search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாதவிடாய்"

    • மாதவிடாய் கப் பெரும்பாலும் அலர்ஜியை ஏற்படுத்தாது.
    • பல ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம்.

    பெண்களுக்கு மாதவிடாய்க் காலப் பயன்பாட்டுக்குக் கிடைத்திருக்கக் கூடிய மிகப் பெரிய வரம், இந்த மாதவிடாய் கப் என்று கூறலாம். பார்ப்பதற்கு சிறிய அளவிலான கப் போன்று இருக்கும் இந்த மாதவிடாய் கப் பல வருடங்களாகப் பயன்பாட்டில் இருந்தாலும், இதனைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவே.

    சிலிகானால் செய்யப்பட்ட மாதவிடாய் கப், பெரும்பாலும் அலர்ஜியை ஏற்படுத்தாத வகையிலே தயாரிக்கப்படுகிறது. ஒருமுறை பயன்படுத்திய பின் வெந்நீர் கொண்டு சுத்தம் செய்த பின்னர், மறுமுறை பயன்படுத்தலாம். பல ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம். வெந்நீரில் சுத்தப்படுத்துவதால் அதன் தன்மையில் எந்த மாற்றமும் ஏற்படாது. கீழே விழுந்துவிடுமோ என்ற அச்சம் தேவையில்லை, அதற்கான வாய்ப்பும் இல்லை.

    சிறுநீர் வெளிவரும் வழி, இனப்பெருக்க வழி, மலத்துளை இவை மூன்றையும் தசை இறுக்கமாகப் பிடித்து வைத்திருக்கும். எனவே, மாதவிடாய் கப் பயன்படுத்தினால் தசைத் தளர்வால் அது இறங்கிவிடும் என்ற அச்சம் தேவையற்றது.

    காப்பர் டீ உள்ளிட்ட கர்ப்பத்தடை சாதனங்களைப் பயன்படுத்துபவர்கள் மாதவிடாய் கப் பயன்படுத்தும்போது, அந்தச் சாதனங்கள் தங்களது நிலையில் இருந்து மாறிவிடுமோ என்று அச்சப்படலாம். அவ்வாறு நிச்சயமாக நிகழாது.

    எப்படிப் பயன்படுத்த வேண்டும்?

    நின்ற நிலையில், அல்லது இண்டியன் டைப் டாய்லெட்டை பயன்படுத்தும்போது அமரும் நிலையில் அமர்ந்து மாதவிடாய் கப்பை பொருத்தவேண்டும். இப்படிச் செய்வது மிகச் சிறந்தது.

    பெண்ணின் இனப்பெருக்க உறுப்பில், மாதவிடாய் கப்பை இரண்டாக மடித்து உள்ளே செலுத்த வேண்டும். பின் அதனை விடுவிக்கும் போது பாராசூட் போன்று விரிவடையும். அதன்பின் அதனை மெதுவாகச் சுழற்றினால் சரியாகப் பொருந்திவிடும். அதேபோல, ரிமூவ் செய்யும்போது ஆள்காட்டி விரலால் அதற்குச் சிறிது அழுத்தம் கொடுத்தால் தானாக வெளிவந்துவிடும்.

    மாதவிடாய் கப்களில் பல அளவுகள் உள்ளன. பொருந்தும் அளவை தேர்ந்தெடுத்து வாங்கிக் கொள்ளலாம்.

    மாதவிடாய் கப்பை பயன்படுத்துவதில் மேலும் சந்தேகங்கள் இருப்பின் ஒரு மகப்பேறு மருத்துவரிடம் சென்று தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். பயன்படுத்தும்போது 8 மணி நேரத்திற்கு ஒருமுறை அதனை எடுத்துச் சுத்தப்படுத்தி மறுபடி பயன்படுத்துங்கள். நாப்கின் பயன்படுத்தும்போது ஏற்படக் கூடிய அலர்ஜி இதில் ஏற்படாது.

