search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மினி வேன்"

    • லாரி மீது மினி வேன் மோதல்; டிரைவர் உடல் நசுங்கி பலியானார்.
    • இது குறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    கன்னியாகுமரி ஆறுமுக புரம் காலனியைச் சேர்ந்தவர் பென்னி (வயது 50). வேன் டிரைவரான இவர் இன்று காலை மதுரையிலிருந்து திருநெல்வேலிக்கு வாழை மரங்களை ஏற்றிக்கொண்டு சரக்கு வேனில் புறப்பட்டார்.

    மதுரை மாவட்டம் திருமங்கலம் சமத்துவபுரம் 4 வழிச்சாலையில் வந்து கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த வேன் முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது.

    இதில் லாரியின் அடியில் வேனின் முன்பகுதி சிக்கி பலத்த சேதம் அடைந்தது. இந்த விபத்தில் வேன் டிரைவர் பென்னி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த திருமங்கலம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராடி வேனில் சிக்கி இருந்த பென்னியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து தொடர்பாக திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம் அருகே கள்ளிக்குடியை அடுத்துள்ள நல்லமநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் சங்காரெட்டி (வயது 70). இவர் நேற்று இரவு அந்த பகுதியில் உள்ள 4 வழிச்சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் இவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சங்காரெட்டி பரிதாபமாக இறந்தார். மோட்டார் சைக்கிளில் வந்த கோவிந்தராஜ் (32) என்பவர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • லாரி திடீர் பிரேக் போட்டதால் மினி வேன் லாரி மீது மோதியது.
    • ஏர்லாக் ஆகி நடுரோட்டில் நின்ற மினி வேனை கிரைன் மூலம் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.

    கடலூர்:

    சென்னை வியாச ர்பாடியை சேர்ந்தவர் இசக்கி பாபு (32). இவர் உளுந்தூர் பேட்டையில் இருந்து சென்னை வியாசர் பாடிக்கு மினி வேனை ஓட்டி சென்றார். திண்டிவனம் வீரங்குளம் அருகே சென்ற போது முன்னால் சென்ற லாரி திடீர் பிரேக் போட்டதால் மினி வேன் லாரி மீது மோதியது. இதனால் ஏர் லாக் ஆகி மினி வேன் நடுரோட்டில் நின்றது. இதனால் 3 மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் திண்டிவனம் சப்- இன்ஸ்பெக்டர் பாக்கியலட்சுமி, போலீஸ்காரர்கள் வரதராஜ், சுந்தர் ஆகியோர் அங்கு விரைந்து சென்றனர்.

    ஏர்லாக் ஆகி நடுரோட்டில் நின்ற மினி வேனை கிரைன் மூலம் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். விபத்து குறித்து நெடுஞ்சாலை துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் நெடுஞ்சாலைத் துறை ஊழியர்கள் வராததால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது குறிப்பிடத் தக்கது. இந்த விபத்தில் மினி வேன் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    ×