search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாவட்ட செயலாளர்"

    • அ.தி.மு.க. 52-ம் ஆண்டு தொடக்க விழா நடந்தது.
    • மாவட்ட செயலாளர் கலந்து கொண்டார்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் குன்றக்குடியில் அ.தி.மு.க. வின் 52 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கட்சி யினர், கொடிகள் ஏற்றி இனிப்புகள் வழங்கி விமரி சையாக கொண்டாடினர்.

    குன்றக்குடியில் பேருந்து நிலையம் அருகில் மற்றும் சுப்பிரமணிய சுவாமி கோவில் எதிரே உள்ள அ.தி.மு.க. கொடிக்கம்பத்தில் சிவகங்கை மாவட்டச் செய லாளரும், சிவகங்கை சட்ட மன்ற உறுப்பினருமான பி.ஆர்.செந்தில்நாதன் கட்சி கொடி ஏற்றி வைத்து, இனிப்புகள் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் ஏ.வி.நாகராஜன், பாசறை மாவட்ட செயலாளர் பிரபு, மாவட்ட எம்.ஜி.ஆர். இளை ஞர் அணி செயலாளர் பார்த்திபன், பேரவை இணைச் செயலாளர் முருகேசன் உள்ளிட்ட அ.தி.மு.க. மாவட்ட, ஒன்றிய, நிர்வாகி கள் ஏராளமானோர் கலந்து கொண்டாடினர்.

    • இரணியல் மேலத்தெருவில் ஒரு பேக்கரி கடையில் மிட்டாய் போடும் தொழில் செய்து வந்தார்.
    • பாலு நேற்று மாலை வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

    இரணியல்:

    நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் தெப்பக்குளம் வடக்குத்தெருவை சேர்ந்தவர் பாலு (வயது 46). நடிகர் விக்ரம் ரசிகர்கள் மன்ற மாவட்ட செயலாளராக இருந்தவர். இரணியல் மேலத்தெருவில் ஒரு பேக்கரி கடையில் மிட்டாய் போடும் தொழில் செய்து வந்தார். பாலு நேற்று மாலை வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அவர் வில்லுக்குறி தாண்டி தோட்டியோட்டில் வந்தபோது பின்னால் வேகமாக வந்த லாரி, இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

    இதில் மோட்டார் சைக்கிளுடன் தூக்கி வீசப்பட்ட பாலு தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்தில் பலியானார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து பாலுவின் மனைவி துர்காதேவி கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற லாரியை அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா பதிவுகள் மூலம் தேடி வருகின்றனர்.

    • நீதிபதி முறையாக அனுமதி பெற்று மீண்டும் ஒரு பொதுக் கூட்டம் நடத்தி அக்கூட்டத்தில் குமரகுரு மன்னிப்பு கேட்க வேண்டும் என உத்தரவிட்டார்.
    • கூட்டத்தில் பங்கேற்ற அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் அமைதியான சூழல் காணப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    அமைச்சர் உதயநிதியை அவதூறாக பேசிய விவகாரத்தில் பொதுக்கூட்டம் நடத்தி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் வருத்தம் தெரிவித்தார்.

    கள்ளக்குறிச்சி மந்தைவெளி பகுதியில் கடந்த மாதம் 19-ந் தேதி அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் குமரகுரு, விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதியை அவதூறாக பேசியதை கண்டித்து மாவட்டம் முழுவதும் தி.மு.க.வினர் போலீஸ் நிலையங்களில் புகார் அளித்தனர்.

    இதனால் குமரகுரு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    இதனை தொடர்ந்து முன்ஜாமீன் பெற சென்னை ஐகோர்ட்டில் குமரகுரு மனுதாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி முறையாக அனுமதி பெற்று மீண்டும் ஒரு பொதுக் கூட்டம் நடத்தி அக்கூட்டத்தில் குமரகுரு மன்னிப்பு கேட்க வேண்டும் என உத்தரவிட்டார்.

