search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மசாலா குழிப்பணியாரம்"

    • வீட்டில் உள்ள அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
    • வெல்லம் சேர்த்து அதிகமானோர் குழி பணியாரம் செய்வார்கள்.

    குளிர்காலம், மழைக்காலம் போன்ற காலங்களில் மாலை நேரங்களில் காபி, டீயுடன் சூடாக ஒரு ஸ்னாக்ஸ் செய்து கொடுத்தால் வீட்டில் உள்ள அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த வகையில் இன்று நாம் சூப்பரான ஒரு மாலைநேர சிற்றுண்டி ரெசிபியை தான் காண உள்ளோம். வெல்லம் சேர்த்து அதிகமானோர் குழி பணியாரம் செய்வார்கள். ஆனால் இன்று நாம் காரசாரமான குழி பணியாரத்தை எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்

    தேவையான பொருட்கள்:

    இட்லி மாவு - 1 கப்

    வெங்காயம்- 1 (பொடிதாக நறுக்கியது)

    கேரட்- 1 (துருவியது)

    கொத்தமல்லித்தழை- 1 (பொடிதாக நறுக்கியது)

    பச்சை மிளகாய்- 1 டீஸ்பூன் (பொடிதாக நறுக்கியது)

    கறிவேப்பிலை- 1 டீஸ்பூன் (பொடிதாக நறுக்கியது)

    கடலைப்பருப்பு- 1 டீஸ்பூன்

    உளுந்து - 1 டீஸ்பூன்

    உப்பு- தேவையான அளவு

    எண்ணெய் - தேவையான அளவு

    கடுகு- 1 டீஸ்பூன்

    சீரகம் - 1 டீஸ்பூன்

    பெருங்காயப்பொடி- 1 டீஸ்பூன்

    மஞ்சள்தூள்- டீஸ்பூன்

    செய்முறை:

    அடுப்பில் வாணலியை வைத்து சூடானதும் 4 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும். பின்னர் அதில் கடுகு, உளுந்தப்பருப்பு, சீரகம், கடலைப்பருப்பு ஆகியவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு தாளிக்க வேண்டும். அதன்பிறகு அதில் கறிவேப்பிலை, நறுக்கிய பச்சைமிளகாய், வெங்காயம் போன்றவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு வதக்க வேண்டும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் கேரட் துருவல், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை ஆகியவற்றை சேர்த்து கிளற வேண்டும். பின்னர் மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து கிளறி இறக்க வேண்டும். இந்த கலவை ஆறியதும் இட்லி மாவுடன் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.

    அடுப்பில் குழிப்பணியாரக் கல்லை வைத்து சூடானதும். அதன் ஒவ்வொரு குழியிலும் ஒரு டீஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்ற வேண்டும். ஒவ்வொரு குழியிலும் முக்கால் அளவுக்கு மாவை ஊற்றி. இரண்டு பக்கமும் பொன்னிறமாக வேகவைத்து திருப்பி போட்டு எடுக்க வேண்டும். இப்போது சுவையான "மசாலா குழிப்பணியாரம் தயார். இதை காரசட்னி, புதினா சட்னியுடன் சேர்த்து சுவைக்கலாம்.

    ×