    ஒரே ஒரு முக்கியமான விஷயத்தை நினைவில் கொள்ளுங்கள். மாதவிடாய் கப்பை பயன்படுத்தும் போது காயம் தவிர்க்க விரல்களில் நகம் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

    • வயது அதிகரிக்கும்போது தசைகள் பலவீனமடையும்.
    • சத்தான உணவை உட்கொள்வது அவசியம்.

    50 வயதை நெருங்கும் பெண்கள் மெனோபாஸ் எனப்படும் மாதவிடாய் நிறுத்த சுழற்சியை எதிர்கொள்ள நேரிடும். அந்த சமயத்தில் உடல் ஆரோக்கியம் சார்ந்த சில முக்கியமான நடைமுறைகளை பின்பற்றாவிட்டால் உடல் எடை அதிகரிக்க தொடங்கிவிடும். மாதவிடாய் காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களுடன், முதுமை கால கட்டம், வாழ்க்கை முறை, மரபியல் ரீதியான காரணங்கள் போன்றவையும் உடல் பருமன் பிரச்சினைக்கு வழிவகுக்கலாம். அப்படி உடல் பருமன் பிரச்சினையை எதிர்கொண்டால் சுவாச கோளாறு, டைப்-2 நீரிழிவு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகளை அனுபவிக்க நேரிடும். மெனோபாஸ் காரணமாக ஏற்படும் எடை அதிகரிப்புடன் தொடர்புடைய சில பொதுவான உடல்நலப் பிரச்சினைகள் குறித்து பார்ப்போம்.

    நீரிழிவு நோய்: மாதவிடாய் நின்று மெனோபாஸ் காலகட்டத்தை எதிர்கொள்ளும் பெண்களில் சராசரி உடல் எடை கொண்டவர்களை விட, அதிக உடல் பருமன் கொண்ட பெண்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பு நான்கு மடங்கு அதிகம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

    இதய நோய்: மாதவிடாய் நின்ற பிறகு அதிக கொழுப்புள்ள உணவுகள் உண்பது, ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்களை பின்பற்றுவது இதய நோய் வருவதற்கான வாய்ப்புகளை அதிகப்படுத்தலாம். அதிலும் உடல் பருமன் பிரச்சினையை எதிர்கொண்டால் இதய நோய்க்கு ஆளாக நேரிடும்.

    உயர் ரத்த அழுத்தம்: மாதவிடாய் நிற்கும் மெனோபாஸ் காலகட்டத்தை நெருங்கும்போது ஈஸ்ட்ரோஜன் அளவு குறையக்கூடும். இத்தகைய குறைபாடு மாதவிடாய் நின்ற பிறகு உயர் ரத்த அழுத்தத்திற்கு வழிவகுத்துவிடும். மேலும் மாதவிடாய் காலத்தில் ஈஸ்ட்ரோஜன் அளவு குறையும் போது, இதயம் மற்றும் ரத்த நாளங்களில் விறைப்பு ஏற்பட்டும் உயர் ரத்த அழுத்தத்திற்கு வித்திடும்.

    உடல் மாற்றங்கள்: பெண்களை பொறுத்தவரை வயதுக்கு ஏற்ப, உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட தொடங்குகின்றன. வயது அதிகரிக்கும்போது தசைகள் பலவீனமடையும். வளர்சிதை மாற்றமும் படிப்படியாக குறையும். இத்தகைய மாற்றங்கள் மாதவிடாய் காலத்தில் எடை அதிகரிக்க வழிவகுக்கும். இருப்பினும், வேறு சில காரணங்களும் மாதவிடாய் நிறுத்தத்துடன் தொடர்புடையவை. சருமம் வறட்சி அடைவது, உடல் மெலிந்து போவது, முடி உதிர்தல் போன்றவை மாதவிடாய் நிறுத்தத்தின்போது ஏற்படும் மற்ற மாற்றங்களாகும். இத்தகைய மாற்றங்கள் பெண்கள் மனதில் எதிர்மறையான சிந்தனைகளை உருவாக்கி கவலை மற்றும் மனச்சோர்வுக்கு வழி வகுத்துவிடும்.

