search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாதவன்"

    • நடிகர் மாதவன் இயக்குனராக அறிமுகமாகியுள்ள படம் 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்'.
    • இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் கதையை மையமாகக் கொண்டு இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

    பிரபல நடிகர் மாதவன் இயக்குனராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்'. இஸ்ரோ ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த திரைப்படத்தை இயக்குவதோடு மட்டுமல்லாமல் அதில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.


    ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்

    இப்படம் ஜூலை 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்த நிலையில் 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்' திரைப்படம் ரூ. 50 கோடியை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. 28 நாட்களாக கிட்டத்தட்ட 350 திரைகளில் ஓடிக்கொண்டிருப்பதால் ரூ. 25 கோடியை தாண்டியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மேலும், தென்னிந்தியாவை விட வட இந்தியாவில் இந்தப்படத்திற்கு பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதோடு வெளிநாட்டு உரிமை, தொலைக்காட்சி வியாபாரம் என்று மொத்தமாக மாதவனின் 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்' திரைப்படம் ரூ. 50 கோடியை வசூல் செய்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • நடிகர் மாதவன் இயக்குனராக அறிமுகமாகியுள்ள படம் 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்'.
    • இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் கதையை மையமாகக் கொண்டு இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

    பிரபல நடிகர் மாதவன் இயக்குனராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்'. இஸ்ரோ ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த திரைப்படத்தை இயக்குவதோடு மட்டுமல்லாமல் அதில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

     ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்

    சாம் சிஎஸ் பின்னணி இசையமைத்துள்ள இப்படத்தை ட்ரைகலர் பிலிம்ஸ், வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ், 27 இன்வெஸ்ட்மெண்ட்ஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ளது. இப்படம் ஜூலை 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்லாமல் திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலர் இந்த படத்திற்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    முன்னதாக நடிகர் ரஜினிகாந்த் படத்தைப் பார்த்து மாதவனுக்கு பாராட்டைத் தெரிவித்திருந்தார் இந்நிலையில், இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் மாதவன், விஞ்ஞானி நம்பி நாராயணனுடன் ரஜினியை சந்தித்து ஆசி பெற்றுள்ளார். மேலும், இந்த வீடியோவை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

    • நடிகர் மாதவன் இயக்குனராக அறிமுகமாகியுள்ள படம் 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்'.
    • இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் கதையை மையமாகக் கொண்டு இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

    பிரபல நடிகர் மாதவன் இயக்குனராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்'. இஸ்ரோ ராக்கெட் விஞ்ஞானி ஸ்ரீ நம்பி நாராயணனின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த திரைப்படத்தை இயக்குவதோடு மட்டுமல்லாமல் அதில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.


    ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்

    சாம் சிஎஸ் பின்னணி இசையமைத்துள்ள இப்படத்திற்கு சிர்ஷா ரே ஒளிப்பதிவு செய்துள்ளார். பிஜித் பாலா படத்தொகுப்பைக் கவனித்துள்ளார். ட்ரைகலர் பிலிம்ஸ், வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ், 27 இன்வெஸ்ட்மெண்ட்ஸ் நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டுள்ள இப்படம் ஜூலை 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

    இப்படத்திற்கு திரைப்பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வந்த நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன் படி இப்படம் வருகிற ஜூலை 26-ஆம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் வெளியாகவுள்ளது.


    நம்பி நாராயணன் குடும்பம்

    இதனை அமேசான் நிறுவனம் தங்களது சமூக வலைதளப்பக்கத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. மேலும், படத்தின் வெற்றியை நம்பி நாராயணன் அவரது குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை நடிகர் மாதவன் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

    • 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்' திரைப்படத்தை பார்த்த நடிகர் ரஜினி நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தார்.
    • இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாதவன் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

    நடிகர் மாதவன் இயக்குனராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்'. இஸ்ரோ ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த திரைப்படத்தை இயக்குவதோடு மட்டுமல்லாமல் அதில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இப்படம் ஜூலை 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் பலரின் பாராட்டுகளை பெற்று வருகிறது.


