search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மங்கலம்"

    மங்கலம் ஊராட்சி சாலைகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகளின் இருபுறமும் வளர்ந்துள்ள முட்புதர்களை அகற்றுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    மங்கலம்:

    திருப்பூர் மாவட்டம் மங்கலம் ஊராட்சியில் சமூக தணிக்கை தொடர்பான சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில் (2020-2021) நிதி ஆண்டில் மங்கலம் ஊராட்சியில் நடைபெற்ற பணிகளின் தொடர்பாக இந்த சமூக தணிக்கை கிராமசபை கூட்டம் நடைபெற்றது.  

    கூட்டத்திற்கு மங்கலம் பகுதியை சேர்ந்த எபிசியண்ட் டி.சுப்பிரமணி தலைமை தாங்கினார். மங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி முன்னிலை வகித்தார். 

    இதில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நவமணி, சமூக தணிக்கை அலுவலர் ராஜேஸ்வரி, மங்கலம் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ரேவதிமுருகன், ராஜாபரமேஸ்வரன், மங்கலம் ஊராட்சி செயலாளர் ரமேஷ் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர் .

    கூட்டத்தில் மங்கலம் ஊராட்சி சாலைகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகளின் இருபுறமும் வளர்ந்துள்ள முட்புதர்களை அகற்றுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    மேலும் கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தில் தற்போது வழங்கப்படும் 100 நாட்களை 150 நாட்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை மனு வழங்கினர். பின்னர் இந்த மனு தொடர்பாக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    தரைப்பாலத்தின் கீழ் அடைப்பு ஏற்பட்டு நொய்யல் நீர் தரைப்பாலத்திற்கு மேல் சென்றது.
    மங்கலம்:

    திருப்பூர் மாவட்டம் மங்கலம் ஊராட்சி அக்ரஹாரப்புத்தூர் பகுதியில் இருந்து வடுகன்காளிபாளையம் செல்லும் வழியில் நொய்யல் ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் உள்ளது. தற்போது நொய்யலில் வெள்ளம் சென்று கொண்டிருக்கிறது.

    இந்தநிலையில் நொய்யலில் அடித்து வரப்படும் செடி கொடிகள், ஆகாயத்தாமரைகள், முட்செடிகள், போன்றவையால் தரைப்பாலத்தின் கீழ் அடைப்பு ஏற்பட்டு நொய்யல் நீர் தரைப்பாலத்திற்கு மேல் சென்றது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர். 

    இதுகுறித்து அக்ரஹாரப்புத்தூர் பகுதி பொதுமக்கள் மங்கலம் ஊராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார். பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் தரைப்பாலத்தின் அடிப்பகுதியில் சிக்கி இருந்த ஆகாயத்தாமரை, செடி கொடிகள், முட்செடிகள் போன்றவை அகற்றப்பட்டது.
    புதிதாக அமையவுள்ள டாஸ்மாக்கடை அருகே ஏராளமான குடும்பங்கள் உள்ளது.
    மங்கலம்:

    திருப்பூர் ஒன்றியம் இடுவாய் கிராம மக்கள் இன்று மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். 

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

    திருப்பூர் மாவட்டம், இடுவாய் ஊராட்சிக்குட்பட்ட பகுதியான சின்னக்காளிபாளையம் அருகே புதிய டாஸ்மாக் கடை திறக்க உள்ளதாக எங்கள் கவனத்திற்கு வந்தது. மதுவாசனை இல்லாத கிராமமாக மாற்ற வேண்டும் என இடுவாய் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இந்த நிலையில் இடுவாய் ஊராட்சி - சின்னக்காளிபாளையம் அருகே புதிய டாஸ்மாக்கடை திறக்கப்பட்டால் பெண்கள் மற்றும் குழந்தைகள் சமூகவிரோதிகளால் பாதிக்கப்படுவர். பல இன்னல்கள் ஏற்படும் என அஞ்சுகின்றனர். மேலும் புதிதாக அமையவுள்ள டாஸ்மாக்கடை அருகே ஏராளமான குடும்பங்கள் உள்ளது.

    ஆகவே எங்கள் கிராமத்தில் மதுக்கடை அமைக்கக்கூடாது. இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு வழங்கும்போது இடுவாய் அருகே உள்ள 63 வேலம்பாளையம், அறிவொளிநகர் பகுதி கிராம மக்களும் உடனிருந்தனர்.
    மாணவி சுவேதா நீட் தேர்வில் 720 மதிப்பெண்ணுக்கு 618 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி அடைந்தார்.
    மங்கலம்:

    மங்கலம் ஊராட்சி எம்.செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த சண்முகம், மல்லீஸ்வரி ஆகியோரின் மகள் சுவேதா. இவர் பிளஸ்-2 முடித்துவிட்டு டாக்டர் ஆக வேண்டும் என்ற கனவோடு நீட் தேர்வுக்கு படித்து வந்தார். 

    இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 12-ந் தேதி நீட்தேர்வு எழுதினார். தற்போது தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மங்கலம் ஊராட்சி எம்.செட்டிபாளையம் பகுதியை சேர்ந்த மாணவி சுவேதா நீட் தேர்வில் 720 மதிப்பெண்ணுக்கு 618 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி அடைந்தார்.