    ஆரோக்கியமான உணவு முறை: ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிக்க, பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் போன்ற சத்தான உணவை உட்கொள்வது அவசியம். பதப்படுத்தப்பட்ட உணவுகளை கூடுமானவரை தவிர்த்துவிட வேண் டும். கால்சியம், இரும்பு மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும். நிறைவுற்ற, கொழுப்பு குறைந்த உணவுகளை சாப்பிடலாம்.

    உடற்பயிற்சி: மாதவிடாய் நிற்கும் சமயத்தில் எதிர்கொள்ளும் உடல் பருமனை குறைப்பதற்கு மட்டுமல்லாமல், அந்த சமயத்தில் உருவாகும் மன நிலை மாற்றங்களை கட்டுப்படுத்தவும் உடற்பயிற்சி அவசியமானது. உடல்வாகுக்கு பொருத்தமான உடற்பயிற்சிகளை தேர்ந்தெடுக்கலாம். அவை எலும்புகளை பலவீனமடைய செய்யும் ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் நோய் பாதிப்பு அபாயத்தை குறைக்க உதவும்.

    சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் அடித்தல், தினமும் 30 நிமிடங்களாவது நடைப்பயிற்சி செய்தல் போன்ற பழக்கங்கள் வளர்சிதை மாற் றத்தை அதிகரிக்கவும், உடல் மற்றும் மனரீதியாகவும் ஆரோக்கியமாக உணரவும் உதவும். டம்ப்பெல்ஸ், 'எக்ஸ்சர்சைஸ் பேண்டு' எனப்படும் உடற்பயிற்சி செய்யும் பட்டைகள், யோகா போன்றவை தசைகள் மற்றும் எலும்புகளை வலுப்படுத்த உதவும். ஏரோபிக்ஸ் பயிற்சிகளை மேற்கொள்வது இதயம் மற்றும் நுரையீரலுக்கு நலம் சேர்க்கும்.

    தூக்கம்: உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க நன்றாக தூங்கி எழும் வழக்கத்தை கடைப்பிடிப்பதும் முக்கியமானது. இன்றைய காலகட்டத்தில் தூங்கச் செல்வதற்கு முன்பு மின்னணு சாதனங்களை பயன்படுத்துவதை தவிர்த்தாலே போதுமானது.

    மெனோபாஸ் என்பது பெண்களின் உடல் மற்றும் மன நிலையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தலாம். இருப்பினும் ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் மூலம் வாழ்க்கையை புதுப்பித்து, முழுமையாக வாழ முடியும்.

    • குறைந்த கொழுப்புள்ள உணவுகளையும் சத்தான உணவுகளையும் சாப்பிடவும்.
    • இறுக்கமான உள்ளாடைகள் அணியாதீர்கள்.

    மாதவிடாய் காலத்தில் சில பெண்களுக்கு மார்பகங்களில் வலி, வீக்கம், கனத்த உணர்வு போன்றவை இருக்கும். இந்த அறிகுறிகள் மாதவிடாய் தொடங்குவதற்கு சில நாட்கள் முன் ஆரம்பித்து, மாதவிடாய் காலத்தில் உச்சத்தை அடைந்து பிறகு தானாகவே சரியாகி விடக்கூடியவை. பயப்படத் தேவையில்லை. அதற்காக இப்படி எல்லா அறிகுறிகளையுமே சாதாரணம் என நினைத்து அலட்சியப்படுத்தவும் கூடாது.

