search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதகு"

    • 4 வழிப்பாதையின் சாலையோரம் இருந்த வாய்க்கால் மதகு கட்டையில் மோதி பஸ் கவிழ்ந்தது.
    • காயமடைந்தவர்களை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த திருப்பனந்தாள் அருகே சோழபுரம் அடுத்த கோவிலாச்சேரி பகுதியில் சென்னை மார்க்கத்தில் இருந்து அரசு பேருந்து கும்பகோணம் நோக்கி இன்று விடியற்காலை வந்து கொண்டு இருந்தது.

    பஸ்சில் ஏராளமான பயணிகள் இருந்தனர். பஸ்சை டிரைவர் கர்ணா மூர்த்தி ஓட்டி வந்தார்.

    நடத்துனராக கார்த்திகேயன் இருந்தார்.

    அப்போது கோவிலா ச்சேரி பகுதியில் பஸ் திடீரென டிரைவரின் கட்டுபாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.

    இதனால் பஸ்சில் தூக்க கலக்கத்தில் இருந்த பயணிகள் கண்விழித்து அச்சத்தில் அலறினர்.

    இந்நிலையில் கட்டுப்பாட்டை இழந்த பஸ் 4 வழிப் பாதையின் சாலையோரம் இருந்த வாய்க்கால் மதகு கட்டையில் மோதி கவிழ்ந்தது.இதில் டிரைவர் கர்ணா மூர்த்தி,நடத்துனர் கார்த்திகேயன் மற்றும் பஸ்சில் பயணித்த ரமேஷ், கீர்த்திகா, விஜயலட்சுமி, சந்திரசேகர், தமிழ்செல்வி என 3 பெண்கள் உட்பட 18-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.

    தகவலறிந்த சோழபுரம் போலீசார் விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து சோழபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணைநடத்தி வருகின்றனர்.

    விடியற்கா லையில் அரசு பஸ் விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×