search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முகாம்கள்"

    • பொது வினியோக திட்ட சிறப்பு குறைதீர் முகாம்கள் நடைபெற உள்ளது
    • நாளை நடைபெறுகிறது

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டத்தில் பொது வினியோக திட்டம் சார்ந்த குறைபாடுகளை களைவதற்கும், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழை திருத்தம் செய்தல் போன்ற கோரிக்கைகளின் மீது உடனுக்குடன் தீர்வு காண்பதற்கும் சிறப்பு பொது வினியோக திட்ட குறை தீர்க்கும் முகாம் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ளது. அதன்படி பெரம்பலூர் வட்டாரத்திற்கு அம்மாபாளையம், வேப்பந்தட்டை வட்டாரத்திற்கு வேப்பந்தட்டை, குன்னம் வட்டாரத்திற்கு வசிஷ்டபுரம், ஆலத்தூர் வட்டாரத்திற்கு புதுக்குறிச்சி ஆகிய 4 கிராமங்களில் நடக்கிறது. கூட்டத்தில் பொதுமக்கள் ரேஷன் கடைகள் தொடர்பான குறைகளை தெரிவித்தும், மின்னணு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், செல்போன் எண் பதிவு மாற்றம் செய்தல், புதிய ரேஷன் கார்டு, நகல் மின்னணு குடும்ப அட்டை, மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் ஆகியோர்களுக்கு அங்கீகார சான்று வழங்குதல், குடும்ப தலைவர் இறந்திருந்தால் அவரது புகைப்படத்தை மாற்றம் செய்வதற்கு, புதிய குடும்ப தலைவரின் புகைப்படத்துடன் விண்ணப்பம் செய்தல் உள்ளிட்டவை மேற்கொள்ளலாம்."

    • பொது வினியோக திட்ட சிறப்பு குறைதீர் முகாம்கள் நடக்க உள்ளது
    • நாளை நடைபெறுகிறது

    அரியலூர்

    அரியலூர் மாவட்டத்தில் பொது வினியோக திட்டம் சார்ந்த குறைபாடுகளை களைவதற்கும், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழை திருத்தம் செய்தல் போன்ற கோரிக்கைகளின் மீது உடனுக்குடன் தீர்வு காண்பதற்கும் சிறப்பு பொது வினியோக திட்ட குறை தீர்க்கும் முகாம் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ளது. அதன்படி அரியலூர் வட்டாரத்திற்கு ரெட்டிபாளையம், உடையார்பாளையம் வட்டாரத்திற்கு உல்லியக்குடி, செந்துறை வட்டாரத்திற்கு மருவத்தூர், ஆண்டிமடம் வட்டாரத்திற்கு சிலுவைச்சேரி ஆகிய 4 கிராமங்களில் நடக்கிறது.கூட்டத்தில் பொதுமக்கள் ரேஷன் கடைகள் தொடர்பான குறைகளை தெரிவித்தும், மின்னணு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், செல்போன் எண் பதிவு மாற்றம் செய்தல், புதிய ரேஷன் கார்டு, நகல் மின்னணு குடும்ப அட்டை, மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் ஆகியோர்களுக்கு அங்கீகார சான்று வழங்குதல், குடும்ப தலைவர் இறந்திருந்தால் அவரது புகைப்படத்தை மாற்றம் செய்வதற்கு, புதிய குடும்ப தலைவரின் புகைப்படத்துடன் விண்ணப்பம் செய்தல் உள்ளிட்டவை மேற்கொள்ளலாம்."

    • கிராம மக்கள் தங்களது உடைமைகள் மற்றும் கால்ந டைகளுடன் கிராமத்தை விட்டு ஒவ்வொருவராக வெளியேறி வருகின்றனர்.
    • அமைச்சர் நேரில் சென்று சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து முகாமில் தங்கி உள்ள மக்களுக்கு உணவு வழங்கி அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    சீர்காழி,

    கர்நாடகா மற்றும் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் மேட்டூர் அணையின் முழு கொள்ளளவான 120 அடியை அணை எட்டியது.

