search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாநில சாகச முகாம்"

    • சேலம், ஏற்காடு மலைப்பகுதியில் நான்கு நாட்கள் சாகச முகாம் நாளை முதல் 16.7.22 வரை நடைபெறுகிறது.
    • தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலை கழகத்திலிருந்து 150 மாணவ மாணவிகள் கலந்து கொள்ளகிறார்கள்.

    திருப்பூர் :

    மாநில நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் பெரியார் பல்கலை கழகம் இணைந்து சேலம், ஏற்காடு மலைப்பகுதியில் நான்கு நாட்கள் சாகச முகாம் நாளை முதல் 16.7.22 வரை நடைபெறுகிறது. இந்த முகாமில் தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலை கழகத்திலிருந்து மொத்தம் 150 மாணவ மாணவிகள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

    கோவை பாரதியார் பல்கலை கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளிலிருந்து 12 மாணவ மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு சாகச முகாமிற்கு செல்கிறார்கள். இதில் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு -2 மாணவன் ரத்தினகணேஷ் தேர்வாகி உள்ளார். இவர் இளங்கலை வேதியியல் துறை இறுதியாண்டு படிக்கிறார். இவருக்கு பாரதியார் பல்கலை கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளிலிருந்து தேர்வான ஒரே அரசு கல்லூரி மாணவன் என்ற பெருமை உள்ளது. மேலும் திருப்பூர் மாவட்டத்திலிருந்து தேர்வான ஒரே மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது. இம் முகாமில் மாணவ மாணவிகளுக்கு சாகச பயிற்சி, நெகிலி விழிப்புணர்வு மற்றும் சுத்தம் செய்தல், மலையேற்ற பயிற்சி, காய்கறி தோட்டம் அமைத்தல், கலை நிகழ்சிகள் மூலம் விழிப்புணர்வு போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும். மாணவனை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன், அலகு -2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வழியனுப்பி வைத்தனர்.

    கல்லூரி முதல்வர் கூறுகையில் இது அரசு கல்லூரிக்கு கிடைத்த அங்கீகாரம் என்றார். மேலும் மாணவனை தேர்வு செய்த மண்டல மாநில நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் செந்தில்குமார், பாரதியார் பல்கலை கழக ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை, பெரியார் பல்கலை கழக ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

    ×