search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாநில தேர்தல்"

    • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் பாலகிருஷ்ணன் பேச்சு
    • தி.மு.க. ஆட்சி பெண்களுக்கு உரிமை தொகை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநாடு நடந்தது. மாவட்ட செயலாளர் செல்லச் சாமி தலைமை தாங்கினார்.

    மாவட்ட செயற்குழு உறுப்பினர் அந்தோணி முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் பா லகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதா வது:-

    இந்தியாவில் நாளுக்கு நாள் வன்முறை அதிகரித்து வருகி றது. மணிப்பூரில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சூறையாடப்பட்டுள் ளது. 100 மேற்பட்ட தேவாலயங்கள் இடிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி விவாதிக்க பிரதமரை அழைத்தபோது எந்த பதிலும் இல்லை.

    நாட்டில் ஜனநாயகம் அழிக்கப்பட்டு வருகிறது. முன்னாள் ஜனாதிபதி தலைமையில் ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவது குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. ஜனநாயகத்தை அடிப்படை யாக கொண்டு இந்த நாட்டில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கோட்பாடு எந்த காலத்திலும் பொருந்தாது. சட்டசபையை கலைக்கும் இத்தகைய நடவடிக்கை ஏற்புடைய தல்ல.

    கடற்கரை பாதுகாப்பு திருத்த சட்டம் மற்றும் வன பாதுகாப்பு உரிமை திருத்த சட்டம் ஆகியவற்றை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும். இந்த 2 சட்டங்க ளும் நிறைவேற்றப்பட்டால் வனங்கள் கார்ப்பரேட் நிறு வனங்களுக்கு செல்லக்கூ டும். அதேபோல் தான் கடற்கரை களை பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்க ளுக்கு தாரை வார்க்கும் இந்த சட்டமும் நிறை வேற்றப்படுகிறது.

    குமரி மாவட்டத்தில் வீடு கட்டுவதற்கு ஜல்லி கற்கள் கிடைப்பதில்லை. ஆனால் கேரளாவிற்கு கனிம வளங்கள் கடத்தப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத் தில் ரப்பருக்கு நியாயமான விலை கிடைக்கவில்லை. குமரியில் ஹெலிகாப்டர் தளம் அமைக்க வேண்டும். குமரி மாவட்டத்தில் மண்டல புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும். மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து தமிழகம் முழுவதும் வருகிற 7-ந்தேதி ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும்.

    இந்தியா கூட்டணியின் சாதனையால் கியாஸ் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. இந்தியா கூட்டணியை கண்டு மத்திய அரசு பயந்துள்ளது. கார்ப்ப ரேட் நிறுவனங்கள் வாங்கிய ரூ.15.50 லட்சம் கோடியை மத்திய அரசு தள்ளுபடி செய்துள்ளது. மத்திய அரசு ரூ.7.50 லட்சம் கோடி முறைகேடு நடந்திருப்பதாக மத்திய அரசின் தணிக்கை துறை அதிகாரி கூறியுள்ளார். இதற்கு ஏன் மோடியோ, அமித்ஷாவோ, அண்ணா மலையோ வாய் திறக்காமல் உள்ளனர்.

    இந்த ஆண்டு 5 மாநிலங்களில் நடக்க இருக்கும் தேர்தலில் பாரதிய ஜனதா படுதோல்வி யடையும். இந்தியா கூட்டணி தேர்தலில் மகத்தான வெற்றி பெறும். வருகிற பாராளு மன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்பது தீர்க்கமாகி விட்டது. தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி பெண்களுக்கு உரிமை தொகை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வரவேற்கிறது. இதில் உள்ள சில நிபந்தனைகளை தமிழக அரசு தளர்த்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முடிவில் ரகுபதி நன்றி கூறினார்.

    • திரிபுரா மாநில சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் ஜனவரி 21ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • வேட்பு மனு பரிசீலனை ஜனவரி 31ம் தேதியும், வேட்பு மனு வாபஸ் பிப்ரவரி 2ம் தேதி எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    நாகலாந்து, மேகாலயா, திரிபுரா ஆகிய 3 மாநிலங்களின் சட்டசபை பதவிக்காலம் மார்ச் மாதம் நிறைவடைய உள்ளதால், தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

    இந்நிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையம் 3 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் நடைபெறும் தேதியை இன்று அறிவித்துள்ளது.

    திரிபுரா மாநில சட்டசபை தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 16ம் தேதி நடைபெறும் எனவும், பிப்ரவரி மாதம் 27ம் தேதி நாகாலாந்து, மேகாலயா சட்டசபை தேர்தல்கள் நடைபெறுவதாகவும் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

    திரிபுரா மாநில சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் ஜனவரி 21ம் தேதி தொடங்கும் என்றும், மனு தாக்கல் செய்ய ஜனவரி 30 கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    வேட்பு மனு பரிசீலனை ஜனவரி 31ம் தேதி நடைபெறும், வேட்பு மனுக்களை வாபஸ் பிப்ரவரி 2ம் தேதி கடைசி நாள். அதன்பின்னர் பிப்ரவரி 16ம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு, மார்ச் 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

    இதேபோல் மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களில் ஜனவரி 31ம் தேதி முதல் பிப்ரவரி 7ம் தேதி வரை வேட்பு மனுக்கள் பெறப்படும். பிப்ரவரி 8ம் தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதி வாய்ந்த மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும். வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கு பிப்ரவரி 10ம் தேதி கடைசி நாள். பிப்ரவரி 27ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடத்தப்பட்டு, மார்ச் 2ம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ×