search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாளந்தூர் ஊராட்சி"

    • ஆத்துமேடு பகுதிக்கு மின் வயர் செல்லும் மின் கம்பம் ஒன்று உடைந்து விழுந்தது.
    • முனீஸ்வரன் கோவில் டிரான்ஸ்பார்மரில் இருந்து ஆத்துமேடு செல்லும் மின் சப்ளை கடந்த சில நாட்களாக தடைபட்டுள்ளது.

    பெரியபாளையம்:

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் வெயில் வாட்டி எடுத்து வருகிறது. இருப்பினும், ஒரு சில இடங்களில் மாலை நேரங்களில் மேகமூட்டம் ஏற்பட்டு பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.

    இதனால் ஒரு சில இடங்களில் மின்தடை ஏற்பட்டும், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டும் பொதுமக்கள் பல்வேறு வகையில் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இவற்றையும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் நடைவடிக்கை எடுத்து பிரச்சினைகளுக்கு தீர்வு காண்கின்றனர்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் திருவள்ளூரின் மையப் பகுதியில் உள்ள புகழ்பெற்ற அம்மன் கோவிலின் வேப்பமரம் வேரோடு சாய்ந்தது. அதனை பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் அதே இடத்தில் கிரேன் மூலம் நட்டு வைத்தனர்.

    இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் மாளந்தூர் ஊராட்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்பொழுது முனீஸ்வரன் கோவில் அருகே உள்ள டிரான்ஸ்பார்மரில் இருந்து ஆத்துமேடு பகுதிக்கு மின் வயர் செல்லும் மின் கம்பம் ஒன்று உடைந்து விழுந்தது. அப்பொழுது மின் தடை ஏற்பட்டது.

    இச்சம்பவத்தில் யாருக்கும் அதிர்ஷ்டவசமாக பாதிப்பு ஏற்படவில்லை. இந்நிலையில், ஊத்துக்கோட்டை துணை மின் நிலையத்தில் இருந்து வந்த மின்வாரிய அதிகாரிகள் ஆத்துமேடு பகுதிக்கு செல்லும் மின் வயர்களை துண்டித்து விட்டு மின்சார சப்ளை செய்து விட்டு சென்றனர்.

    இதனால் முனீஸ்வரன் கோவில் டிரான்ஸ்பார்மரில் இருந்து ஆத்துமேடு செல்லும் மின் சப்ளை கடந்த சில நாட்களாக தடைபட்டுள்ளது. இதனால் பத்துக்கு மேற்பட்ட விவசாயிகளின் மின் மோட்டார்கள் இயக்க முடியாத அவல நிலை நீடித்து வருகிறது.

    தற்போது குருவை சாகுபடிக்கு நாற்றங்கால் காப்பாற்ற தண்ணீர் தேவைப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு மின் கம்பத்தை மாற்றி மின் சப்ளை செய்ய கிராம மக்களும் விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். மின்கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும் என மின்வாரிய துறையின் வாட்ஸ் அப் எண்ணில் விவசாயிகள் புகார் மனு அனுப்பியும் எந்த பயனும் இல்லை என்று வேதனையுடன் தெரிவித்தனர்.

    ×