search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாநகராட்சி பூங்கா"

    • திருப்பூர் மாநகராட்சி வெள்ளி விழா பூங்காவில் இன்று காலை முதல் ஏராளமான காதல்ஜோடியினர் குவிந்தனர்.
    • ஓட்டல்கள், ஐஸ்கிரீம் பார்களுக்கு சென்று தங்களுக்கு விருப்பப்பட்ட உணவுகளை சாப்பிட்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி திருப்பூர் மாநகராட்சி வெள்ளி விழா பூங்காவில் இன்று காலை முதல் ஏராளமான காதல்ஜோடியினர் குவிந்தனர். அவர்கள் ஒருவருக்கொருவர் ரோஜா பூக்களை வழங்கி காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். மேலும் ஓட்டல்கள், ஐஸ்கிரீம் பார்களுக்கு சென்று தங்களுக்கு விருப்பப்பட்ட உணவுகளை சாப்பிட்டனர்.

    இதேப்போல் உடுமலை அமராவதி பூங்கா, அமராவதி அணை உள்ளிட்ட இடங்களிலும் காதல்ஜோடியினர் திரண்டனர்.

    மேலும் சில இளைஞர்கள், இளம்பெண்கள் இன்று தங்களது காதலை வெளிப்படுத்தினர். அசம்பாவித சம்பவங்களை தடுப்பதற்காக மாவட்டம் முழுவதும் பூங்கா உள்ளிட்ட இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    காதலர் தினத்தையொட்டி திருப்பூர் பூ மார்க்கெட்டுகளில் விதவிதமான ரோஜா பூக்கள் விற்பனைக்கு குவிக்கப்பட்டு இருந்தன. இருப்பினும் எதிர்பார்த்த அளவுக்கு விற்பனை இல்லை என வியாபாரிகள் தெரிவித்தனர்.  

    • பூங்காவுக்குள் குப்பைகளும் பிளாஸ்டிக் கழிவுகளும் அதிக அளவில் கிடக்கிறது.
    • இரண்டு தொட்டிகள் கட்டப்பட்ட மேற்கூரையும் அமைக்கப்பட்டுள்ளது.

    உடுமலை :

    உடுமலை நகராட்சிக்குட்பட்ட அன்னபூரணி நகரில் நகராட்சி பூங்கா உள்ளது. முன்பு இந்த பூங்காவில் பூ செடிகள் வளர்க்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தன. தற்போது இந்த பூங்கா பராமரிப்பு இல்லாமல் உள்ளதால் பூங்காவிற்குள் செடி கொடிகள் வளர்ந்து புதர் போல் காட்சியளிக்கிறது.

    அத்துடன் பூங்காவுக்குள் குப்பைகளும் பிளாஸ்டிக் கழிவுகளும் அதிக அளவில் கிடக்கிறது. மேலும் இந்த பூங்காவிற்குள் அந்த பகுதியில் சேகரமாகும் குப்பைகளை தொட்டியில் கொட்டி வைத்து அதை மக்க வைத்து இயற்கை உரம் தயாரிக்க திட்டமிடப்பட்டு சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு தொட்டிகள் கட்டப்பட்ட மேற்கூரையும் அமைக்கப்பட்டுள்ளது.

    ஆனால் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படாமல் அந்த பகுதியில் புதர் மண்டிக்கிடக்கிறது. அதனால் இந்த பகுதியில் விஷ ஜந்துக்கள் உள்ளதாகவும் அவை அந்த பகுதியில் குடியிருப்புகளுக்குள் புகுந்து விடுவதாகவும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். அதனால் இந்த பூங்காவிற்குள் வளர்ந்துள்ள செடி கொடிகளை அகற்றி செடிகளை வளர்த்த நகராட்சி நிர்வாகம் பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    ×