search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மக்கள் கடும் அவதி"

    • அதிகபட்சமாக 107 டிகிரி வரை ஈரோடு மாவட்டத்தில் வெயில் பதிவானது.
    • வெளியே செல்லாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.

    ஈரோடு, 

    தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் வெயில் முடிந்தாலும் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்து வருகிறது. குறிப்பாக ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் பதிவாகி வருகிறது.

    மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் வெயில் தொடங்கு வதற்கு முன்பே வெயிலின் தாக்கம் சுட்டெரித்தது. அதிகபட்சமாக 107 டிகிரி வரை ஈரோடு மாவட்டத்தில் வெயில் பதிவானது. இதனால் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

    இந்நிலையில் அக்னி நட்சத்திரம் வெயில் நிறை வடைந்ததால் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் குறையும் என்று எதிர்பார்த்து காத்திருந்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. முன்பை விட வெயிலின் தாக்கம் அதிகமாகவே பதிவாகி வருகிறது.

    நேற்று மாவட்டத்தில் அதிகபட்சமாக 102 டிகிரி வெயில் சுட்டெரித்தது. இதனால் மக்கள் பகல் நேரங்களில் வெளியே செல்லாமல் வீட்டுக்கு ள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.

    முக்கிய சாலைகள் மதிய நேரம் வெறிச்சோடி காணப்படுகிறது. காலை 8 மணிக்கு தொடங்கும் வெயிலின் தாக்கம் மாலை 6 மணி வரை நீடிக்கிறது.

    குறிப்பாக காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வெயிலின் தாக்கம் உச்சத்தில் உள்ளது. இந்த நேரத்தில் வெளியே செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். அனல் காற்று, புழுக்கத்தால் வீட்டில் உள்ள குழந்தைகள், முதியவர்கள் அவதி வருகின்றனர்.

    வீட்டில் 24 மணி நேரமும் மின்விசிறி தொடர்ந்து இயங்கினாலும் புழுக்கத்தால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். முடிந்தவரை காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வெளியில் செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறு த்தியுள்ளனர். குறிப்பாக முதியவர்கள், கர்ப்பிணிகள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.

    வெயில் தாக்கத்தின் போது வெளியே செல்வ தால் உடலில் நீர் சத்து குறைந்து மயக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இன்று காலை முதலே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிக அளவில் இருந்து வருகிறது.

    இந்நிலையில் நாளை மறுநாள் பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே வெயிலின் தாக்கம் காரணமாக 1 - ந் தேதிக்கு பதிலாக 7-ந் தேதிக்கு பள்ளி திறப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

    எனினும் தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் இயல்பை விட அதிகமாக பதிவாகி வருவதால் பள்ளி திறப்பை மேலும் தள்ளி போட வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • கோடை காலம் தொடங்கும் முன்பே அனல் காற்று வீசி வருகிறது.
    • வெயிலின் தாக்கம் காரணமாக பழங்கள் விற்பனையும் அதிகரித்துள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கோடை காலம் தொடங்கும் முன்பே அனல் காற்று வீசி வருகிறது. குறிப்பாக காலை 8 மணிக்கே வெயிலின் தாக்கம் அதிகளவில் உள்ளது.

    நேரம் செல்ல, செல்ல அதிகளவில் அனல் காற்று வீசிவருகிறது. மேலும் பகல் நேரங்களில் பஸ்களில் மக்கள் கூட்டம் குறைந்து விட்டது. சாலைகளில் இருசக்கர வாகனங்களில் செல்வோரின் எண்ணிக்கை–யும் குறைந்து–விட்டது.

    அதோடு இல்லாமல் வீடுகளில் எந்தநேரமும் புழுக்கமாக இருப்பதால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டத்தின் பல்ேவறு இடங்களில் மாலை நேரங்களில் கோடை மழை பெய்தாலும் இரவில் மட்டுமே குளிர்ந்த காற்று வீசுகிறது.பின்னர் மீண்டும் காலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.

    கோடை காலம் தொடங்கும் முன்பே ஈரோட்டில் அனல் காற்று வீசி வருவதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    வெயிலின் தாக்கம் காரணமாக பல்வேறு இடங்களில் சாலை ஓரங்களில் பழங்கள் விற்பனையும் அதிகரித்துள்ளது. பொதுமக்களும் வெப்பத்தை தணிக்க பழங்களை அதிகளவில் வாங்கி செல்கின்றனர்.

    வெயிலின் காரணமாக பழங்களின் விலையும் உயர்ந்துள்ளது. பொது–மக்கள் தர்பூசணி, இளநீர், சாத்துக்குடி, ஆரஞ்சு, திராட்சை, மாதுளை, சப்போட்டா உள்ளிட்ட பழங்களை அதிகளவில் வாங்கி செல்கின்றனர்.

    அதோடு இல்லாமல் நுங்கு விற்பனையும் களை கட்டியுள்ளது. இது போக கம்பங்கஞ்சி, தயிர், மோர், விற்பனையும் அதிகரித்துள்ளது.

    வெப்பத்தின் பிடியில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் அதிகளவில் குளிர்ச்சியான பொருட்களை வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். 

    ×