    கோர்ட்டு உத்தரவை செயல்படுத்தும் விதமாக கள்ளக்குறிச்சி மந்தைவெளியில் அ.தி.மு.க. மதுரை மாநாடு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நேற்று நடத்தப்பட்டது.

    இதில் பங்கேற்ற மாவட்ட செயலாளர் குமரகுரு, அமைச்சர் உதயநிதி குறித்து நான் அவதூறாக பேசியதாக தெரிவிக்கப்படுகிறது.

    அந்த பேச்சு புண்படும் படி இருந்தால் வருத்தம் தெரிவிப்பதாக அப்போதே சமூகவலை தளங்கள் வழியாக தெரிவித்து இருந்தேன். இப்போதும் இந்த கூட்டத்தின் வாயிலாக அவ்வாறு புண்படும் படி பேசி இருந்தால் வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறினார்.

    அப்போது கூட்டத்தில் பங்கேற்ற அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் அமைதியான சூழல் காணப்பட்டது.

    • 7 வருடத்திற்கு பிறகு கட்சியில் மாவட்ட நிர்வாகிகள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர்.
    • வட சென்னை வடக்கு இளங்கோவன், வடசென்னை தெற்கு-அப்புன், மத்திய சென்னை கிழக்கு-சாரநாத், மத்திய சென்னை மேற்கு-வேலுமணி.

    சென்னை:

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு புதிய மாவட்டச் செயலாளர்கள், மண்டலச் செயலாளர்கள், மண்டல துணைச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    7 வருடத்திற்கு பிறகு கட்சியில் மாவட்ட நிர்வாகிகள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர்.

    சட்டமன்ற தொகுதி வாரியாக 144 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு மாவட்டச் செயலாளர்களை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்து உள்ளார். அதன் விவரம் வருமாறு:-

    வடசென்னை கிழக்கு சி.சவுந்தர், வட சென்னை மேற்கு-உஷாராணி, வட சென்னை வடக்கு இளங்கோவன், வடசென்னை தெற்கு-அப்புன், மத்திய சென்னை கிழக்கு-சாரநாத், மத்திய சென்னை மேற்கு-வேலுமணி, மத்திய சென்னை வடக்கு-சேத்துப்பட்டு இளங்கோ.

    தென் சென்னை மையம்-சைதை ஜேக்கப், தென் சென்னை வடக்கு-கரிகால் வளவன், தென் சென்னை தெற்கு-இளையா, மேற்கு சென்னை-ஞான முதல்வன்.

    திருவள்ளுவர் கிழக்கு-நீலமேகம், திருவள்ளூர் மேற்கு-தளபதி சுந்தர், திருவள்ளூர் மையம்-அருண் கவுதம், வேலூர் கிழக்கு-கோவேந்தன், வேலூர் மேற்கு சுதாகர், திருப்பத்தூர்-வெற்றி கொண்டான், திருப்பத்தூர் வடக்கு-ஓம்பிரகாசம்.

    செங்கல்பட்டு வடக்கு-தென்னவன், செங்கல்பட்டு மையம்-கானல் விழி, செங்கல்பட்டு மேற்கு-பொன்னிவளவன், செங்கல்பட்டு தெற்கு-தமிழினி, ஆவடி மாநகர்-ஆதவன், காஞ்சிபுரம் மாநகர்-மதி ஆதவன், வேலூர் மாநகர்-பிலிப், ஓசூர் மாநகர்-ராமச்சந்திரன், கடலூர் மாநகர்-செந்தில், கும்பகோணம் மாநகர்-ராஜ்குமார், தஞ்சாவூர் மாநகர்-இடிமுரசு இலக்கண்ணன், கரூர் மாநகர்-இளங்கோ, திண்டுக்கல் மாநகர்-மைதீன் பாவா, சிவகாசி மாநகர்-செல்வன் ஜேசுதாஸ், நெல்லை மாநகர்-முத்துவளவன், நாகர்கோவில் மாநகர்-அப்துல் காலித்.