    இதனால் அணைக்கு வரும் கூடுதல் நீர் அனைத்தும் கொள்ளிடம் ஆற்றல் திறந்து விடப்படுகிறது.

    கொள்ளிடம் ஆற்றில் தற்போது ஒரு லட்சத்து 50 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ள நிலையில் தண்ணீர் வரத்து மேலும் அதிகரிக்கும் என்று பொதுப்பணித்துறையினர் தெரிவிக்கின்றனர்.

    இதனால் மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கொள்ளிடம் ஆற்றில் நீர் திறப்பு அதிகரி த்துள்ளதால் கொள்ளிடம் ஆற்று பகுதியில் உள்ள திட்டு கிராம ங்களான நாதல்படுகை, முதலைமேடுதிட்டு, வெள்ள மணல், கோரத்திட்டு உள்ளிட்ட கிராமங்களை தண்ணீர் சூழ்ந்துள்ளது. கிராம மக்கள் தங்களது உடைமைகள் மற்றும் கால்நடைகளுடன் கிராமத்தை விட்டு ஒவ்வொருவராக வெளியேறி வருகின்றனர்.

    நாட்டு படகுகள் மற்றும் பைபர் படகுகள் உதவியுடன் அத்தியாவசியமான பொருட்களை எடுத்துக் கொண்டு ஆற்றின் கரை மற்றும் முகாம்களை நோக்கி வந்த வண்ணம் இருந்து வருகின்றனர்.

    ஆற்றின் கரை பகுதியில் மேடான பகுதியில் தற்காலிக கொட்டகை அமைத்தும் நேற்று இரவிலிருந்து சிலர் தங்கி உள்ளனர்.

    வருவாய்த்துறை சார்பில் நான்கு இடங்களில் முகாம் அமைத்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நேற்று முன்தினம் இரவு முதல் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில்.முகாம்களுக்கு அமைச்சர் நேரில் சென்று சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

    தொடர்ந்து முகாமில் தங்கி உள்ள மக்களுக்கு உணவு வழங்கி அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    மக்களுக்கு தேவையான சுகாதார வசதி, உள்ளிட்ட உதவிகளை செய்திட மாவட்ட கலெக்டர் லலிதாவிடம் அறிவுறுத்தினார்.

    பின்னர் முதலை மேடுதிட்டு கிராமத்திற்கு நேரில் சென்று கொள்ளிடம் ஆற்றில் நீர் வரத்து அதிகரிக்கும் என்பதால் மக்கள் பாதுகாப்பாக மேடான பகுதிக்கு வருமாறும் கால்நடைகளை பாதுகாப்பான இடங்களுக்கு ஓட்டிச் சென்று பாதுகாக்குமாறு கேட்டுக் கொண்டார்.

    அதன்பின்னர் அளக்குடி பகுதிக்கு நேரில் சென்ற அமைச்சர் மெய்யநாதன் ஆற்றில் தண்ணீர் அதிகரித்துள்ளதால் கரையின் பாதுகாப்புத் தன்மை குறித்து பொதுப்ப ணித்துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்ட சந்தபடுகை கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரின் மனைவி சுமதியிடம் அமைச்சர் நிதி உதவி வழங்கினார்.

    மாவட்ட கலெக்டர் லலிதா, எம் .எல். ஏக்கள் பன்னீர்செல்வம், நிவேதாமுருகன், சீர்காழி ஆர்டிஓ அர்ச்சனா, தாசில்தார் செந்தில்குமார், கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ், மயிலாடுதுறை காவிரி வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர் சண்முகம், உதவி செயற்பொறியாளர் விஜயகுமார், உதவி பொறியாளர் சிவசங்கரன், ஒன்றிய செயலாளர்கள் செல்லசேதுரவிக்குமார், மலர்விழி திருமாவளவன், ஒன்றிய ஆணையர் ரெஜினாராணி, பி.டி.ஓ சரவணன், மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    ×