search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்வாரிய தொழிலாளா்"

    • தி.மு.க. ஆட்சியில் ஒப்பந்த தொழிலாளா்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டனா்
    • 2011ம் ஆண்டில் இருந்து எந்தவொரு ஒப்பந்த தொழிலாளரும் பணிநிரந்தரம் செய்யப்படவில்லை.

    திருப்பூர் :

    தமிழக மின்வாரியத்தில் பணியாற்றி வரும் ஒப்பந்தத் தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பொதுத் தொழிலாளா் நல அமைப்பு சாா்பில் மனு அளிக்கப்பட்டது.

    இது குறித்து அந்த அமைப்பின் செயலாளா் அ.சரவணன் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:- தமிழக மின்வாரியத்தில் கடந்த காலங்களில் தி.மு.க. ஆட்சியில் ஒப்பந்த தொழிலாளா்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டனா். இதனிடையே, ஆட்சி மாற்றம் காரணமாக 2011ம் ஆண்டில் இருந்து எந்தவொரு ஒப்பந்த தொழிலாளரும் பணிநிரந்தரம் செய்யப்படவில்லை. இது தொடா்பாக எங்களது அமைப்பு சாா்பில் பல போராட்டங்களை நடத்தியும் கடந்த ஆட்சியில் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    தமிழக மின் வாரியத்தில் வயா்மேன், போா்மேன், பொறியாளா்கள், கள உதவியாளா்கள், கணக்கீட்டாளா்கள் என 55 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் உள்ளன. இதில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட களப்பணி காலிப்பணியிடங்கள் கடந்த 10 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளன. ஆகவே, தமிழக மின்வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×