இரணியல் அருகே நடிகர் விக்ரம் ரசிகர் மன்ற மாவட்ட செயலாளர் விபத்தில் பலி

இரணியல் மேலத்தெருவில் ஒரு பேக்கரி கடையில் மிட்டாய் போடும் தொழில் செய்து வந்தார்.பாலு நேற்று மாலை வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
இரணியல் அருகே நடிகர் விக்ரம் ரசிகர் மன்ற மாவட்ட செயலாளர் விபத்தில் பலி
Published on

இரணியல்:

நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் தெப்பக்குளம் வடக்குத்தெருவை சேர்ந்தவர் பாலு (வயது 46). நடிகர் விக்ரம் ரசிகர்கள் மன்ற மாவட்ட செயலாளராக இருந்தவர். இரணியல் மேலத்தெருவில் ஒரு பேக்கரி கடையில் மிட்டாய் போடும் தொழில் செய்து வந்தார். பாலு நேற்று மாலை வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அவர் வில்லுக்குறி தாண்டி தோட்டியோட்டில் வந்தபோது பின்னால் வேகமாக வந்த லாரி, இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

இதில் மோட்டார் சைக்கிளுடன் தூக்கி வீசப்பட்ட பாலு தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்தில் பலியானார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து பாலுவின் மனைவி துர்காதேவி கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற லாரியை அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா பதிவுகள் மூலம் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com