    இப்படம் குறித்து நேற்று நடிகர் ரஜினிகாந்த் சமூக வலைத்தளத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். அதில், ராக்கெட்ரி திரைப்படம் - அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டும் - குறிப்பாக இளைஞர்கள். நம் நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி வளர்ச்சிக்காக பல துன்பங்களுக்கு உள்ளாகி, தியாகங்கள் செய்து அரும்பாடுப்பட்ட பத்ம பூஷன் திரு.நம்பி நாராயணன் அவர்களின் வரலாறை மிகத் தத்ரூபமாக நடித்துப் படமாக்கி, இயக்குனராக தனது முதல் படத்திலேயே தலை சிறந்த இயக்குனர்களுக்கு இணையாக தானும் நிரூபித்திருக்கிறார் மாதவன். இப்படி ஒரு திரைப்படத்தைக் கொடுத்ததற்காக அவருக்கு என்னுடைய நன்றிகளும், பாராட்டுகளும் என்று ரஜினி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    மாதவன்

    மாதவன்

    இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்துக்கு நன்றி தெரிவிக்கு வகையில் மாதவன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "என்ன சொல்றது, எப்படி சொல்றதுன்னு தெரியல. இந்த பாராட்டு நம்பி நாராயணன் மற்றும் கடைசி வரைக்கும் போராடிய நம் படக்குழுவுக்கு தான் சேரும். ரஜினி சார் ரொம்ப நன்றி" என்று உருக்கமாக வீடியோ பகிர்ந்துள்ளார்.


    • ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட் படத்தின் மூலம் பிரபல நடிகர் மாதவன் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார்.
    • இப்படம் ஜூலை 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

    பிரபல நடிகர் மாதவன் இயக்குனராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்'. இஸ்ரோ ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த திரைப்படத்தை இயக்குவதோடு மட்டுமல்லாமல் அதில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

    ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்

    சாம் சிஎஸ் பின்னணி இசையமைத்துள்ள இப்படத்திற்கு சிர்ஷா ரே ஒளிப்பதிவு செய்துள்ளார். பிஜித் பாலா படத்தொகுப்பைக் கவனித்துள்ளார். ட்ரைகலர் பிலிம்ஸ், வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ், 27 இன்வெஸ்ட்மெண்ட்ஸ் நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டுள்ள இப்படம் ஜூலை 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் பலரின் பாராட்டுகளை பெற்று வருகிறது.

    இந்த படத்தில் நடிகர் சூர்யா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதற்காக சூர்யா எந்தவித சம்பளமும் பெறவில்லை என மாதவன் சமீபத்தில் கூறினார். இந்நிலையில், நடிகர் மாதவன் மற்றும் சூர்யா இருவரும் சமூக வலைதளத்தில் அவர்களின் நீண்டகால நட்பு மற்றும் படம் குறித்து பல விஷயங்களை பகிர்ந்து வந்தனர்.

    சூர்யா - மாதவன்

    அப்போது பேசிய மாதவன், " சூர்யா நடிப்பில் வெளியாகிய 'கஜினி' படத்தில் நடிப்பதற்கான முதல் வாய்ப்பு எனக்கு தான் கிடைத்தது. ஆனால் அந்தப் படத்தின் இரண்டாவது பாதி பிடிக்காததால் அந்த கதையை நிராகரித்து விட்டேன். தொடர்ந்து அந்தப் படத்தில் கமிட்டான சூர்யா, தன்னை வருத்திக்கொண்டு நடித்ததை பார்த்து நான் வியப்படைந்தேன்" என கூறினார்.

    • நடிகர் மாதவன் இயக்குனராக அறிமுகமாகியுள்ள படம் 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்'.
    • இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் கதையை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

    பிரபல நடிகர் மாதவன் இயக்குனராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்'. இஸ்ரோ ராக்கெட் விஞ்ஞானி ஸ்ரீ நம்பி நாராயணனின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த திரைப்படத்தை இயக்குவதோடு மட்டுமல்லாமல் அதில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். சாம் சிஎஸ் பின்னணி இசையமைத்துள்ள இப்படத்திற்கு சிர்ஷா ரே ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் ஜூலை 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்

    ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்

    இப்படத்தில் நடிகர்கள் சூர்யா மற்றும் ஷாருக்கான் ஆகியோர் கௌரவ வேடத்தில் நடித்துள்ளதாக மாதவன் முன்பே அறிவித்திருந்தார். ராக்கெட்ரி படம் திரைக்கு வர உள்ள நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் மாதவன் பேசியது சர்ச்சைக்குள்ளானது. அதன்பின் அதுகுறித்து விளக்கம் அளித்து மாதவன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.