    கடைப்பிடிக்க வேண்டியவை:

    குறைந்த கொழுப்புள்ள உணவுகளையும் சத்தான உணவுகளையும் சாப்பிடவும். இறுக்கமான உள்ளாடைகள் அணியாதீர்கள். இரவில் தூங்கும்போது உள்ளாடைகளை கழற்றிவிட்டு வசதியாக தூங்குங்கள். டீ, காஃபி குடிக்க வேண்டாம். மார்பகத்தில் சுடுதண்ணீர் வைத்து ஒத்தடம் கொடுக்கலாம். மாதவிலக்கு ஆரம்பிப்பதற்கு ஒரு வாரம் முன்னதாகவே உணவில் உப்பின் அளவைக் குறைத்துவிடவும்.

    • 75 சதவீத பெண்கள் மாதவிடாய் நின்ற காலத்தில் உடல்ரீதியான பிரச்சனைகளை சந்திப்பார்கள்.
    • உங்கள் எழும்பு ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துங்கள்.

    மெனோபாஸ் பெண்களின் உடலில் பல மாற்றங்களை ஏற்படுத்தும். அதன் அறிகுறிகளுள் எடை அதிகரிப்பு அல்லது பெண்ணுறுப்பு வறட்சி ஆகியவை அடங்கும். 75 சதவீத பெண்கள் மாதவிடாய் நின்ற காலத்தில் உடல்ரீதியாக பல பிரச்சனைகளுக்கு உள்ளாவார்கள்.

    உங்கள் உடலில் ஈஸ்ட்ரோஜன் உற்பத்தியின் சரிவு எலும்புகளில் உள்ள கால்சியத்தின் அளவை பாதிக்கும். இது எலும்பு அடர்த்தியில் குறிப்பிடத்தக்க சரிவை ஏற்படுத்துவதால் உங்களை இடுப்பு, முதுகெலும்பு மற்றும் பிற எலும்பு முறிவுகளுக்கு ஆளாக்கும். எனவே, உங்கள் எழும்பு ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துங்கள்.

    பால் பொருட்கள், கீரை வகைகள் போன்ற கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை உண்ணுங்கள்

    வைட்டமின் டி சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொள்ளுங்கள்

    தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள்

    மது அருந்துவதை, புகைப்பிடிப்பதை தவிக்கவும்.

    தலைச்சுற்றல் அல்லது இதயத் துடிப்பில் மாற்றம் போன்றவை மாதவிடாய் நிற்கும் பருவத்தில் நீங்கள் அனுபவிக்கும் ஒன்று. ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவதால் உங்கள் உடல் ஃப்ளெக்ஸிபில் ஆர்ட்ரீஸ்களை தக்க வைத்துக் கொள்ளலாம். இது இரத்த ஓட்டத்தை பாதிக்கும்.

    • 50 வயதுக்கு பிறகும் மாதவிடாய் வந்தால் அதை நிறுத்தவேண்டும் என்கிற விதிகள் எதுவும் கிடையாது.
    • அம்மாவுக்கு மெனோபாஸ் சீக்கிரம் வந்தால், நமக்கும் சீக்கிரம் வந்துவிடும் என்பதெல்லாம் உண்மை கிடையாது.

    மெனோபாஸ் வயது என்பது 50 தான். அந்த வயதுக்குப் பிறகும் மாதவிடாய் வருகிறது என்பதால் சம்பந்தப்பட்ட பெண்ணின் உடலில் இன்னும் ஹார்மோன் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிரது என்று அர்த்தம்.

    50-களிலும் மாதவிடாய் இருந்தால் கண்டிப்பாக கருப்பை ஸ்கேன் மெமோகிராம் பாப்ஸ்மியர் ஆகிய பரிசோதனைகளைச் செய்துகொள்ளவேணடும். 50 வயதுக்கு பிறகும் மாதவிடாய் வந்தால் அதை நிறுத்தவேண்டும் என்கிற விதிகள் எதுவும் கிடையாது. அதனால் கை வைத்தியம் போன்ற வேறு ஏதேனும் முயற்சிகளை செய்யாமலிருப்பதும் நல்லது.