    சேலம் கிழக்கு-கருப்பையா, சேலம் மேற்கு-மேட்டூர் மெய்யழகன், சேலம் வடக்கு-தெய்வானை, சேலம் தெற்கு-தமிழன், ஈரோடு மாநகர்-சாதிக், ஈரோடு மேற்கு-தங்கவேல், ஈரோடு தெற்கு-கமலநாதன், ஈரோடு வடக்கு-அந்தியூர் ஈஸ்வரன், நாமக்கல் கிழக்கு-மும்பை அர்ஜூன், நாமக்கல் மேற்கு-முகிலன், நாமக்கல் மையம்-நீலவானத்து நிலவன்.

    கோவை கிழக்கு-ஸ்டீபன், கோவை மாநகர் வடக்கு-குரு, கோவை மாநகர் தெற்கு-குமணன், கோவை வடக்கு-குடி மைந்தன், கோவை தெற்கு-அசோக்குமார்.

    திருச்சி கிழக்கு-அன்புசெல்வன், திருச்சி தெற்கு-ஆற்றலரசு, திருச்சி வடக்கு-கலைச்செல்வன், தஞ்சாவூர் மையம்-ஜெய்சங்கர், தஞ்சாவூர் மேற்கு-ஜான்பீட்டர், தஞ்சாவூர் தெற்கு-அரவிந்த்குமார், தஞ்சாவூர் வடக்கு-முல்லைவளவன்.

    திருப்பூர் மாநகர்-மூர்த்தி, திருப்பூர் கிழக்கு-ஓவியர் மின்னல், திருப்பூர் தெற்கு-சதிஷ்குமார், திருப்பூர் வடக்கு-சண்முகம்.

    மதுரை கிழக்கு-முத்துப் பாண்டியன், மதுரை மேற்கு-சிந்தனைவளவன், மதுரை தெற்கு-காளிமுத்து, மதுரை மாநகர் தெற்கு-ரவிக்குமார், மதுரை மாநகர் வடக்கு-சுடர்மொழி, தேனி கிழக்கு-ரபிக் முகமது, தேனி மேற்கு-போடி மதன், திண்டுக்கல் மையம்-தமிழரசன், திண்டுக்கல் மேற்கு-கணபதி, திண்டுக் கல் கிழக்கு-தமிழ்முகம்.

    தூத்துக்குடி தெற்கு-டிலைட்டா, தூத்துக்குடி மையம்-கணேசன், தூத்துக் குடி வடக்கு-முருகன், நெல்லை தெற்கு-அருட் செல்வன், நெல்லை மேற்கு-எப்.சி.சேகர், கன்னியாகுமரி மையம்-மேசியா, கன்னியாகுமரி மேற்கு-தேவகி, கன்னியாகுமரி கிழக்கு பேரறிவாளன்.

    தாம்பரம் மாநகர் வடக்கு-திருநீர்மலை தமிழ ரசன், தாம்பரம் மாநகர் தெற்கு-சாமுவேல், சேலம் மாநகர் வடக்கு-காஜா மைதீன், சேலம் மாநகர் தெற்கு-மொழியரசு, திருச்சி மாநகர் மேற்கு-புல்லட் லாரன்ஸ், திருச்சி மாநகர் கிழக்கு-கனியமுதன்.

    சிவகங்கை தெற்கு-பாலையா, ராமநாதபுரம் கிழக்கு-அற்புதகுமார், ராமநாதபுரம் மேற்கு-பிரபாகர், விருதுநகர் கிழக்கு-இனியவன், விருதுநகர் மேற்கு-பிரியதர்ஷினி, விருதுநகர் மையம்-சாத்தூர் சந்திரன்.

