search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மனவலிமை"

    • காவலர்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
    • யோகா பயிற்சியும் மூச்சுப் பயிற்சிகளும் அளிக்கப்பட்டது.

    திருப்பூர் :

    காவல்துறையில் பணியாற்றக்கூடிய காவலர்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் காவலர்க ளுக்கு சரியான உடற்பயிற்சி அல்லது மன வலிமையை ஊக்குப்படு த்தும் விதமாக யோகா பயிற்சி மேற்கொ ள்ளப்பட வேண்டும் என தமிழக சட்டம் ஒழுங்கு இயக்குனர் சங்கர் வலியுறுத்தினார். அதனை தொடர்ந்து திருப்பூர் மாநகர காவல் துறையில் பணியாற்ற க்கூடிய காவலர்களுக்கு மனவலிமையை ஊக்கப்படு த்தும் நோக்கத்துடன் மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபினபு உத்தரவின் பேரில் கொங்கு நகர் பகுதி காவல் உதவி ஆணையர் அணில் குமார் தலைமையில் ரயில் நிலையம் அருகில் உள்ள நஞ்சப்பா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி யில் காவலர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.இந்த யோகா பயிற்சியில் மன வலிமையை ஊக்குப்ப டுத்தும் யோகா பயிற்சியும் மூச்சுப் பயிற்சி களும் அளிக்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் வடக்கு காவல் நிலையம்,15 வேலம்பாளை யம் காவல் நிலையம் மற்றும் வடக்கு மகளிர் காவல் நிலைய காவலர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.

    • விருதானது தலா ரூ.20000, ரூ.10000 மற்றும் ரூ.5000 தகுதியுடையோர்க்கு வழங்கப்படுகிறது.
    • உடல் மற்றும் மனவலிமையை பாராட்டும் வகையில் வழங்கப்படுகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    கபீர் புரஸ்கர் விருது ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதலமைச்சரால் குடியரசு தினவிழாவின் போது வழங்கப்படுகிறது. இவ்விருதானது தலா ரூ.20000, ரூ.10000 மற்றும் ரூ.5000 தகுதியுடையோர்க்கு வழங்கப்படுகிறது.

    சமுதாய நல்லிணக்க செயல் ஆற்றும் அரசுப் பணியாளர்கள் சமுதாய நல்லிணக்க செயல் ஆற்றும் பணியின் ஒரு பகுதியாக நிகழும் பட்சத்தில் இப்பதக்கத்தைப் பெறத் தகுதியுடையவராவர்.

    மேலும், இவ்விருதானது ஒரு சாதி, இனம், வகுப்பைச் சார்ந்தவர்கள், பிற சாதி, இனம், வகுப்பைச் சார்ந்தவர்கள் பிற சாதி இன வகுப்பைச் சார்ந்தவர்களையோ அல்லது அவர்களது உடைமைகளையோ வகுப்புக் கலவரத்தின் போதோ அல்லது தொடரும் வன்முறையிலோ காப்பாற்றியது வெளிப்படையாகத் தெரிவிக்கையில் அவரது உடல் மற்றும் மனவலிமையைப் பாராட்டும் வகையில் வழங்கப்படுகிறது.

    மேற்காணும் விருதிற்கான விண்ணப்பம் மற்றும் முக்கிய விவரங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதள முகவரியான www://awards.tn.gov.in மற்றும் www.sdat.tn.gov.in மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    இதற்கான கடைசி தேதி 14.12.2022 ஆகும்.

    மேலும், மேற்கண்ட விருது தொடர்பாக இதர விபரங்களை அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணிக்குள் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரிலோ, அல்லது தொலைபேசி வாயிலாகவோ ( தொலைபேசி எண்: 04362-235633) விபரம் பெற்றுக்கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×