    மாதவிடாய் நேரத்தில் உடலில் நிகழ்கிற ஹார்மோன் மாற்றங்களால் தலைவலி மயக்கம் போன்ற தொல்லைகள் வருவது இயல்பானதுதான். இது மாதவிடாய்க்கு முந்தைய நிலைமையான பெரி மெனோமாஸ் நேரத்திலும் வரும்.

    ஒரு சிலருக்கு மாதவிடாய் நேரத்தில் தலைவலி வரும் அந்த நேரத்தில் மாத்திரை எடுப்பது தப்பில்லை, அதே நேரம் எல்லா மாதமும் இப்படி தலைவலி வருவதுதான் தவறு. இவ்வாறு தொடர்வது ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற வேறு ஏதேனும் பிரச்சனைகள் உள்ளதா என பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

    அம்மாவுக்கு மெனோபாஸ் சீக்கிரம் வந்தால், நமக்கும் சீக்கிரம் வந்துவிடும் என்பதெல்லாம் மருத்துவரீதியாக உண்மை கிடையாது. இதெல்லாம் சம்பந்தப்பட்ட பெண்களின் உடல்நிலையைப் பொறுத்ததுதானே தவிர, மரபியல் சார்ந்தது கிடையாது.

    இந்தக் காலத்தில் காலதாமதமான திருமணம் காரணமாக, நாற்பதுகளில் மட்டுமல்ல, ஐம்பதுகளிலும் பெண்கள் இளமையாகவே உணர்கிறார்கள். அது அவர்களுடைய நடை, உடை, பாவனை என அத்தனை விஷயங்களிலும் பிரதிபலிப்பதை நாமெல்லாரும் பார்த்தும் வருகிறோம். இது வெளிப்படையாகத் தெரிகிற விஷயம். இதில் மறைமுகமானது இளமையான மனநிலை. இதன் காரணமாக, சில பெண்களுடைய மெனோபாஸ் வயது தள்ளிப்போக ஆரம்பித்திருக்கிறது.

    "50-களிலும் மாதவிடாய் இருந்தால் கட்டாயம் என்னென்ன பரிசோதனைகள் செய்துகொள்ள வேண்டும்?"

    "கருப்பை ஸ்கேன், மெமோகிராம், பாப்ஸ்மியர் ஆகிய பரிசோதனைகளைச் செய்துகொள்ள வேண்டும். 50 வயதுக்குப் பிறகும் மாதவிடாய் வந்தால் அதை நிறுத்த வேண்டும் என்கிற விதிகள் எதுவும் கிடையாது. அதனால், கை வைத்தியம் போன்ற வேறு ஏதேனும் முயற்சிகளை செய்யாமலிப்பது நல்லது."

    • மாதவிடாய் காலத்தில் பெண்களின் உடலில் இருந்து அசுத்த ரத்தம் வெளியேறுகிறது.
    • மாதவிடாய் சுழற்சியில் காலதாமதம் நேர்ந்தால் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

    மாதவிடாய் பற்றிய புரிதல் பெண்களிடையே கூட போதுமான அளவு இல்லாத நிலையே இன்றளவும் நிலவுகிறது. பெண்கள், இளைஞர்கள், பெரியவர்கள், படித்தவர்கள், படிக்காதவர்கள், கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள், பணக்காரர்கள், ஏழைகள் என பல பலதரப்பினரும் மாதவிடாய் பற்றி பொது வெளியில் பேசுவதற்கு தயங்கும் நிலையே நீடிக்கிறது. மாதவிடாய் பற்றி சமூகத்தில் பல்வேறு வகையான கட்டுக்கதைகளும் உலா வருகின்றன.