    காஞ்சீபுரம் வடக்கு-மேனகா தேவி கோமகன், காஞ்சிபுரம் தெற்கு-எழிலரசு, மயிலாடுதுறை வடக்கு-இனியவன், மயிலாடுதுறை தெற்கு-மோகன்குமார், நாகப்பட்டினம் வடக்கு-அருட் செல்வன், நாகப்பட்டினம் தெற்கு-செல்வராஜ், கடலூர் வடக்கு-அறிவுடை நம்பி, கடலூர் மையம்-நீதிவள்ளல், கடலூர் மேற்கு-திராவிடமணி, கடலூர் தெற்கு-மணவாளன், கடலூர் கிழக்கு-அரங்க-தமிழ் ஒளி, பெரம்பலூர் மேற்கு-ரத்தின வேல், பெரம்பலூர் கிழக்கு-கலையரசன் உள்ளிட்ட மேலும் சில மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    • கோடை வெப்பத்தை தணிக்கும் பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கிட வேண்டும்.
    • கோடைகாலம் முழுவதும் தண்ணீர்பந்தல் தொடர்ந்து செயல்பட வேண்டும்.

    திருப்பூர் :

    தி.மு.க. திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளரும், 4-வது மண்டல தலைவருமான இல.பத்மநாபன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, திருப்பூர் தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் பகுதியில் தண்ணீர் பந்தல் அமைத்து பொதுமக்களின் தாகத்தை தீர்த்து வைக்க வேண்டும். தண்ணீர் பந்தலில் குடிநீர், நீர்மோர், இளநீர், குளிர்பானம், தர்ப்பூசணி போன்ற கோடை வெப்பத்தை தணிக்கும் பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கிட வேண்டும்.

    மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், வார்டு, கிளை நிர்வாகிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் தகுந்த ஏற்பாடுகளை செய்து கோடைகாலம் முழுவதும் தண்ணீர்பந்தல் தொடர்ந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

    • 230 கோடி ரூபாய் செலவில் சாலை விரிவாக்க பணி நெல்லிக்குப்பம் பகுதியில் நடைபெற்று வருகிறது.
    • சாலை விரிவாக்க பணி மற்றும் கால்வாய் கட்டும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    கடலூர்:

    கடலூர் கோண்டூர் - மடப்பட்டு வரை 230 கோடி ரூபாய் செலவில் சாலை விரிவாக்க பணி நெல்லிக்குப்பம் பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அதிகாரிகள் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், சாலை விரிவாக்க பணி மற்றும் கால்வாய் கட்டும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இதனை கண்டித்து அரசியல் கட்சி நிர்வாகிகள், சமூக அமைப்பினர்கள் மற்றும் கவுன்சிலர்கள் பொதுமக்கள் வடிகால் வாய்க்கால் கட்டும் பணியை தடுத்து நிறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர். 

    இந்த நிலையில் நெல்லிக்குப்பம் கிராம நிர்வாக அலுவலர் தர்மராஜ் கொடுத்த புகாரின் நெல்லிக்குப்பம் போலீசார் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன் உட்பட 20 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் நெல்லிக்குப்பம் பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டு வருகிறது.

    • 5-வது முறையாக மாவட்ட செயலாளராக தேர்வு செய்யப்பட்ட திருப்பத்தூரில் அமைச்சர் பெரியகருப்பனுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • அமைச்சர் பெரிய கருப்பனுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்ட தி.மு.க. செயலாளராக அமைச்சர் பெரியகருப்பன் 5-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து திருப்பத்தூர் அண்ணா சாலையில் ஒன்றிய, பேரூர் சார்பில் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் அமைச்சர் பெரியகருப்பனுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். முன்னதாக அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    அதனை தொடர்ந்து திருப்பத்தூர், சிங்கம்புணரி, நெற்குப்பை, எஸ்.புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஒன்றிய தலைவர்கள், நகர செயலாளர்கள், பேரூராட்சி தலைவர்கள்,ஊராட்சி மன்ற தலைவர்கள், தொண்டர்கள் என பலரும் அமைச்சருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். சில தினங்களுக்கு முன்பு ஊரகத் வளர்ச்சி துறையை அகில இந்திய அளவில் தமிழகம் 3-வது இடத்தில் வருவதற்கு சிறப்பாக செயல்பட்டதற்காக அமைச்சர் பெரிய கருப்பனுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ம.தி.மு.க. புதிய அலுவலகம் திறப்பு விழா நாளை நடைபெறுகிறது.
    • வைகோ ‘இளமுகில்’ வளாகம் திறப்பு விழாவில் பங்கேற்கிறார்.

