search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மயில்ரங்கம் கோவில்"

    • கோவிலுக்குச் சொந்தமாக 650 ஏக்கா் நிலம் உள்ளது.
    • மக்கள் பிரதிநிதிகள், அரசியல் பிரமுகா்கள் பலா் கலந்து கொண்டனா்.

    வெள்ளகோவில்:

    திருப்பூா் மாவட்டம் வெள்ளக்கோவில் மயில்ரங்கம் ஈஸ்வரன் கோவிலில் 37 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடத்த ஆயத்தப்பணிகள் தொடங்கியுள்ளன.

    மயில்ரங்கம் அமராவதி ஆற்றங்கரையில் கல்வெட்டுத் தகவல்படி, விஜய நகரப் பேரரசா் கிருஷ்ண தேவராயா் ஆட்சியில் கி.பி. 1532ம் ஆண்டு தையல் நாயகி உடனமா் வைத்திய நாதேஸ்வரா் கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள இக்கோவில் 490 ஆண்டுகள் பழமையானது. கோவிலின் பல கோடி ரூபாய் மதிப்புடைய பல ஐம்பொன் சிலைகள் அறநிலையத் துறை வசம் உள்ளன. கோவிலுக்குச் சொந்தமாக 650 ஏக்கா் நிலம் உள்ளது.

    தற்போது சிதிலமடைந்து கிடக்கும் இக்கோவிலைப் புனரமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. கடந்த 9.9.1985க்கு பிறகு 37 ஆண்டுகளாக கோவிலில் குடமுழுக்கு விழா நடைபெறவில்லை. இந்நிலையில் வெள்ளக்கோவில் மற்றும் சேனாபதிபாளையம் கிராமப் பொதுமக்கள் சாா்பில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஆலோசனைக்கூட்டம் கோவிலில் நடைபெற்றது.

    இதில் திருப்பணிக்குழு அமைக்கவும், அறநிலையத் துறை அதிகாரிகள், அரசு ஸ்தபதியை வரவழைத்து ஆலோசனை பெறவும் முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் கோவில் செயல் அலுவலா் ராமநாதன் உள்பட மக்கள் பிரதிநிதிகள், அரசியல் பிரமுகா்கள் பலா் கலந்து கொண்டனா். 

    ×