நெல்லை:

    தென்மாவட்டங்களில் உள்ள கால்நடை சந்தைகளில் எட்டயபுரத்துக்கு அடுத்த படியாக மேலப்பாளையம் ஆட்டுச்சந்தை மிகவும் புகழ் பெற்றது.

    இந்த சந்தைக்கு பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் அதிக அளவில் வந்து ஆடுகளை வாங்கி செல்வார்கள்.

    வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் இந்த சந்தையில் ஆடு, மாடுகள் மட்டுமின்றி கோழி, மீன், கருவாடு உள்ளிட்டவற்றின் விற்பனையும் தனித்தனியே நடைபெறும். பண்டிகை காலங்களில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதும்.

    இந்நிலையில் வருகிற 10-ந்தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதால் இன்று மேலப்பாளையம் கால்நடை சந்தையில் வியாபாரிகள் லாரி உள்ளிட்ட வாகனங்களில் கால்நடைகளை கொண்டு வந்து இறக்கினர்.

    அதனை வாங்குவதற்கு வியாபாரிகளும், பொதுமக்களும் அதிகமாக வந்திருந்தனர். இன்று நாட்டுகிடா, பொட்டுகிடா என பல்வேறு இன கிடாக்களை பொதுமக்கள் போட்டி போட்டு வாங்கி சென்றனர்.

    பண்டிகை நெருங்குவதால் விலையை பற்றி யோசிக்காமல் அதிக விலை கொடுத்து ஆடுகளை வாங்கி சென்றனர். நாட்டு கிடாக்கள் ஒன்று ரூ.45 ஆயிரம் வரை விற்பனையானது.

    மயிலம்பாடி ஆடுகள் ரூ.25 ஆயிரம் வரையிலும், பொட்டுகிடா ரூ.40 முதல் ரூ.45 ஆயிரம் வரையிலும் விற்கப்பட்டது. இன்று ஒரே நாளில் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்தன. அவை அனைத்தும் மதியத்திற்குள் விற்று தீர்ந்தது.

    ×