என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தி.மு.க. தெற்கு மாவட்ட பகுதியில் தண்ணீர்பந்தல் அமைத்து மக்களின் தாகம் தீர்க்க வேண்டும் - மாவட்ட செயலாளர் அறிக்கை
Byமாலை மலர்8 April 2023 6:32 AM GMT
- கோடை வெப்பத்தை தணிக்கும் பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கிட வேண்டும்.
- கோடைகாலம் முழுவதும் தண்ணீர்பந்தல் தொடர்ந்து செயல்பட வேண்டும்.
திருப்பூர் :
தி.மு.க. திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளரும், 4-வது மண்டல தலைவருமான இல.பத்மநாபன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, திருப்பூர் தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் பகுதியில் தண்ணீர் பந்தல் அமைத்து பொதுமக்களின் தாகத்தை தீர்த்து வைக்க வேண்டும். தண்ணீர் பந்தலில் குடிநீர், நீர்மோர், இளநீர், குளிர்பானம், தர்ப்பூசணி போன்ற கோடை வெப்பத்தை தணிக்கும் பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கிட வேண்டும்.
மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், வார்டு, கிளை நிர்வாகிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் தகுந்த ஏற்பாடுகளை செய்து கோடைகாலம் முழுவதும் தண்ணீர்பந்தல் தொடர்ந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
Next Story
×