    இந்த நிலையில் நீட் தேர்வில் சாதனை படைத்த மாணவிக்கு எம்.செட்டிபாளையம் பகுதியை சேர்ந்த ஜெயம் என்.மகேந்திரகுமார், பண்ணையார் லோகநாதன், சரவணக்குமார், சுந்தரேசன், ராமசாமி, வெற்றிஅரவிந்த், ஸ்ரீதர் மற்றும் பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
    விரைவாக வளர்ந்து வரும் நகரத்தின் தேவைக்கேற்ப கல்லூரியை விரிவுபடுத்த இன்னும் நிலம் தேவைப்படும்.
    மங்கலம்:

    திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி நிலத்தை மாற்றுப்பணிக்கு பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என்று திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி முன்னாள் மாணவர் பேரவையின்  தலைவரும்,மங்கலம் காங்கிரஸ் கமிட்டி தலைவருமான சபாதுரை- தமிழக முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளார். 

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூர் சிக்கண்ணா கல்லூரியில் 1989 மற்றும் 1990-ஆம் ஆண்டுகளில் மாணவர் பேரவைத் தலைவராக தேர்வு பெற்று பணியாற்றினேன். 

    அதனைத்தொடர்ந்து தலைவராக செல்வம், செயலாளராக சின்னச்சாமி, பொருளாளராக லோகநாதன் ஆகியோர் தலைமையில்  முன்னாள் மாணவர்கள் சங்கம் அமைக்கப்பட்டது.  

    மேலும் சிக்கண்ணா கல்லூரிக்கு தேவையான வளர்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகிறோம். சிக்கண்ணா செட்டியார் என்ற கொடைவள்ளல் 1960-ம் ஆண்டு கல்விப்பணிக்காக வழங்கிய 40 ஏக்கர் நிலத்தில் 4 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டிவிட்டார்கள். 

    மீதி இருந்த 36 ஏக்கர் நிலத்திற்கு முன்னாள் மாணவர்கள் சங்கம் மூலம் ரூ.1 கோடி மதிப்பில் சுற்றுச்சுவர் அமைத்துத்தரப்பட்டது. பின்னர் 36 ஏக்கரில் 5 ஏக்கர் ஏற்கனவே விளையாட்டு உள்அரங்கம் அமைக்க கையகப்படுத்திவிட்டனர்.

    தற்போது 29 ஏக்கர் நிலம் மட்டுமே மீதி உள்ளது. அதில் கல்லூரி கட்டிடம் 15 ஏக்கரிலும்,8 ஏக்கரில் விளையாட்டு மைதானமும், 6 ஏக்கரில் டாக்டர் அப்துல்கலாம் நினைவு தாவரவியல் பூங்காவும் உள்ளது.

    தற்போது உள்விளையாட்டு அரங்கம் அமைக்க 12 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து அந்த இடத்தில் இருந்த 300-க்கும் மேற்பட்ட மரங்களை வெட்டியும்,உள்விளையாட்டு அரங்கம் அமைக்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது.

    விரைவாக வளர்ந்து வரும் நகரத்தின் தேவைக்கேற்ப கல்லூரியை விரிவுபடுத்த இன்னும் நிலம் தேவைப்படும் சூழலில், இருக்கும் இடத்தை எடுப்பதோடு, அங்கு ஓங்கி வளர்ந்து நிற்கும் 300-க்கும் மேற்பட்ட மரங்களை வெட்டி இயற்கைக்கு எதிராக நடைபெறும் இந்த நடவடிக்கையை தமிழக முதல்வர் பரிசீலித்து தடுத்து நிறுத்த வேண்டுகிறோம். 

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 
    பிளஸ்-2 முடித்துவிட்டு டாக்டர் ஆக வேண்டும் என்ற கனவோடு நீட் தேர்வுக்கு கடுமையாக படித்து வந்தார் சுவேதா.
    மங்கலம்

    பிளஸ்-2 முடித்துவிட்டு டாக்டர் ஆக வேண்டும் என்ற கனவோடு நீட் தேர்வுக்கு கடுமையாக படித்து வந்தார் சுவேதா.

    திருப்பூர் மாவட்டம் திருப்பூர் ஒன்றியம்எம்.செட்டிபாளையம் பகுதியைச்சேர்ந்தவர் சண்முகம்( வயது 55). இவரது மனைவி மல்லீஸ்வரி(45).இவரது மகள் சுவேதா(20). இவர் திருப்பூர் ரோட்டில் உள்ள லிட்டில் பிளவர் தனியார் பள்ளியில் நடந்த 2018-2019-ம் கல்வியாண்டில் பிளஸ்-2 முடித்துவிட்டு டாக்டர் ஆக வேண்டும் என்ற கனவோடு நீட் தேர்வுக்கு கடுமையாக படித்து வந்தார்.இந்தநிலையில் கடந்த செப்டம்பர் 12-ந்தேதி நீட் தேர்வு எழுதினார். 

    தற்போது தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் சுவேதா 720 மதிப்பெண்ணுக்கு 618 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி அடைந்தார்.மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்றதன் மூலம் சுவேதா-வின் டாக்டர் கனவு நனவாகியுள்ளது.
    ×