    கட்டுக்கதை -1: மாதவிடாய் காலத்தில் பெண்களின் உடலில் இருந்து அசுத்த ரத்தம் வெளியேறுகிறது. உண்மை: மாதவிடாயின் போது வெளியேறும் ரத்தம் அழுக்கானது, தூய்மையற்றது என்பது தவறான புரிதலாகும். மாதவிடாய் சுழற்சி என்பது பெண்களின் இனப்பெருக்க அமைப்பின் ஒரு அங்கம் என்பதை பலரும் புரிந்து கொள்வதில்லை. உடல் முழுவதும் பரவி இருக்கும் அதே ரத்தம்தான் மாதவிடாயின்போதும் வெளியேறுகிறது. கருப்பையின் உள்ளே இருந்து ரத்தமும், திசுக்களும் வெளியேற்றப்படும். எனவே ரத்தம் வெளிர் சிவப்பு அல்லது அடர் பழுப்பு நிறத்தில் காட்சி அளிக்கும். ரத்தத்துடன் ஆக்சிஜன் எதிர்வினை புரிவதன் காரணமாக ரத்தத்தின் நிறத்தில் மாற்றம் ஏற்படுகிறது.

    கட்டுக்கதை-2: மாதவிடாய் சுழற்சியில் காலதாமதம் நேர்ந்தால் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம். உண்மை: மாதவிடாய் தாமதமாவதை மட்டுமே கருத்தில் கொண்டு கர்ப்பமாக இருப்பதாக உறுதி செய்ய முடியாது. பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம், அதிக எடை, உடல்நல குறைபாடு, சமச்சீரற்ற உணவு பழக்கம், மன அழுத்தம் போன்றவற்றின் காரணமாக ஏற்படும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளும் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சினைக்கு காரணமாக அமையலாம். அதன் காரணமாகவும் மாதவிடாய் சுழற்சி காலதாமதமாகலாம். அது கர்ப்பம்தானா என்பதை அறிய மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

    கட்டுக்கதை-3: மாத விடாய் காலத்தில் தலை முடியை கழுவக்கூடாது. உண்மை: மாதவிடாயின்போது தனிப்பட்ட சுகாதார பழக்கவழக்கங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தாக வேண்டும். முக்கியமாக உடல் சுத்தம் பேணுவது அவசிய மானது. மாதவிடாயின்போது தலைமுடியை கழுவவோ, குளிக்கவோ கூடாது என்று எந்த ஆய்வும் கூறவில்லை. உண்மையில் சுடு நீரில் குளிப்பது மாதவிடாயின் போது ஏற்படும் வலிகள், பிடிப்புகளை போக்க உதவும்.

    கட்டுக்கதை-4: டம்பன் பயன்படுத்துவது கன்னித்தன்னையை பாதிக்கும். உண்மை: அதற்கும், கன்னித்தன்மைக்கும் சம்பந்தமில்லை. சைக்கிள் ஓட்டுதல் போன்ற கடுமையான நடவடிக்கைகள் காரணமாக கன்னித்தன்மை பாதிப்படைய வாய்ப்பு இருக்கிறது. ஒரு டம்பன் பயன்படுத்தும்போது அதற்கு இடமளிக்கும் வகையில் வளைந்து கொடுக்கும். மாதவிடாயுடன் தொடர்புடைய பெரும் பாலான கட்டுக்கதைகள் மூடநம்பிக்கையை அடிப்படையாக கொண்டவை. அவை தவறானவை மட்டுமல்ல, பெண்கள் மத்தியில் பாலின பாகுபாடு, கட்டுப்பாடுகளை விதிக்கும் நோக்கங்களை கொண்டவை. அதற்குள் சிக்கிக்கொள்ளாமல் மாதவிடாய் சுழற்சி இயல்பாக நடை பெறுகிறதா? என்பதை பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    கட்டுக்கதை-5: மாதவிடாய் காலத்தில் உடற்பயிற்சி செய்யக்கூடாது. உண்மை: மாதவிடாய் காலத்தில் உடற்பயிற்சி செய்வது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பதற்கு அறிவியல் பூர்வமாக எந்த ஆதாரமும் இல்லை. உண்மையில் அந்த சமயத்தில் உடற்பயிற்சி செய்வது உடல் மற்றும் மனதுக்கு நல்லது. மாதவிடாயின்போது ஏற்படும் தசை பிடிப்புகள் காரணமாக உருவாகும் வலியைக் குறைக்கவும் உதவும். மாதவிடாயின் போது சில யோகாசனங்கள் மேற்கொள்வது நன்றாக உணர வைக்கும். நடைப்பயிற்சி போன்ற வழக்கமான உடல் செயல்பாடுகளை மேற்கொள்வதால் எந்த பாதிப்பும் நேராது. மாதவிடாய் காலத்தில் என்னென்ன உடற்பயிற்சிகளை பாதுகாப்பாக செய்யலாம் என்பது குறித்து உடற்பயிற்சி நிபுணரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

