search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவர்களுக்கு பேச்சு போட்டி"

    • கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு பழனி அரசு அருங்காட்சியகம் சார்பில் நடத்தப்படும் பேச்சு போட்டியில் 6 முதல் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு நடைபெறும்.
    • ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் ஒவ்வொரு பிரிவுக்கும் 5 மாணவர்கள் மட்டுமே போட்டியில் பங்கு பெற அனுமதி உண்டு.

    பழனி:

    பழனியில் அரசு அருங்காட்சியகம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு வருகிற 17-ம் தேதி பேச்சு போட்டி நடைபெற உள்ளது.

    கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு பழனி அரசு அருங்காட்சியகம் சார்பில் நடத்தப்படும் பேச்சு போட்டியில் 6 முதல் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தமிழகத்தில் கல்வி வளர்ச்சிக்கு காமராசர் ஆற்றிய தொண்டு மற்றும் மக்கள் தலைவர் காமராசர், காமராசரின் சமுதாய பற்று, 9 முதல் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் சுதந்திரத்துக்கு முன்னும் சுதந்திரத்துக்கு பின்னும் தமிழகத்தின் கல்வி நிலை, உயர்கல்வியில் தமிழகத்தின் வளர்ச்சி, கல்வி வளர்ச்சியில் தொழில்நுட்பத்தின் பங்கு போன்ற தலைப்புகளில் பேசலாம்.

    ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் ஒவ்வொரு பிரிவுக்கும் 5 மாணவர்கள் மட்டுமே போட்டியில் பங்கு பெற அனுமதி உண்டு. விருப்பமுள்ள மாணவர்கள் தங்கள் பள்ளியின் மூலமாக பெயரை 13-ம் தேதிக்குள் பதிவு செய்யலாம். 17-ம் தேதி காலை 10 மணிக்கு போட்டி தொடங்கும். போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் சான்றிதழும், வெற்றிப் பெற்றவர்களுக்கு நினைவு பரிசும், சான்றிதழும் வழங்கப்படும் என அருங்காட்சியக காப்பாட்சியர் குணசேகரன் தெரிவித்தார்.

    ×