    திருப்பூர் :

    ம.தி.மு.க. திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் ஆர்.நாகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருப்பூர் மாநகர் மாவட்ட ம.தி.மு.க. புதிய அலுவலகம் திருப்பூர் அவினாசி ரோடு, காந்திநகர் ஈ.பி.காலனியில் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நாளை (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.

    விழாவில் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு புதிய அலுவலக கட்டிடத்தை திறந்துவைத்து பேசுகிறார். இதையடுத்து காலை 11 மணிக்கு தாராபுரம் ரோடு வித்யா கார்த்திக் திருமண மண்டபத்தில் நடைபெற்று வரும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில மாநாட்டில் கலந்துகொண்டு பேசுகிறார். அன்று மாலை 5 மணிக்கு திருப்பூர் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர், வழக்கறிஞர் இ.என்.கந்தசாமி, தமயந்தி கந்தசாமி ஆகியோரின் புதிய அலுவலக கட்டிடம் 'இளமுகில்' வளாகம் திறப்பு விழாவில் பங்கேற்கிறார். பின்னர் மாலை 6 மணி அளவில் பல்லடம் ரோட்டில் உள்ள எஸ்.ஏ.காதர் சலிமா திருமண மண்டபத்தில் நடைபெறும் 'இளமுகில்' வளாகம் திறப்பு விழா வாழ்த்தரங்க நிகழ்ச்சியில் வைகோ கலந்து ெகாள்கிறார். இதைதொடர்ந்து திருப்பூர் மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பில் நடைபெறும் செயல் வீரர்கள் கூட்டத்தில், பூர்த்தி செய்யப்பட்ட புதிய உறுப்பினர் படிவங்களை பெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு,சிறப்புரையாற்றுகிறார். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொள்ளும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திளாக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • புதிய தமிழகம் கட்சி ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கனகராஜ் தலைமையில் நடந்தது.
    • 500-க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்று நெல்லை கே.டி.சி நகரில் இருந்து அணி திரண்டு சென்று பங்கேற்றிட வேண்டும் என்று கனகராஜ் பேசினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தூத்துக்குடியில் கட்சியின் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கனகராஜ் தலைமையில் நடந்தது.

    மாநில துணைப் பொதுச்செயலாளர்கள் கதிரேசன், சுப்பிரமணியன், பாலசுந்தரராஜ், மாநில துணை அமைப்பு செய லாளர்கள் கிருபைராஜ், லிங்கராஜ், மாநில நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் கரு.ராஜசேகரன், மன்சூர்அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட துணை செயலாளர் மருதன்வாழ்வு ரவி வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் அய்யர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆலோசனை களை வழங்கி பேசினார். கூட்டத்தில், தூத்துக்குடி மாவட்ட புதிய தமிழகம் கட்சி செயலாளர் கனகராஜ் பேசியதாவது:-

    வீரவணக்க நினைவஞ்சலி

    வரும் 23-ந் தேதி நெல்லை கலெக்டர் அலுவலகம் அருகேயுள்ள தாமிரபரணி ஆற்றில் கூலி உயர்வுக்காக போராடி உயிர் நீத்த 17மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களின் உயிர் தியாகத்திற்கு வீரவணக்க நினைவஞ்சலி செலுத்தப்படுகிறது.

