search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதியோர் காப்பகங்கள்"

    தமிழகம் முழுவதும் செயல்படும் அரசு மற்றும் தனியார் முதியோர் காப்பகங்களை கலெக்டர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #MadrasHC
    சென்னை:

    கோவையை சேர்ந்த சிவராமன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், கோவை மாவட்டத்தில் 18-க்கும் மேற்பட்ட தனியார் முதியோர் காப்பகங்கள் உள்ளன. அதில் தபோவன் என்ற முதியோர் காப்பகத்தில், கடந்த 2016-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சமூக நலத்துறையின் விதிமுறைகள் எதுவும் அமல்படுத்தப்படவில்லை. மாறாக, பணம் பறிக்கும் செயலிலேயே ஈடுபடுகின்றனர்.

    இதனால், தங்களின் பணத்தை 5 ஆண்டுகளுக்கு பின்னர் யாரிடம் பெறுவது என தெரியவில்லை. இது தொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. அதனால் சம்மந்தப்பட்ட முதியோர் காப்பகத்தில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் வினித் கோத்தாரி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது சமூகநலத்துறை முதன்மை செயலாளர் மணிவாசகம் நேரில் ஆஜராகி பதில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

    இதில் திருப்தி அடையாத நீதிபதிகள் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு காப்பகங்களை சமூகநலத்துறை முதன்மைச் செயலாளர் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்றும், அதேபோல மற்ற மாவட்டங்களிலும் கலெக்டர்கள் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையை மார்ச் 19-ந்தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர். #MadrasHC
    ×