என் மலர்tooltip icon

    இந்தியா

    3 மாநில சட்டசபை தேர்தல் நடைபெறும் தேதி அறிவிப்பு
    X

    3 மாநில சட்டசபை தேர்தல் நடைபெறும் தேதி அறிவிப்பு

    • திரிபுரா மாநில சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் ஜனவரி 21ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • வேட்பு மனு பரிசீலனை ஜனவரி 31ம் தேதியும், வேட்பு மனு வாபஸ் பிப்ரவரி 2ம் தேதி எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    நாகலாந்து, மேகாலயா, திரிபுரா ஆகிய 3 மாநிலங்களின் சட்டசபை பதவிக்காலம் மார்ச் மாதம் நிறைவடைய உள்ளதால், தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

    இந்நிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையம் 3 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் நடைபெறும் தேதியை இன்று அறிவித்துள்ளது.

    திரிபுரா மாநில சட்டசபை தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 16ம் தேதி நடைபெறும் எனவும், பிப்ரவரி மாதம் 27ம் தேதி நாகாலாந்து, மேகாலயா சட்டசபை தேர்தல்கள் நடைபெறுவதாகவும் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    திரிபுரா மாநில சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் ஜனவரி 21ம் தேதி தொடங்கும் என்றும், மனு தாக்கல் செய்ய ஜனவரி 30 கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    வேட்பு மனு பரிசீலனை ஜனவரி 31ம் தேதி நடைபெறும், வேட்பு மனுக்களை வாபஸ் பிப்ரவரி 2ம் தேதி கடைசி நாள். அதன்பின்னர் பிப்ரவரி 16ம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு, மார்ச் 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

    இதேபோல் மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களில் ஜனவரி 31ம் தேதி முதல் பிப்ரவரி 7ம் தேதி வரை வேட்பு மனுக்கள் பெறப்படும். பிப்ரவரி 8ம் தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதி வாய்ந்த மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும். வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கு பிப்ரவரி 10ம் தேதி கடைசி நாள். பிப்ரவரி 27ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடத்தப்பட்டு, மார்ச் 2ம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×