    • மெனோபாஸ் பெண்களின் உடலில் பல மாற்றங்களை ஏற்படுத்தும்.
    • 75 சதவீத பெண்கள் மாதவிடாய் நின்ற காலத்தில் உடல்ரீதியாக பல பிரச்சனைகளுக்கு உள்ளாவார்கள்.

    குறிப்பிட்ட வயதை கடந்த பெண்கள் மெனோபாஸ் எனப்படும் மாதவிடாய் நிற்கும் பருவத்தை அனுபவிப்பார்கள். மெனோபாஸ் என்பது ஒரு வருடத்திற்கு மாதவிடாய் வருவதில் மாறுபாடு ஏற்பட்டு படிப்படியாக குறையும் என வரையறுக்கப்படுகிறது. இது பொதுவாக பெண்களின் 40களின் பிற்பகுதியில் அல்லது 50களின் முற்பகுதியில் நிகழும்.

    மெனோபாஸ் பெண்களின் உடலில் பல மாற்றங்களை ஏற்படுத்தும். அதன் அறிகுறிகளுள் எடை அதிகரிப்பு அல்லது பெண்ணுறுப்பு வறட்சி ஆகியவை அடங்கும். சரி, இந்த மெனோபாஸ் குறித்து பெண்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை குறித்து பார்க்கலாம்.

    மாதவிடாய் நிற்பதற்கான (மெனோபாஸ்) சராசரி வயது 51 என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். பெரும்பான்மையான பெண்களுக்கு 45 முதல் 55 வயதிற்குள் மாதவிடாய் ஏற்படுவது படிப்படியாக நிற்கிறது. கருப்பை செயல்பாடு குறைவதற்கான ஆரம்ப நிலைகள் பல ஆண்டுகளுக்கு முன்பே சில பெண்களுக்கு தொடங்கலாம். மற்றவர்கள் 50 வயதிற்கு பிறகும் மாதவிடாய் காலத்தைத் தொடர்ந்து கொண்டிருப்பார்கள்.

    75 சதவீத பெண்கள் மாதவிடாய் நின்ற காலத்தில் உடல்ரீதியாக பல பிரச்சனைகளுக்கு உள்ளாவார்கள். ஹாட் ஃப்ளாஷ் எனப்படும் அதிகப்படியான காய்ச்சல் வெப்பத்தின் திடீர் உணர்வு என்பது மாதவிடாய் நிற்கும் பெண்கள் அனுபவிக்கும் பொதுவான அறிகுறிகளாகும். பகலில் அல்லது இரவில் இதுபோன்ற உணர்வு ஏற்படலாம். சில பெண்கள் தசை மற்றும் மூட்டு வலியை அனுபவிப்பார்கள். இது ஆர்த்ரால்ஜியா அல்லது மனநிலை மாற்றங்கள் (mood swing) என்று அழைக்கப்படுகிறது.

    • மாதவிடாயின் போது வெளியேறும் ரத்தம் அழுக்கானது, தூய்மையற்றது என்பது தவறான புரிதலாகும்.
    • மாதவிடாய் பற்றி சமூகத்தில் பல்வேறு வகையான கட்டுக்கதைகளும் உலா வருகின்றன.

    ×