கரூர் கூட்ட நெரிசல்- தலைமறைவாக இருந்த த.வெ.க. மாவட்டச் செயலாளர் மதியழகன் கைது

ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் பாதிக்கப்பட்டவர்களிடம் இந்த 2-வது நாளாக விசாரணை நடத்தினார்.மதியழகன் உள்ளிட்டோர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த நிலையில் கைது.
கரூர் கூட்ட நெரிசல்- தலைமறைவாக இருந்த த.வெ.க. மாவட்டச் செயலாளர் மதியழகன் கைது
Published on

கரூரில் தமிழக வெற்றிக்கழக பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் 50க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஒரு நபர் ஆணைய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் பாதிக்கப்பட்டவர்களிடம் இந்த 2-வது நாளாக விசாரணை நடத்தினார்.

காவல்துறை சார்பில் கரூர் டிஎஸ்பி செல்வராஜ் நியமிக்கப்பட்டு தனியாக விசாரணை நடத்தப்பட்டு வந்தது. அவர் ஐந்துக்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைத்து விசாரணையை தீவிரபடுத்தினார்.

இந்த நிலையில் டிஎஸ்பி மாற்றம் செய்யப்பட்டு கரூர் கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரேமானந்த் புதிய விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

அவர் இன்று சம்பவ இடமான வேலுச்சாமி புரத்தை பார்வையிட்டு விசாரணையை தொடங்கினார்.

இதற்கிடையே, கரூர் விஜய் பிரச்சாரத்தில் 41 பேர் பலியான வழக்கில் த.வெ.க. பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தை இரவுக்குள் கைது செய்ய போலீஸ் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், இந்த விவகாரத்தில், தவெக கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதியழகன் உள்ளிட்டோர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த நிலையில், கரூரில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com