    மாதவன் - ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்

    மாதவன் - ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்

    இந்நிலையில் தற்போது நடிகர் சூர்யா ராக்கெட்ரி ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் வீடியோவை மாதவன் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் விஞ்ஞானி நம்பி நாராயணனிடம், மாதவன் சூர்யாவை தன்னுடைய நெருங்கிய நண்பர் என்று அறிமுகப்படுத்திவைக்கிறார். நம்பி நாராயணன், தான் சூர்யா மற்றும் அவரின் தந்தை சிவகுமாரின் ரசிகன் என்று கூறுகிறார். இது வீடியோ குறித்து பதிவிட்டுள்ள மாதவன் நம்பி நாராயணன் சார் சூர்யா மற்றும் அவரது தந்தையின் படங்களின் தீவிர ரசிகர். என் சகோதரர் சூர்யாவால் மட்டுமே என்னை மிகவும் நன்றாக உணர முடியும் என்று பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


    • மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் சார்பில் சிறப்பு காட்சி டெல்லியில் திரையிடப்பட்டது.
    • விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு இந்தப் படம் சமர்ப்பிக்கப்படுகிறது.

    மூத்த விஞ்ஞானியும், இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையப் பொறியியல் வல்லுநருமான நம்பி நாராயணனின் வாழ்க்கையில் நிகழ்ந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள , ராக்கெட்ரி: தி நம்பி விளைவு திரைப்படத்தை இயக்கியுள்ள நடிகர் மாதவன், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    இந்நிலையில், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் சார்பில், ராக்கெட்ரி: தி நம்பி விளைவு திரைப்படத்தின் சிறப்பு காட்சி டெல்லியில் உள்ள சிரி ஃபோர்ட் அரங்கத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை செயலர் அபூர்வ சந்திரா, சிபிஐ முன்னாள் இயக்குநர் டி.ஆர்.கார்த்திகேயன், முன்னாள் ஐஜி பி.எம்.நாயர், மூத்த அதிகாரிகள் மற்றும் ராக்கெட்ரி திரைப்படக் குழுவினர் உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் பேசிய நடிகர் மாதவன், விண்வெளி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியாவின் ஆளுமையை போற்றும் படமாக இது இருக்கும் என்றார். விகாஸ் எஞ்சினை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய நம்பி நாராயணனுக்கு இந்தப் படம் சமர்ப்பிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

    அறிவியல் வளர்ச்சி மற்றும் மனிதவள மேம்பாடு ஆகியவற்றில் இந்தியாவின் திறமை குறித்து உலகிற்கு எடுத்துக்காட்டுவதாக இந்தப் படம் அமையும் என்றும் அவர் கூறினார். ராக்கெட்ரி: நம்பி விளைவு திரைப்படம் ஜூலை 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • நடிகர் மாதவன் இயக்குனராக அறிமுகமாகியுள்ள படம் 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்'.
    • இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் கதையை மையமாகக் கொண்டு இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

    பிரபல நடிகர் மாதவன் இயக்குனராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்'. இஸ்ரோ ராக்கெட் விஞ்ஞானி ஸ்ரீ நம்பி நாராயணனின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த திரைப்படத்தை இயக்குவதோடு மட்டுமல்லாமல் அதில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். சாம் சிஎஸ் பின்னணி இசையமைத்துள்ள இப்படத்திற்கு சிர்ஷா ரே ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் ஜூலை 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    ராக்கெட்ரி படம் திரைக்கு வர உள்ள நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது, அதில் மாதவான் பேசியதாவது, "ஆயிரம் ஆண்டுக்கு முன் நம் முன்னோர்கள் எழுதிய பஞ்சாங்கத்திற்கும், தற்போது உள்ள விஞ்ஞானத்திற்கும் தொடர்பு இருக்கிறது. நமது பஞ்சாங்கத்தில் கிரகங்கள் அதனுடைய ஈர்ப்பு விசை போன்றவற்றை ஆயிரம் வருடங்களுக்கு முன்பே எழுதி வைத்துள்ளனர். அந்த பஞ்சாங்கத்தில் இருக்கும் தரவுகள் தான் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்ட பாதையில் நமது செயற்கைகோள் வெற்றிகரமாக செல்ல உதவியாக இருந்தது" என்றார்.

    மாதவன் 

    மாதவன் 

    மாதவனின் இந்த கருத்து இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. பஞ்சாங்கத்தை வைத்துக்கொண்டு செவ்வாய் கிரகத்துக்கு செல்வது முடியாத காரியம் என்று சொல்லி அவரை பலரும் கேலி செய்தும், விமர்சித்தும் பதிவுகள் வெளியிட்டனர். இந்த கருத்து பரபரப்பான நிலையில் சர்ச்சைக்கு மாதவன் பதில் அளித்து வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "'பழைய பஞ்சாங்கம் என்று கேலி செய்வதற்கு நான் தகுதியானவன்தான். நான் அறியாமையில் இருந்துள்ளேன். ஆனால், நாம் இரண்டு என்ஜின்களுடன் செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட்டை அனுப்பிய சாதனையை மறுக்க முடியாது. நம்பி நாராயணனின் விகாஸ் என்ஜின் ஒரு ராக்ஸ்டார்" என்று தெரிவித்துள்ளார்.



