search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மக்கள் வழிபாடு"

    • மாட்டுப் பொங்கலை முன்னிட்டு வீடுகளில் அசைவம் சமைத்து சாமிக்கு படையல் இடுவர்.
    • வீடுகளில் உள்ள மாடுகளை தங்கள் பிள்ளைகள் போல் கருதி வளர்த்து அதன் மூலம் வருவாயும் ஈட்டி வருகின்றனர்.

    கடலூர்: 

    தை மாதம் 1-ந் பொங்கல் பண்டிகை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நேற்று பொங்கல் விழாவை குடும்பத்துடன் கோலாக லமாக கொண்டாடி னார்கள். இதனை யொட்டி பொதுமக்கள் அனைவரும் புத்தாடை அணிந்து வீட்டில் புதிய பொங்கல் பானைகளை வைத்து பொங்கல் விழாவை குடும்பத்துடன் ஆனந்தமாக கொண்டாடினார்கள். மேலும் பொது மக்கள் தங்கள் குடும்பத்துடன் கோவில்களுக்கு சென்று பயபக்தியுடன் சாமி கும்பிட்டு வந்ததையும் காணமுடிந்தது.

    இன்று மாட்டுப் பொங்கலை முன்னிட்டு வீடுகளில் அசைவம் சமைத்து சாமிக்கு படையல் இட்டு குடும்பத்துடன் ஒன்றாக அமர்ந்து கொண்டாடுவார்கள். இதனை தொடர்ந்து கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கிராமங்கள் தோறும் உள்ள வீடுகளில் மாடுகள் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்து வருகின்றது. மேலும் வீடுகளில் உள்ள மாடுகளை தங்கள் பிள்ளைகள் போல் கருதி வளர்த்து அதன் மூலம் வருவாயும் ஈட்டி வருகின்றனர்.

    இன்று மாட்டுப் பொங்கல் முன்னிட்டு வீடுகளில் உள்ள மாடுகளை காலையில் குளிப்பாட்டி கொம்புகளை தீட்டி புதிய பல்வேறு வண்ணங்களை பூசி மகிழ்வார்கள். பின்னர் மாடுகள் மீது மஞ்சள் குங்குமம் ஆகியவற்றை பூசி வீடுகளில் வணங்கி மகிழ்ந்தனர். மேலும் இன்று மாலை வீடுகளில் உள்ள மாடுகளை வண்டிகளில் கட்டி கொம்புக்களில் பலூன், வண்ணக் காகிதங்கள் போன்றவற்றால் அலங்கரித்து ஊர்வலமாக அந்த பகுதி சேர்ந்த பொதுமக்கள் சிறுவர்கள் சிறுமிகளை ஏற்றிக் கொண்டு ஆரவாரமாக கத்திக்கொண்டு கோவி லுக்கு சென்று தெருக்களில் ஆரவாரத்துடன் மாட்டுப்பொங்கல் விழாவை கொண்டாடினர். மேலும் கடலூர் திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவில் கடலூர் பாடலீஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் உள்ள மாடுகளை காலை முதல் ஊழியர்கள் குளிப்பாட்டி சுத்தம் செய்தனர் .பின்னர்கொம்புகளுக்கு வர்ணம் பூசி பலூன்கள் கட்டி சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. பின்னர் கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் கோமாதா என்று அழைக்க கூடிய மாடுகளை வணங்கி அவர்களுக்கு தேவையான உணவுகளை வழங்கி ஆனந்தமாக கொண்டாட உள்ளனர்.

    ×