search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவர்கள் விழிப்புணர்வு"

    • ஆண்டு தோறும் நவம்பர் 26ம் தேதி இந்திய அரசியல் அமைப்பு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
    • இதனை முன்னிட்டு திண்டுக்கல்லில் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு மனித சங்கிலி நடைபெற்றது.

    திண்டுக்கல்:

    சுதந்திர இந்தியாவின் அரசியல் அமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டதை நினைவு கூறும் வகையில் ஆண்டு தோறும் நவம்பர் 26ம் தேதி இந்திய அரசியல் அமைப்பு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 1949 ஆம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி அரசியலமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டது. 1950 ஜனவரி 26 அன்று முதல் நடைமுறைக்கு வந்தது. அரசியலமைப்பு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட நாளை நாம் குடியரசு தினமாக கொண்டாடி வரு கிறோம். இந்திய அரசிய லமைப்பின் முக்கியத்து வத்தை வலியுறுத்தும் வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட தினமான நவம்பர் 26ம் நாளை அரசியலமைப்பு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இதனை முன்னிட்டு திண்டுக்கல்லில் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு மனித சங்கிலி நடைபெற்றது. பெரியார் சிலை முதல், வெள்ளை விநாயகர் கோயில் வரை மாணவர்கள் மனித சங்கிலியில் ஈடுபட்ட னர். இதில் மகாத்மா காந்தி, நேரு, அம்பேத்கர், பாரதியார், திப்புசுல்தான், சின்ன மருது, சுபாஷ் சந்திர போஸ், வீரபாண்டிய கட்டபொம்மன் உள்ளிட்ட பல்வேறு விடுதலைப் போராட்ட வீரர்கள் வேடமணிந்து பங்கேற்றனர்.

    சட்டத்தின் முன் அனைவரும் சமம், கடமையை செய்வோம், உரிமையை கேட்போம், அடிப்படை உரிமை அனைவருக்கும் உரியது என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி மாணவர்கள் மனித சங்கிலி பேரணியில் ஈடுபட்டனர்.

    • பேரணியில் மஞ்சப்பை கொண்டு செல்வோம் என வாசகம்
    • மாணவர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    திருப்பத்தூர்:

    கந்திலி ஒன்றியம் கொரட்டி ஊராட்சியில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாமல் இருப்பது குறித்து பள்ளி மாணவ, மாணவிகள் பேரணிகொரட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு முன்பு விழிப்புணர்வு தொடங்கியது.

    நிகழ்ச்சிக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேமாவதி தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் முன்னிலை வகித்தார் விழிப்புணர்வு பேரணியை கொரட்டி ஊராட்சி மன்ற தலைவர் மணிமேகலை ஆனந்தகுமார் தொடங்கி வைத்து பேசினார் விழிப்புணர்வு பேரணியில் பயன்படுத்த மாட்டோம், மஞ்சப்பை கொண்டு செல்வோம், புல்லட் வாசகங்களை கூறிச் சென்றனர்.

    ஊர்வலம் மெயின் ரோடு வழியாக சேலம் கூட்ரோடு வரை சென்றது இறுதியில் ஊராட்சி செயலாளர் கோபி நன்றி கூறினார்.

    • உலகபோதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி திண்டுக்கல்லில் இன்று நடைபெற்றது.
    • அரசு அதிகாரிகள், காவல்துறையினர், மாணவர் அமைப்பினர், தன்னார்வலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    திண்டுக்கல்:

    உலகபோதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி திண்டுக்கல்லில் இன்று நடைபெற்றது. கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் விசாகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இந்த பேரணி சப்-கலெக்டர் ஆபீஸ் ரோடு, தலைமை தபால் நிலையம், பஸ் நிலையம், அரசு ஆஸ்பத்திரி வழியாக மீண்டும் கோட்டாட்சியர் அலுவலகத்தில் முடிவடைந்தது. இதில் கலந்து கொண்ட கல்லூரி மாணவ-மாணவிகள் போதைபொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அட்டைகளை கையில் ஏந்தியபடியும், கோசங்கள் எழுப்பியபடியும் சென்றனர்.

    பேரணியில் கூடுதல் ஆட்சியர் தினேஷ்குமார், கலால் உதவி ஆணையர் சண்முகம் மற்றும் அரசு அதிகாரிகள், காவல்துறையினர், மாணவர் அமைப்பினர், தன்னார்வலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×