    • நடிகர் மாதவன் இயக்குனராக அறிமுகமாகியுள்ள படம் 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்'.
    • இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் கதையை மையமாகக் கொண்டு இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

    பிரபல நடிகர் மாதவன் இயக்குனராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்'. இஸ்ரோ ராக்கெட் விஞ்ஞானி ஸ்ரீ நம்பி நாராயணனின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த திரைப்படத்தை இயக்குவதோடு மட்டுமல்லாமல் அதில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். சாம் சிஎஸ் பின்னணி இசையமைத்துள்ள இப்படத்திற்கு சிர்ஷா ரே ஒளிப்பதிவு செய்துள்ளார். பிஜித் பாலா படத்தொகுப்பைக் கவனித்துள்ளார். ட்ரைகலர் பிலிம்ஸ், வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ், 27 இன்வெஸ்ட்மெண்ட்ஸ் நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டுள்ள இப்படம் ஜூலை 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்' படக்குழுவினர்

    இதையடுத்து இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது அதில் இயக்குனர் மாதவன் கூறியதாவது, "விக்ரம் வேதா படம் முடிந்ததும், இஸ்ரோ விஞ்ஞானியின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களை வைத்து திரைப்படம் எடுக்க கூறி எனது நண்பர் பரிந்துரைத்தார். பாகிஸ்தான் ராணுவத்திற்கு தேசிய ரகசியத்தை தெரிவித்ததாக பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் சித்திரவதை செய்யப்பட்ட அந்த விஞ்ஞானி, சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு தான் குற்றமற்றவர் என்பதை நிரூபித்தார்.

    அவர் நாகர்கோவிலில் பிறந்த தமிழர் என்பது நம்மில் பலருக்குத் தெரியாது என்பதும், நாட்டின் முன்னேற்றத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு மிகவும் மகத்தானது என்பதும், பொதுமக்களின் பார்வையில் படாமல் இருப்பதும் ஏமாற்றமாக இருந்தது. அதனால்தான் நான் 'ராக்கெட்ரி' தயாரிக்க முடிவு செய்தேன்.

    இப்படம் இந்தியா, பிரான்ஸ், கனடா, ஜார்ஜியா மற்றும் செர்பியா ஆகிய நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது. ஃபிலிஸ் லோகன், வின்சென்ட் ரியோட்டா மற்றும் ரான் டோனாச்சி போன்ற புகழ்பெற்ற சர்வதேச நடிகர்களுடன், இந்திய திரையுலகின் முன்னணி நடிகர்களான  ஷாருக்கான் மற்றும் சூர்யா ஆகியோர் சிறப்புத் தோற்றங்களில் நடித்துள்ளனர்" என கூறியுள்ளார்.

    • முன்னணி நடிகரான மாதவன் தற்போது இயக்குனராக அறிமுகமாகியுள்ளார்.
    • இவர் இயக்கியுள்ள படத்தின் டிரைலர் உலகின் மிகப்பெரிய விளம்பரப்பலகையில் வெளியானது.

    இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'அலைபாயுதே' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகர் மாதவன். இதைத்தொடர்ந்து 'மின்னலே', 'டும் டும் டும்', போன்ற பல படங்கள் நடித்ததன் மூலம் தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டார். இவர் சமீபத்தில் நடித்த 'மாறா' திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது.

    நடிகர் மாதவன் 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணின் வாழ்க்கையை மையக்கருத்தாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் மாதவன் காதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக சிம்ரன் இணைந்துள்ளார்.

    மாதவன் - ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்

    மாதவன் - ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்

    இப்படம் ஜூலை 1-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மாதவன் மற்றும் படக்குழுவினர் புரோமோஷனுக்காக அமெரிக்கா முழுவதும் 12 நாட்கள் விளம்பர சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளனர். இதையடுத்து உலகின் மிகப்பெரிய விளம்பர பலகையான டைம்ஸ் ஸ்கொயரில் உள்ள நாஸ்டாக் பில்போர்டில் 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்' டிரைலர் ஒளிபரப்பப்பட்டது. அப்போது படக்குழுவினருடன் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் உடனிருந்தது குறிப்பிடத்தக்கது.

    ×