என் மலர்

  சினிமா செய்திகள்

  உலகின் மிகப்பெரிய விளம்பரப்பலகையில் வெளியான மாதவன் பட டிரைலர்
  X

  மாதவன்

  உலகின் மிகப்பெரிய விளம்பரப்பலகையில் வெளியான மாதவன் பட டிரைலர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • முன்னணி நடிகரான மாதவன் தற்போது இயக்குனராக அறிமுகமாகியுள்ளார்.
  • இவர் இயக்கியுள்ள படத்தின் டிரைலர் உலகின் மிகப்பெரிய விளம்பரப்பலகையில் வெளியானது.

  இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'அலைபாயுதே' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகர் மாதவன். இதைத்தொடர்ந்து 'மின்னலே', 'டும் டும் டும்', போன்ற பல படங்கள் நடித்ததன் மூலம் தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டார். இவர் சமீபத்தில் நடித்த 'மாறா' திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது.

  நடிகர் மாதவன் 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணின் வாழ்க்கையை மையக்கருத்தாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் மாதவன் காதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக சிம்ரன் இணைந்துள்ளார்.

  மாதவன் - ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்

  இப்படம் ஜூலை 1-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மாதவன் மற்றும் படக்குழுவினர் புரோமோஷனுக்காக அமெரிக்கா முழுவதும் 12 நாட்கள் விளம்பர சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளனர். இதையடுத்து உலகின் மிகப்பெரிய விளம்பர பலகையான டைம்ஸ் ஸ்கொயரில் உள்ள நாஸ்டாக் பில்போர்டில் 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்' டிரைலர் ஒளிபரப்பப்பட்டது. அப்போது படக்குழுவினருடன் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் உடனிருந்தது குறிப்பிடத்தக்கது.

  Next Story
  ×