search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதல் போக நெல் சாகுபடியில்"

    • விவசாயிகள் நெல் சாகுபடி செய்து தற்போது அறுவடை பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
    • விதை நெல் ரூ.8.38 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபி வேளாண்மை உற்பத்தி யாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் விதை நெல் உற்பத்தி செய்யப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் தடப்பள்ளி- அரக்கன் கோட்டை, கீழ்பவானி மற்றும் மேட்டூர் வலது கரை பாசனங்களுக்கு இங்கிருந்து தான் தாய் விதை நெல் தரப்படுகிறது.

    விவசாயிகள் அதை பயிரிட்டு விதை நெல்லாக உற்பத்தி செய்து மீண்டும் சங்கத்துக்கே வழங்குகின்றனர். அவர் பெறப்படும் விதை நெல்லில் முளைப்பு திறன் 80 சதவீதம், ஈரப்பதம் 13, புரத்தூய்மை 99, பிற ரக கலப்படம் 0.2 சதவீதம் இருந்தால் மட்டுமே விற்ப னைக்கு உகந்ததாக விதை சான்று அலுவலர் மூலம் சான்று அளிக்கப்படுகிறது.

    தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனங்களுக்கு கடந்த ஏப்ரல் 21-ந் தேதி திறக்கப்பட்ட நீரை கொண்டு விவசாயிகள் நெல் சாகுபடி செய்து தற்போது அறுவடை பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

    அதனால் இந்த சங்கத்தின் மூலம் ஐ.ஆர்.20 ரக விதைநெல் 37 ரூபாய் என்ற அடிப்படையில் மொத்தம் 10 டன் ரூ.3.70 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.

    அதேபோல் பி பி டி (5204) ரக விதை நெல் கிலோ 40 ரூபாய் விலையில் மொத்தம் ஏழரை டன் ரூ.3 லட்சத்துக்கு விற்பனை யானது. தவிர பவானி ரக விதை நெல் கிலோ 42 ரூபாய் விலையில், நாலுடன் மொத்தம் 1.68 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.

    அதனால் முதல் போகத்தில் மட்டும் சங்கத்தின் மூலம் 21 டன் விதை நெல் ரூ.8.38 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானதாக நிர்வாகிகள் தெரிவித்தனர். 

    ×