    வீரவணக்க நினைவஞ்சலி, வீரவணக்க பேரணி மற்றும் அதனைத்தொடர்ந்து அன்று மாலையில் தச்சநல்லூரில் புதிய தமிழகம் கட்சி நிறுவன தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி தலைமையில் வீரவணக்க பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

    வீரவணக்க நினைவஞ்சலி மற்றும் வீரவணக்க பொதுக்கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து ஒரு ஒன்றியத்திற்கு 50வாகனம் என குறைந்தது 500க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்று நெல்லை கே.டி.சி நகரில் இருந்து அணி திரண்டு சென்று பங்கேற்றிட வேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில், மாநில தொண்டரணி அமைப்புக் குழு அசோக்குமார், மாநில மகளிரணி அமைப்பாளர் சரஸ்வதி, மாநில இளைஞரணி அமைப்பாளர் மாரிமுத்துகிருஷ்ணன், மாவட்ட துணை செயலாளர்கள் பெருமாள், அதிக்குமார்குடும்பர், ஒன்றிய செயலாளர்கள் தூத்துக்குடி செந்தூர் பாண்டியன், ஓட்டப்பிடாரம் ஜேசிபி.முருகன்(மேற்கு), மனோகரன்(கிழக்கு), ஆழ்வை கேசவன், விளா த்திக்குளம் பெருமாள் (தெற்கு), உமையன்(கிழக்கு), கோவில்பட்டி சண்முகநாதன், கருங்குளம் சின்னத்துரை, கோவில்பட்டி நகர செயலாளர் மாடசாமி, தூத்துக்குடி மாநகர துணை செயலாளர் துரை, மாநகர இளைஞரணி செயலாளர் மாரியப்பன், மாநகர மீனவரணி செயலாளர் பாலமுருகன் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். தூத்துக்குடி மாநகர செயலாளர் ரமேஷ், நன்றி கூறினார்.

    • தமிழகம் முழுவதும் கழகத்தை பலப்படுத்தும் பணிகளை விரைவு படுத்திட மக்கள் செல்வர் உத்தரவிட்டு உள்ளார்.
    • வெற்றியை பரிசளிக்க நாம் அயராது பணியாற்ற வேண்டும்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின், ராயபுரம் பகுதி கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் மேயருமான அ.விசாலாட்சி தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். மாவட்டக் கழக அவைத் தலைவர் பாலுசாமி,மாவட்ட கழக பொருளாளர் சேகர், துணைச் செயலாளர்கள் சூர்யா செந்தில், புல்லட் ரவி, மாவட்டக் கழக இணைச்செயலாளர் ஹாஜிரா பானு,மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ரத்தினசாமி, பொதுக்குழு உறுப்பினர் உத்திராபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் மேயருமான அ.விசாலாட்சி பேசும்போது கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் கழகத்தை பலப்படுத்தும் பணிகளை விரைவு படுத்திட மக்கள் செல்வர் உத்தரவிட்டு உள்ளார். வருகிற பாராளுமன்ற தேர்தலில் சுறுசுறுப்பாக பணியாற்ற வேண்டி இருக்கிறது. ஏற்கனவே நடந்த தேர்தல்களை விட மிகவும் சிறப்பாக செயல்பட வேண்டும். அதற்காக கட்சியில் புதிய உறுப்பினர்களை இணைக்க வேண்டும். ஒவ்வொரு வார்டு, பகுதிகளில் உள்ள இளம் வாக்காளர்களை கட்சியில் இணைத்து உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

    பகுதி கழகங்கள் பிரிக்கப்பட்டு மேலும் நிர்வாகிகள் நியமிக்கப்பட இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் வார்டில் நிர்வாகிகளையும், உறுப்பினர்களையும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சிக்கு முழுமையாக அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் மக்கள் செல்வருக்கு மிகப்பெரிய வெற்றியை பரிசளிக்க நாம் அயராது பணியாற்ற வேண்டும். இவ்வாறு மாவட்ட செயலாளர் அ.விசாலாட்சி பேசினார்.கூட்டத்தில், ராயபுரம் பகுதி பொறுப்பாளர் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ×